தமிழ்நாட்டில் மீண்டும் ஊரடங்கா? - சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் விளக்கம்
தமிழ்நாட்டில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்பது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம்.
வடஇந்தியாவில் மீண்டு கொரோனா தொற்று அதிகரித்து வரும் நிலையில், தமிழ்நாடு உள்ளிட்ட பிற தென்னிந்திய மாநிலங்களில் கொரோனா கட்டுப்பாடுகள் கடைப்பிடிக்க தொடங்கியுள்ளன.
தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாக கொரோனா தொற்று மெல்ல மெல்ல அதிகரித்து வருகிறது. சென்னை ஐஐடியில் படிக்கும் மாணவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியானதால், அங்கு பாதிப்பு தினமும் அதிகரித்து வருகிறது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்று சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, தமிழ்நாட்டில் மீண்டும் ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்பது போன்ற வதந்திகளை நம்ப வேண்டாம் என்றும், தேவையற்ற வதந்திகளோ, அச்சுறுத்தலோ ஏற்படுத்த வேண்டிய நேரமில்லை என்றும், பொதுமக்கள் அனைவரும் முகக் கவசம் அணிய வேண்டும், தடுப்பூசி செலுத்திக்கொள்ள வேண்டும் எனவும் கூறினார்.
#BREAKING | தமிழ்நாட்டில் மீண்டும் ஊரடங்கிற்கு வாய்ப்பில்லைhttps://t.co/wupaoCQKa2 | #TNCorona #coronavirus #TNLockdown #Chennai pic.twitter.com/Wz96jUgUwn
— ABP Nadu (@abpnadu) April 26, 2022
சென்னை ஐஐடியில் மொத்தம் 111 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏற்கெனவே 60 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் தற்போது மேலும் 18 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளது. முன்னதாக, ஐஐடியில் முதலில் 30 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டது. பின்னர் 25 பேருக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டது. அதன்பின்னர் 6 பேருக்கு பாசிட்டிவ் என அறிவிக்கப்பட்டது. நேற்று 18 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மேலும் 32 பேருக்கு கொரோனா பாசிட்டிவ் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் மொத்தமாக 111 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக தமிழக அரசு தெரிவித்துள்ளது. இருவர் குணமடைந்த நிலையில் 109 பேர் சிகிச்சையில் உள்ளனர்.
முன்னதாக, இது குறித்து தெரிவித்த சுகாதாரத்துறை செயலர், ''ஐஐடியில் கொரோனா பாதித்த அனைவருக்கும் லேசான அறிகுறிகள் உள்ளன. ஒரு சிலருக்கே காய்ச்சல் உள்ளது. மொத்தமாக 1420 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது என்று கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )