மேலும் அறிய

Pongal Gift: பொங்கல் பரிசுத் தொகுப்பில் கரும்பு... டோக்கன் விநியோகம் எப்போது? - முதலமைச்சர் அதிரடி அறிவிப்பு

அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்களுக்கு ரூ.1000 பணத்துடன் கூடிய  ஒரு கிலோ பச்சரிசி ஒரு கிலோ சர்க்கரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

பொங்கல் பரிசு தொகுப்பில் முழுக் கரும்பும் இடம் பெறும் என்ற தமிழக அரசின் அறிவிப்பு பொதுமக்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

தமிழகத்தில் பொங்கல் பண்டிகை ஜனவரி 15 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. கடந்த அதிமுக ஆட்சியில் மக்களை கவரும் வண்ணம் அதிகப்பட்சமாக ரூ.2,500 பணத்துடன் கூடிய கரும்பு,பச்சரிசி உள்ளிட்ட பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்தாண்டு திமுக தலைமையிலான புதிய அரசு பொறுப்பேற்றதும் நடப்பாண்டு பொங்கலுக்கு பணம் எதுவும் வழங்கப்படாமல் முழு கரும்போடு சேர்த்து பச்சரிசி, வெல்லம், உள்ளிட்ட 21 பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு வழங்கப்பட்டது. 

பணம் கொடுக்காதது பொதுமக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்திய நிலையில், இதில் பல பொருட்கள் தரமில்லாததாக இருந்ததாக புகார் எழுந்தது. இதனால் பொங்கல் சிறப்பு தொகுப்பை விநியோகித்த சில நிறுவனங்கள் கருப்பு பட்டியலுக்குள் கொண்டுவர தமிழக அரசு உத்தரவிட்டது.

 
 
 
 
 
View this post on Instagram
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by ABP Nadu (@abpnadu)

 இந்நிலையில் 2023 பொங்கலுக்கு மக்களை மகிழ்ச்சிக்குள்ளாக்கும் வகையில், கடந்த சில தினங்களுக்கு முன் அறிவிப்பு ஒன்றை தமிழக அரசு வெளியிட்டது. அதன்படி 2023 ஆம் ஆண்டு பொங்கலுக்கு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 பரிசுத் தொகை அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிப்பவர்களுக்கு பணத்துடன் கூடிய  ஒரு கிலோ பச்சரிசி ஒரு கிலோ சர்க்கரை வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.  

ஆனால் பரிசுத் தொகுப்பில் கரும்பு இடம் பெறாதது மக்களிடையே கடும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியது. இதுதொடர்பாக விவசாயிகள், எதிர்கட்சியினர் போராட்டம் நடத்திய நிலையில், பொங்கல் பரிசு தொகுப்பில் முழுக்கரும்பு  இடம் பெறும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும்  2 கோடியே 19 லட்சம் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புக்கான டோக்கன் ஜனவரி 3 ஆம் தேதி முதல் ஜனவரி 8 ஆம் தேதி வரை வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அதேபோல் இந்த பொங்கல் பரிசுத் தொகுப்பு திட்டத்தை  ஜனவரி 2 ஆம் தேதி சென்னை தலைமை செயலகத்தில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைப்பார் என தெரிவிக்கப்பட்ட நிலையில், தற்போது ஜனவரி 9 ஆம் தேதிக்கு நிகழ்ச்சியானது மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 

 

லைவ் டிவி

ABP நாடு
ABP न्यूज़
ABP আনন্দ
ABP माझा
ABP અસ્મિતા
ABP Sਸਾਂਝਾ
POWERED BY
sponsor

தலைப்பு செய்திகள்

மதுரை தனிஷ்க் கொள்ளை: காதலியின் 'Money Heist' திட்டம், டாட்டூவால் சிக்கிய காதலன்!
மதுரை தனிஷ்க் கொள்ளை: காதலியின் 'Money Heist' திட்டம், டாட்டூவால் சிக்கிய காதலன்!
தீவிர புயலாக மாறும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி !! கரையை கடப்பது எங்கே ? வானிலை மையம் தகவல்
தீவிர புயலாக மாறும் காற்றழுத்த தாழ்வுப் பகுதி !! கரையை கடப்பது எங்கே ? வானிலை மையம் தகவல்
"வீடு லீஸ் தேடுபவர்களே உஷார்" புதுமணத் தம்பதியிடம் லட்சக் கணக்கில் மோசடி செய்த பெண்
நவ.16-இல் பிரதமரை சந்திக்கும் முதல்வர் விஜய்? - இதைப்பற்றி பேசத்திட்டமா?
நவ.16-இல் பிரதமரை சந்திக்கும் முதல்வர் விஜய்? - இதைப்பற்றி பேசத்திட்டமா?

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
நவ.16-இல் பிரதமரை சந்திக்கும் முதல்வர் விஜய்? - இதைப்பற்றி பேசத்திட்டமா?
நவ.16-இல் பிரதமரை சந்திக்கும் முதல்வர் விஜய்? - இதைப்பற்றி பேசத்திட்டமா?
U19 ஆசியக்கோப்பை: கடைசிப் பந்தில் பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி கொடுத்து சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!
U19 ஆசியக்கோப்பை: கடைசிப் பந்தில் பாகிஸ்தானுக்கு அதிர்ச்சி கொடுத்து சாம்பியன் பட்டம் வென்ற இந்தியா!
மதுரை Tanishq-ல் நகை கொள்ளை வழக்கில் பிரபல இன்ஸ்டா இன்புளூயன்சரான மீனாட்சி  மற்றும் பட்டதாரி இளைஞர் கைது !
மதுரை Tanishq-ல் நகை கொள்ளை வழக்கில் பிரபல இன்ஸ்டா இன்புளூயன்சரான மீனாட்சி  மற்றும் பட்டதாரி இளைஞர் கைது !
போருக்கு தயாரான சூரபத்மன்..ரெடியான தலைகள்..முருகனை காண குவியும் பக்தர்கள்..திருச்செந்தூர் லேட்டஸ்ட் அப்டேட்
போருக்கு தயாரான சூரபத்மன்..ரெடியான தலைகள்.. முருகனை காண குவியும் பக்தர்கள்..திருச்செந்தூர் லேட்டஸ்ட் அப்டேட்
காசோலை மோசடி வழக்கில் நடிகர் விமலுக்கு எதிராக தீர்ப்பு - செக் வைத்த நீதிபதி!
காசோலை மோசடி வழக்கில் நடிகர் விமலுக்கு எதிராக தீர்ப்பு - செக் வைத்த நீதிபதி!
காவிரி என்ன கர்நாடகாவுக்கு மட்டும் சொந்தமா? முதல்வர் விஜய் யார் உங்களுக்கு முக்கியம்? - டிஆர்பி ராஜா ஆவேசம்
காவிரி என்ன கர்நாடகாவுக்கு மட்டும் சொந்தமா? முதல்வர் விஜய் யார் உங்களுக்கு முக்கியம்? - டிஆர்பி ராஜா ஆவேசம்
அனிருத் - காவ்யா திருமணம்.. பெரியார் சொன்ன சுயமரியாதை திருமணத்தின் பின்னணி?
அனிருத் - காவ்யா திருமணம்.. பெரியார் சொன்ன சுயமரியாதை திருமணத்தின் பின்னணி?
பாலியல் குற்றச்சாட்டில் அடுத்தடுத்து சிக்கும் TVK நிர்வாகிகள்! உச்சகட்ட கோபத்தில் CM விஜய்! சாட்டையை சுழற்றுவாரா?
பாலியல் குற்றச்சாட்டில் அடுத்தடுத்து சிக்கும் TVK நிர்வாகிகள்! உச்சகட்ட கோபத்தில் CM விஜய்! சாட்டையை சுழற்றுவாரா?
Embed widget