வீராணம் நிலக்கரி சுரங்க திட்டத்திற்கு அனுமதி மறுப்பு... அமைச்சர் தங்கம் தென்னரசு விளக்கம்...!
கடலூர் வீராணம் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட்டுள்ளது என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
கடலூர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலக்கரி திட்டத்திற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
கடலூர் வீராணம் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்தை அரசு கைவிட்டுள்ளது. நிலக்கரி சுரங்கம் அமையவிருந்த பகுதி காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட மண்டலத்தின்கீழ் வருவதால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.
மக்களின் எதிர்ப்புகள் காரணமாக ஆய்வுகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. 200 இடங்களில் மண் மற்றும் நீர் ஆய்வுகள் தொடங்கப்பட்டுள்ளன நிலையில் மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர் என்று தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
மத்திய அரசின் கீழ் இயங்கி வரும் பொதுத்துறை நிறுவனமான என்எல்சி கடலூர் மாவட்டத்தில் குறிஞ்சிப்பாடி நெய்வேலி புவனகிரி ஆகிய பகுதிகளை சுற்றியுள்ள 37 க்கும் மேற்பட்ட கிராமங்களில் என்எல்சி நிறுவனம் சுரங்க விரிவாக்க பணிகளுக்கு நிலங்களை கையகப்படுத்தி வருகிறது. இந்நிலையில் கடந்த முறை நிலம் கொடுத்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு, நிரந்தர வேலை வாய்ப்பு, வழங்கப்படாத நிலையில் இனி என்.எல்.சி-க்கு நிலம் தர மாட்டோம் என விவசாயிகள் மற்றும் பல்வேறு அரசியல் அமைப்புகள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வந்தனர். தொடர் போராட்டம் காரணமாக இந்த பணியில் சிக்கல் ஏற்பட்டது.
இந்நிலையில் இன்று சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் பேசிய, விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற உறுப்பினர் சிந்தனை செல்வன், கடலூர் மாவட்டத்தில் நிலம் தோண்டினால் மாவட்டம் முழுவதும் அழிந்து விடும் எனவும், என்.எல்.சி யும் அதன் விரிவாக்கம் மாவட்டத்திற்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்றும், இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
இதற்கு பதிலளித்து பேசிய தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, கடலூர் மாவட்டம், சேத்தியாத்தோப்பு வீராணம் மற்றும் பாளையங்கோட்டை நிலக்கரி திட்டம் மேற்கொள்ளப்பட்டதாகவும், பெரும் தாதுக்கள் நாட்டிலேயே எங்கு உள்ளது என்பது மத்திய அரசின் கொள்கை முடிவாக உள்ளதாகவும் கூறினார்.
மேலும், காவிரி டெல்டா பகுதி ஒரு பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக கூறிய அவர், இந்த நிலத்தை துளையிட்டு பரிசோதனை மேற்கொள்வது முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளதாகவும், பணியை மேற்கொள்ள தடையும் விதிக்கப்பட்டுள்ளது என்றும், விவசாய நிலங்களை ஒருபோதும் கையகப்படுத்த மாட்டோம் எனவும் தெரிவித்தார். இதனால் கடலூர் வீராணம் நிலக்கரி சுரங்கம் அமைக்கும் திட்டத்தை அரசு கைவிடப்பட்டுள்ளது என தெரியவந்துள்ளது.
Closing Bell:ஏற்றத்தில் முடிவடைந்த இந்திய பங்குச் சந்நை..லாபத்தில் அதானி போர்ட்ஸ், எஸ்.பி.ஐ...