TN Assembly Session: வரும் 17-ஆம் தேதி கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை: விவாதிக்க உள்ள பிரச்சினைகள் என்ன?
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 17-ஆம் தேதி கூடவுள்ளது என பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத் தொடர், வரும் அக்டோபர் 17-ஆம் தேதி கூடவுள்ளது என பேரவைத் தலைவர் அப்பாவு தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவை கூட்டத்தொடர்:
தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் கூடுவது குறித்து, சபாநாயகர் அப்பாவு செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர்,
அக்டோபர் 17 ஆம் தேதி, காலை 10 மணிக்கு சட்டசபை கூட்டத்தொடர் தொடங்கும். சட்டப்பேரவை எத்தனை நாட்கள் நடைபெறும் என்பது குறித்து, அலுவல் ஆய்வு கூட்டத்தில் முடிவு செய்யப்படும். கூட்டத்தொடரில் துணை நிதி நிலை அறிக்கை தாக்கல் செய்யப்படும்.
இதுவரை கேள்வி-பதில் நேரம் நேரலையாக ஒளிபரப்பிக் கொண்டிருக்கிறோம். மேலும் முழுமையாக நேரலையாக வழங்குவது என்பது, அரசின் தேர்தல் அறிக்கையிலையே குறிப்பிடப்பட்டுள்ளது. அதன்படி, முழுமையான நேரலைக்கான ஏற்பாடுகளை செய்து கொண்டிருக்கிறோம். விரைவிலையே முழுமையான நேரலைக்கான வாய்ப்பு உள்ளது எனவும் அப்பாவு தெரிவித்துள்ளார்.,
View this post on Instagram
மேலும், அதிமுக இரட்டை தலைமை விவகாரம் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளித்த பேரவைத் தலைவர்,சட்டப்பேரவை மரபு படி முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.
ஆன்லைன் ரம்மி தடை மசோதா:
தற்போது, ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை தடை செய்வதற்கான அவசர சட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
View this post on Instagram
இந்நிலையில், வரும் சட்டப்பேரவை கூட்ட தொடரில் ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட விளையாட்டுகளை தடை செய்வதற்கான நிரந்தர சட்டம் இயற்றப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.