Closing Bell:ஏற்றத்தில் முடிவடைந்த இந்திய பங்குச் சந்நை..லாபத்தில் அதானி போர்ட்ஸ், எஸ்.பி.ஐ...
Share Market Today: இந்திய பங்கு சந்தையானது இன்று ஏற்றத்துடன் முடிந்தது முதலீட்டாளர்களிடையே சற்று ஆறுதலை ஏற்படுத்தியது.
![Closing Bell:ஏற்றத்தில் முடிவடைந்த இந்திய பங்குச் சந்நை..லாபத்தில் அதானி போர்ட்ஸ், எஸ்.பி.ஐ... Share Market closed for today end street Session fall Sensex and nifty points 2023 March 29th Closing Bell:ஏற்றத்தில் முடிவடைந்த இந்திய பங்குச் சந்நை..லாபத்தில் அதானி போர்ட்ஸ், எஸ்.பி.ஐ...](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2023/03/29/f51747331d0f43e8eedf915a2e28fe331680085205179571_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
அமெரிக்காவின் சிலிக்கான் வேலி வங்கி திவால் உள்ளிட்ட வெளிநாட்டு காரணங்களாலும், சில உள்நாட்டு காரணங்களாலும் இந்திய பங்கு சந்தை பெரும் சரிவை சந்தித்து வந்த நிலையில், இன்றைய நாள் முடிவில் ஏற்றத்துடன் இருந்தது.
பங்கு சந்தை நிலவரம்:
மும்பை சந்தை குறியீடான சென்செக்ஸ் 346.37 புள்ளிகள் அதிகரித்து 57,960.09 புள்ளிகளாகவும், தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி 129 புள்ளிகள் அதிகரித்து 17,080.70 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகிறது.
பங்குச் சந்தைசிலிக்கான் வேலி வங்கி (எஸ்.வி.பி) ஃபர்ஸ்ட் சிட்டிசன்ஸ் பாங்க்ஷேர்ஸ் ஒப்பந்தத்திற்குப் பிறகு உயர்வு கிடைக்கும் என்ற அதிக எதிர்பார்ப்புகள் இருந்த வந்த நிலையில், இந்திய பங்குச் சந்தை இன்று ஏற்றத்தில் வர்த்தகமானது.
இன்றைய நாளில் தேசிய பங்கு சந்தை குறியீடான நிஃப்டி இன்று மிகவும் ஏற்ற இறக்கமான வர்த்தகமாகிக் கொண்டு இருந்த நிலையில், இறுதியில் பச்சை நிறத்தில் முடிந்தது.
நிஃப்டி-50ல் அதானி எண்டர்பிரைசர்ஸ், அதானி போர்ட்ஸ், அப்போலோ மருத்துவமனை, ஆக்சிஸ் வங்கி, பஜாஜ ஆட்டோ, பிரிட்டாணியா, கோல் இந்தியா, இன்ஃபோசிஸ், கோடாக் மகேந்திரா, லார்சன், மாருதி சுசுகி, நெஸ்ட்லே உள்ளிட்ட நிறுவனங்கள் ஏற்றத்தில் காணப்பட்டன.
ரிலையன்ஸ், ஐசிஐசிஐ வங்கி, யுபிஎல் உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் சரிவில் காணப்பட்டன.
உலகளாவிய வங்கி கொந்தளிப்பு குறித்த கவலைகள் தளர்த்தப்பட்டதாலும், அதானி குழும பங்குகள் மீண்டெழுந்ததாலும், புதன்கிழமை இந்திய பங்குகளில் ஏற்றம் கண்டது.
13 முக்கிய துறை சார்ந்த குறியீடுகளில் 12 பங்குகள் ஏற்றம் கண்டன. பஜாஜ் பைனான்ஸ், பஜாஜ் ஃபின்சர்வ், ஹெச்டிஎப்சி, ஹெச்டிஎப்சி வங்கி ஆகிய பங்குகள் ஏற்றத்தில் வர்த்தகமாயின.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)