Twitter Trending | கலகலப்பும், கலாயுமாக மாறிய ட்விட்டர்.. களமிறங்கிய முதலை, தேவாங்கு!
இன்று ட்விட்டரில் காலை முதல் #ஒன்றியஉயிரினங்கள் என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.
பொழுதுபோக்கு என தொடங்கப்பட்ட பேஸ்புக், ட்விட்டர் போன்ற சோஷியல் மீடியா பக்கங்கள் இன்று அரசியல் தளமாகவும், வருமானம் ஈட்டும் சந்தையாகவும் மாறியுள்ளது. வணிக ரீதியாக பயனாளர்களையும் பயன்படுத்திக்கொண்டு அடுத்தக்கட்ட நோக்கி பாய்கின்றன இந்த சோஷியல் மீடியாக்கள். உள்ளூர் அரசியல் முதல் உலக அரசியல் வரை சோஷியல் மீடியாக்களில் பேசப்படுகின்றன. ஒரு நாட்டின் அரசே சோஷியல் மீடியாக்களால் ஆட்டம் காண்பதும், சோஷியல் மீடியாக்கள் தேர்தலில் பெரும்பங்கு வகிப்பதும் நாம் கண்கூட காண்பதும் ஒன்றுதான். என்னதான் சீரியஸாக சோஷியல் மீடியா சென்றாலும் திடீரென ஒருநாள் கிண்டலும், கேலியுமாய் ட்ரெண்டிங்கில் இறங்கி விடுவார்கள் சோஷியல் மீடியா ஆட்கள்.
ஒருவர் விளையாட்டாக நேசமணி ட்வீட் போட வடிவேல் உலக அளவில் பேமஸ் ஆன கதையெல்லாம் நாம் கண்டதுதானே? இந்த நிலையில் இன்று ட்விட்டரில் விலங்குகள் ரகளை செய்து வருகின்றன. ஆமா. ஆடு, மாடு, யானை எல்லாம் ட்விட்டரில் அக்கவுண்ட் ஓபன் செய்து ட்வீட் செய்து வருகின்றன. என்னப்பா சொல்ற? என்றுதானே குழம்புகிறீர்கள். இன்று ட்விட்டரில் காலை முதல் #ஒன்றியஉயிரினங்கள் என்ற ஹேஸ்டேக் ட்ரெண்டாகி வருகிறது.
விலங்குகள் ட்வீட் செய்தால் எப்படி இருக்குமென யோசித்த நெட்டிசன்கள் அதில் ஒன்றியம் அரசியலையும் கலந்து ரகளை செய்து வருகிறார்கள். காட்டுக்கே ராஜா நான் தான். என் கொடி பறக்கும் இடத்தில் எவன் கொடி பறக்கும் என சிங்கம் கேட்பதும், உண்மையிலேயே ஆண்ட பரம்பரை நான் தான் என டினோசர் சொல்வதும், ஒரே கலாயாக சென்றுகொண்டிருக்கிறது ட்விட்டர்.
தடுப்பூசி போடுங்க மக்களே... முடிஞ்ச வரைக்கும் வீட்டுல இருங்க... முககவசம் யூஸ் பண்ணுங்க... அலட்சியமா இருக்காதீங்க.. ப்ளீஸ்
— டைனோசர் 🦖 (@DinosaurOffcial) June 8, 2021
நீங்களும் எங்க இனம் மாதிரி அழிஞ்சிடாதீங்க 🙏🙏#ஒன்றியஉயிரினங்கள்
குர் குர்ர்ர்...
— டைனோசர் 🦖 (@DinosaurOffcial) June 8, 2021
குர் குர்ர்ர்...
நாங்க விட்டு வச்ச எச்சம்தான
காடா மாறுச்சு..
நாடா மாறுச்சு...
கோமாதா மாடா மாறுச்சு...
குர் குர்ர்ர்...
குர் குர்ர்ர்...#ஒன்றியஉயிரினங்கள் pic.twitter.com/rWriCDY9Zq
மக்களே எங்களை போல் அழிந்து விடாதீர்கள் #ஒன்றியஉயிரினங்கள் https://t.co/EtCQ8jx5Vs
— மாமோத்🦣 (@mammoth0fficial) June 8, 2021
EXTINCT SPECIES, மற்றும் FANTASY SPECIES:
— கிங்காங் (@kingkongreturnz) June 6, 2021
எங்களுக்கு தனி ஒன்றியம்,
தனி நாடு, அதுல தனி காடு வேண்டும்..
இங்கே முட்டை போடுவோர், குட்டி போடுவோர், என்று அனைத்து இனங்களும் உள்ளன..
பொதுவான மொழி தமிழ்.
செல்போனுக்கு விளம்பரம் வந்து குவியுதா? இந்தாங்க சில டிப்ஸ்! உங்க செல்போன் இனி க்ளீன்!