மேலும் அறிய
Advertisement
Headlines Today : மாநிலங்களவை நியமன எம்.பியான இளையராஜா... பஞ்சாப் முதலமைச்சருக்குத் திருமணம்: இன்னும் பல...
Today Headlines : கடந்த 24 மணிநேரத்தில் நடைபெற்ற பல்வேறு முக்கிய நிகழ்வுகளை தலைப்புச்செய்திகளாக கீழே காணலாம்.
தமிழ்நாடு
- மாநிலங்களவை நியமன எம்.பியாக இசைஞானி இளையராஜா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.
- முன்னாள் தடகள வீராங்கனை பி.டி. உஷா, வீரேந்திர ஹெக்டே, பிரபல தெலுங்கு திரைப்பட இயக்குநர் ராஜமவுலியின் தந்தை விஜயேந்திர பிரசாத் ஆகியோரும் மாநிலங்களவை எம்பிக்களாக நியமனம்.
- இரட்டை இலை சின்னத்தை முடக்கக்கோரிய வழக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் இன்று விசாரணை
- ஈபிஎஸ் க்கு எதிரான நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்கு உச்ச நீதிமன்றம் இடைக்காலத் தடை.
- வரும் 11ஆம் தேதி நடைபெறும் அதிமுக பொதுக்குழு விவகாரத்தில் தலையிடவும் உச்ச நீதிமன்றம் மறுப்பு.
- அதிமுக பொதுக்குழுவுக்கு தடை விதிக்கக் கோரி ஓபிஎஸ் தொடர்ந்த வழக்கை உயர் நீதிமன்றம் ஒத்தி வைத்தது.
- எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமான செய்யாதுரை வீட்டில் வருமான வரித்துறையினர் 2ஆவது நாளாக விடிய விடிய சோதனை. முதலில் 10 இடங்களில் தொடங்கிய சோதனை தற்போது 45 இடங்களில் நீடித்து வருகிறது.
- பருவமழையின்போது சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் மழைநீர் தேங்காமல் இருக்க முயற்சிகள் தீவிரம்.
- தமிழ்நாட்டில் நேற்று ஒரே நாளில் 2,743 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது.
- தமிழ்நாட்டில் கோவை, நீலகிரியில் மிகக் கனமழைக்கு வாய்ப்பு
இந்தியா
- மத்திய சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வி ராஜினாமா.
- மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்காலம் ஜூலை இன்றுடம் நிறைவடையும் நிலையில் ராஜினாமா. குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்படுவார் என எதிர்பார்ப்பு.
- மத்திய உருக்குத் துறை அமைச்சர் ஆர்.பி.சிங்கும் ராஜினாமா
- பஞ்சாப் முதல்வா் பகவந்த் மான் (48) திருமணம் சண்டீகரில் இன்று நடைபெறவுள்ளது. மருத்துவரான குா்பிரீத் சிங்கை (32) அவா் திருமணம் செய்து கொள்ள உள்ளார்.
உலகம்
- உலகம் முழுவதும் 58 நாடுகளில் ஆறாயிரம் நபர்களுக்கு குரங்கம்மை நோய் பாதிப்பு.
- குரங்கம்மை ல்பரவல் குறுத்து அவசரக் குழுவுடன் ஆலோசனை நடத்த உலக சுகாதார மையம் திட்டம்
- ஆஸ்திரேலியாவில் பருவ மழை வெள்ளப்பெருக்கால் பல்லாயிரக்கணக்கானோர் பாதிப்பு.
- நியூ சவுத்வேல் பகுதியைச் சேர்ந்த 80ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்ல அறிவுறுத்தல்
விளையாட்டு
- இந்திய கிரிக்கெட் அணி முன்னாள் கேப்டன் மஹேந்திர சிங் தோனி இன்று பிறந்தநாள் கொண்டாடும் நிலையில், அவருக்கு பல்வேறு தரப்பினரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
- மேற்கிந்திய அணிக்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடருக்கான இந்திய அணி அறிவிப்பு. ஷிகார் தவான் கேப்டனாக அறிவிப்பு. ரோஹித் சர்மா, விராட் கோலி, பும்ராவுக்கு ஓய்வு.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
இந்தியா
தமிழ்நாடு
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion