மேலும் அறிய

கைதுக்கு அஞ்சிய காதலன்: விழுப்புரத்தில் ரத்தக் களறியான காதல் விவகாரம்!

விழுப்புரத்தில் காதல் பிரச்சனையில் பனிரண்டாம் வகுப்பு பள்ளி மாணவனை கத்தியால் கிழித்த இளைஞர் போலீசாருக்கு பயந்து ரயிலில் விழுந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் அருகே பள்ளி மாணவனை கத்தியால் தாக்கிய இளைஞர், காவல்துறையினரின் கைது நடவடிக்கைக்கு பயந்து ரயிலில் விழுந்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


விழுப்புரம் மாவட்டம், சித்தாத்தூர் திருக்கை கிராமத்தைச் சேர்ந்தவர் தனஞ்செழியன் (20). அதே பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுவன், அருகிலுள்ள தனியார் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு பயின்று வருகிறார். அந்த மாணவன், தான் படிக்கும் பள்ளியில் சக மாணவி ஒருவருடன் நட்பாகப் பேசி வந்துள்ளார். அந்த மாணவியை தனஞ்செழியன் காதலித்து வந்ததாகக் கூறப்படுகிறது. தனது காதலியிடம் அந்த மாணவன் பேசுவது தனஞ்செழியனுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.
 
கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில், அந்த மாணவனை வழிமறித்த தனஞ்செழியன், "ஏன் என் காதலியிடம் பேசுகிறாய்?" எனக்கூறி கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். வாக்குவாதம் முற்றிய நிலையில், தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் மாணவனை தனஞ்செழியன் சரமாரியாகத் தாக்கினார்.

இந்தக் கொடூரத் தாக்குதலில் மாணவனின் நடுவிரல் துண்டானது. மேலும் தலை, முகம் உள்ளிட்ட உடல் உறுப்புகளில் பலத்த வெட்டுக் காயங்கள் ஏற்பட்டன. ரத்த வெள்ளத்தில் சரிந்த மாணவனை மீட்ட உறவினர்கள், உடனடியாக முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக புதுச்சேரி ஜிப்மர் (JIPMER) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

பாதிக்கப்பட்ட மாணவன் மற்றும் அவரது பெற்றோரின் புகாரின் பேரில், விழுப்புரம் தாலுக்கா போலீசார் வழக்குப்பதிவு செய்து தனஞ்செழியனைத் தீவிரமாகத் தேடி வந்தனர். போலீசாரின் பிடி இறுகுவதை உணர்ந்த தனஞ்செழியன் தலைமறைவானார்.

இந்நிலையில், இன்று காலை சித்தாத்தூர் திருக்கை பகுதியில் உள்ள ரயில் தண்டவாளத்தில் இளைஞர் ஒருவர் சடலமாகக் கிடப்பதாக போலீசாருக்குத் தகவல் கிடைத்தது. சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார், உடலைக் கைப்பற்றி விசாரணை நடத்தினர்.
விசாரணையில், இறந்து கிடந்தது மாணவனைத் தாக்கிய தனஞ்செழியன் என்பதும், போலீஸ் தேடுவதை அறிந்து பயந்துபோய் அவர் ரயில் முன் விழுந்து தற்கொலை செய்து கொண்டதும் உறுதி செய்யப்பட்டது.

காதல் விவகாரத்தில் பள்ளி மாணவன் தாக்கப்பட்டதும், அதனைத் தொடர்ந்து தாக்குதல் நடத்திய இளைஞரே தற்கொலை செய்து கொண்டதும் சித்தாத்தூர் திருக்கை கிராமத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து தாலுக்கா போலீசார் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

தலைப்பு செய்திகள்

தஞ்சையை சேர்ந்தவர்களிடம் ரூ. 7.75 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் விசாரணை
தஞ்சையை சேர்ந்தவர்களிடம் ரூ. 7.75 லட்சம் பணம் மோசடி: சைபர் க்ரைம் போலீசார் விசாரணை
" இளம் பெண்ணிடம் எல்லை மீறிய மெடிக்கல் ரெப் " பணம் கேட்டு மிரட்டிய பெண் வழக்கறிஞர்
மாமூல் தர மறுத்த அரிசிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: புதுச்சேரியில் ரவுடியின் வெறியாட்டம்!
மாமூல் தர மறுத்த அரிசிக்கடை மீது பெட்ரோல் குண்டுவீச்சு: புதுச்சேரியில் ரவுடியின் வெறியாட்டம்!
கொள்ளிடம் ரயில்வே சுரங்கப்பாதையில் ரகசியச் சதி... சிக்கிய ரௌடி மொட்டை சிவா!
கொள்ளிடம் ரயில்வே சுரங்கப்பாதையில் ரகசியச் சதி... சிக்கிய ரௌடி மொட்டை சிவா!

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Kushboo Condemn Nainar Nagendran: “நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
“நீங்கள் தெரிவித்த தரம் தாழ்ந்த கருத்து அருவருப்பானது“: நயினார் நாகேந்திரனை வெளுத்துவிட்ட குஷ்பு
Nainar Nagendran : நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
நயினாருக்கு ஸ்கெட்ச்.! சுற்றிவளைக்க தயாராகும் போலீஸ்.? டிஜிபிக்கு பறந்த புகார்- நடந்தது என்ன.?
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
CM Joseph Vijay: ஒரே கேள்வியில் அமைச்சரை ஆஃப் செய்த விஜய்.. மாற்றம் கண்ட கேரள காவல்துறை!
Annamalai Slams Nainar: “மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
“மூன்றாந்தர அரசியல் செய்யாதீர்கள்“; நயினார் நாகேந்திரனை பொளந்து கட்டி அண்ணாமலை பதிவு
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
Nainar Nagendran: விஜய் குடும்பத்தை இழுத்த நயினார்.. அநாகரீக பேச்சால் அதிர்ச்சி.. காவல்துறையில் புகார்!
World Leaders Wish India: 80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
80 வயதை எட்டிய இந்தியா.! வாழ்த்து மழையில் நனைத்த உலகத் தலைவர்கள்; யார் யார் தெரியுமா.?
iPhone 17 Vs Google Pixel 11: ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
ஐபோன் 17-ஆ.? கூகுள் பிக்சல் 11-ஆ.? எது ரொம்ப பவர்ஃபுல்.? இந்த ஒப்பீட்ட படிச்சுட்டு முடிவு பண்ணுங்க
Trump on Hormuz: ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
ஹார்முஸ் அமெரிக்காவுக்கு தான்.! ஈரானை மீண்டும் வம்புக்கு இழுத்த ட்ரம்ப்; வாங்காம போக மாட்ட..?!
Embed widget