கரூர்: தடுப்பு சுவரில் மோதி சுற்றுலா வேன் கவிழ்ந்து விபத்து: 15 பக்தர்கள் காயம்!
திருச்சியிலிருந்து வெள்ளகோவில் நோக்கி வந்த சுற்றுலா வேன் சாலையை கடக்க முயன்றபோது, இருசக்கர வாகனத்தில் வந்த இளைஞர் மீது மோதாமல் ஓட்டுனர் வேனை திருப்பிய போது தலைக்குப்புற கவிழ்ந்து விபத்து.
திருச்சி திருவானைக்காவல் பகுதியைச் சேர்ந்த 20 பக்தர்கள் திருப்பூர் மாவட்டத்திலுள்ள வெள்ளகோயில் உள்ள அவர்களுடைய குடிப்பாட்டு கோயில் திருவிழாவுக்கு நேற்று (16.04.2022) காலை ஒரு சுற்றுலா வேனில் புறப்பட்டு வந்து கொண்டிருந்தனர். சுற்றுலா வேன் திருச்சி -கரூர் தேசிய நெடுஞ்சாலையில் கரூர் அடுத்து வெங்கிக்கல் பட்டி பிரிவு பகுதியில் சென்று கொண்டிருந்தபோது சாலையின் குறுக்கே ஒருவர் மோட்டார் சைக்கிளில் கடக்க முயன்றுள்ளார். இதனால் சுற்றுலா வேன் மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் மீது மோதாமல் இருக்க டிரைவர் சாலையில் நடுவில் உள்ள தடுப்பு சுவரை நோக்கி திருப்பியுள்ளார். இதனால் கட்டுப்பாட்டை இழந்த சுற்றுலா வேன் தடுப்பு சுவரில் மோதி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.
இந்த சுற்றுலா வேனில் இடிபாடுகளில் சிக்கிய 15 பக்தர்கள் காயமடைந்து காப்பாற்றுங்கள், காப்பாற்றுங்கள் என சத்தம் போட்டனர். இதனை கண்ட அந்த வழியாக சென்ற பொதுமக்கள் தாந்தோன்றிமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவலின்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து பொதுமக்கள் உதவியுடன் காயமடைந்த பக்தர்களை மீட்டனர். சுற்றுலா வேனின் வந்து 15க்கும் மேற்பட்ட பக்தர்கள் ஓட்டுனர் உட்பட சிறு காயமுற்ற நிலையில் அனைவரையும் மீட்டு 5 ஆம்புலன்ஸ் மூலம் காந்திகிராமம் பகுதியில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் அறிந்த மாநகராட்சி மேயர் கவிதா கணேசன் மற்றும் அரசு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு நேரில் வந்து ஆய்வு செய்தனர். ஆய்வைத் தொடர்ந்து கரூர் காந்திகிராமம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் விபத்தில் காயமுற்ற அனைவரையும் சிகிச்சை பற்றி கேட்டறிந்தனர். கரூர் - திருச்சி தேசிய நெடுஞ்சாலை வெங்கட் கல்பட்டி அருகே மோட்டார் சைக்கிளில் சென்ற நபர் மீது மோதாமல் இருக்க சுற்றுலா வேன் ஓட்டுநர் தடுப்பு சுவர் மீது மோதிய சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
https://tamil.abplive.com/health/corona/corona-positive-0-discharge-0-death-0-in-karur-48559
சுற்றுலாவின் விபத்து குறித்து தாந்தோன்றிமலை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஆன்மீக சுற்றுலா சென்ற பக்தர்கள் கரூர் அருகே விபத்தில் சிக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.