மேலும் அறிய

Crime : செம்மரக்கட்டைகளை கடத்திய வேலூர் கலால்துறை டிஎஸ்பி தங்கவேலு நிரந்தர பணிநீக்கம்

செம்மரங்களை கடத்திய வேலூர் கலால் துறை டிஎஸ்பி தங்கவேலு நிரந்தர பணியிடம் நீக்கம் செய்த டிஜிபி சங்கர் ஜிவால்

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பாலூர் பகுதியைச் சேர்ந்தவர் பாமக பிரமுகரான சின்னபையன் இவர் கடந்த 2015-ம் ஆண்டு மே மாதம் சந்தன மரக்கடத்தல் கும்பலால் கொலை செய்யப்பட்டார். இக்கொலைச் சம்பவம் தொடர்பாக ஆம்பூர் கிராமிய காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்தபோது வேலூர் மாவட்ட கலால் பிரிவு துணை காவல் கண்காணிப்பாளராக இருந்த தங்கவேலு, சின்னபையனுக்கு சொந்தமான கோழி பண்ணையில் இருந்த 7 டன் செம்மரக் கட்டைகளை கடத்திச் சென்றது விசாரணையில் தெரியவந்ததுள்ளது.

மேலும் அந்த செம்மரக் கட்டைகளின் உரிமையாளர் செம்மரக் கட்டைகளை தேடி வந்தபோது காவல் துறையினர் பறிமுதல் செய்து எடுத்து சென்றதை சின்னப்பையன் கூறியுள்ளார். 

Crime : செம்மரக்கட்டைகளை  கடத்திய  வேலூர் கலால்துறை டிஎஸ்பி  தங்கவேலு நிரந்தர பணிநீக்கம்

செம்மரக் கடத்தல் வழக்கில் ஆறு பேர் கைது

அதை நம்பாத கடத்தல் கும்பல் சின்னபையனை கடத்திச் சென்று சரமாரியாக தாக்கி கொலை செய்துள்ளனர். மேலும் இந்த கொலை தொடர்பாக திருவண்ணாமலை மாவட்டம் போளூரைச் சேர்ந்த பெருமாள், தங்கராஜ், சத்தியமூர்த்தி, வெங்கடேசன் ஆகிய 4 பேர் கைது செய்யப்பட்டனர். மேலும் இதுதொடர்பாக காவல்துறையினர் தொடர் விசாரணையில், தங்கவேலுவின் உதவியுடன் சின்னபையனின் கோழி பண்ணையில் இருந்து 7 டன் செம்மரங்களை கடத்தி சென்றதாக வேலூர் அலமேலுமங்காபுரத்தைச் சேர்ந்த நாகேந்திரன் அவரது மனைவி ஜோதிலட்சுமி மற்றும் காஞ்சிபுரத்தைச் சேர்ந்த லாரி உரிமையாளர் உள்ளிட்ட 6 பேரை காவல் துறையினர் கைது செய்தனர்.

மேலும், சின்னபையனின் கோழி பண்ணையில் எடுத்துச்சென்ற 7 டன் செம்மரக் கட்டைகளில் 3.5 டன் அளவுக்கு நாகேந்திரன் வீட்டில் இருந்து காவல்துறையினர் பறிமுதல் செய்து அவரிடம் இருந்து ரூ.32 லட்சம் பணம் மற்றும் 3 கார்களையும் பறிமுதல் செய்தனர். 

Crime : செம்மரக்கட்டைகளை  கடத்திய  வேலூர் கலால்துறை டிஎஸ்பி  தங்கவேலு நிரந்தர பணிநீக்கம்

செம்மர கடத்தல் வழக்கில் தொடர்புடைய டிஎஸ்பி தங்கவேலுவை பணியிடை நீக்கம் 

மேலும் வேலூர் கலால் துணை காவல் கண்காணிப்பாளர் தங்கவேலு கூறியதின் பேரில் நாங்கள் சின்னபையனின் கோழி பண்ணையில் இருந்து செம்மரக்கட்டைகளை கடத்திச் சென்று அனைவரும் பங்கிட்டுக்கொண்டதாக நாகேந்திரன் தம்பதியினர் காவல்துறையினரிடம் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதையடுத்து, தங்கவேலுவை கைது செய்த காவல் துறையினர் அவரை வழக்கின் மூன்றாவது குற்றவாளியாக சேர்த்தனர். பி்ன்னர், தங்கவேலு சஸ்பெண்ட் செய்யப்பட்டார். இது தொடர்பாக வழக்கின் விசாரணை ஆம்பூர் நீதிமன்றத்தில் நடந்து வரும் நிலையில், தற்போது செம்மர கடத்தல் வழக்கில் தொடர்புடைய தங்கவேலுவை பணியில் இருந்து நிரந்தரமாக நீக்கம் செய்து டிஜிபி சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

Crime : செம்மரக்கட்டைகளை  கடத்திய  வேலூர் கலால்துறை டிஎஸ்பி  தங்கவேலு நிரந்தர பணிநீக்கம்

கண்ணமங்கலம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் கார்த்தி பணியிடை நீக்கம் 

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கண்ணமங்கலம் காவல் நிலைய உதவி ஆய்வாளராக கார்த்தி என்பவர் பணியாற்ற வருகின்றார். மேலும் உதவி ஆய்வாளர் கார்த்தி மீது பல்வேறு புகார்கள் மாவட்ட நிர்வாகத்திற்கு வந்துள்ளன. இந்நிலையில் பல்வேறு சட்ட விரோத செயலுக்கு உடந்தையாக இருந்ததாக மாவட்ட கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு புகார் அளிக்கபட்டுள்ளன. புகாரை பெற்று விசாரணை செய்ததில் சட்ட விரோத செயலுக்கு உடந்தையாக செயல்பட்டது ஊர்ஜிதமானது. இதனால் திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பாளர் கார்த்தியை தற்காலிக பணியிட நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்தார். இச்சம்பவம் திருவண்ணாமலை மாவட்ட காவல்துறை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு  - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
"65 நாடுகளுக்கு ஏற்றுமதி.. சர்வதேச சந்தையில் தனித்துவம்" ஆச்சி குழும தலைவர் பத்மசிங் ஐசக் பேச்சு!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Trichy News | திமுக கொடியுடன் ஆடு திருடும் கும்பல்..தீவிரமாக தேடும் போலீஸ்VCK vs PMK  | Graph-ஐ உயர்த்திய திருமா! விசிக ரூட்டில் பாமக?அன்புமணி மாஸ்டர் பிளான்Shakthi Vasudevan | GP Muthu Fight | ரகளை செய்த GP முத்து..BEEP-ல் பூசாரியுடன் சண்டை..என்ன காரணம் தெரியுமா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு  - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
Tirupati Laddu: திருப்பதி லட்டில் மாட்டுக் கொழுப்பு - ஆய்வில் உறுதி..! பக்தர்கள் அதிர்ச்சி.!
"65 நாடுகளுக்கு ஏற்றுமதி.. சர்வதேச சந்தையில் தனித்துவம்" ஆச்சி குழும தலைவர் பத்மசிங் ஐசக் பேச்சு!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
சென்னையில் நான் தான் கிங்கு.. வங்கதேச பவுலர்களை கதறடித்த அஸ்வின்.. மிரட்டல் சதம்!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
7.5 % இட ஒதுக்கீட்டை அரசு உதவிபெறும் பள்ளிக்கும் ஏன் வழங்க கூடாது.? அரசு பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு.!
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க போறீங்களா..? - இத கட்டாயம் தெரிஞ்சிகோங்க
பாஸ்போர்ட் விண்ணப்பிக்க போறீங்களா..? - இத கட்டாயம் தெரிஞ்சிகோங்க
Group 4 Vacancy: குரூப் 4 தேர்வர்களுக்கு ஸ்வீட் நியூஸ்… காலியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு- அறிவிப்பு எப்போது?
Group 4 Vacancy: குரூப் 4 தேர்வர்களுக்கு ஸ்வீட் நியூஸ்… காலியிடங்களை அதிகரிக்க டிஎன்பிஎஸ்சி முடிவு- அறிவிப்பு எப்போது?
புதிய உருமாறிய கொரோனா.. மீண்டும் மிரட்ட வருகிறது.. மருத்துவர்கள் கூறுவது என்ன?
புதிய உருமாறிய கொரோனா.. மீண்டும் மிரட்ட வருகிறது.. மருத்துவர்கள் கூறுவது என்ன?
கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம்.! மத்திய அரசு திட்டம்.!
கன்னியாகுமரியில் அணுக் கனிம சுரங்கம்.! மத்திய அரசு திட்டம்.!
Embed widget