TN Headlines: குறையும் மேட்டூர் அணை நீர்வரத்து; தீவிரம் காட்டும் தேர்தல் பறக்கும் படை; தமிழ்நாட்டில் இன்று இதுவரை
TN Headlines: தமிழ்நாட்டில் இன்று நடந்த முக்கிய நிகழ்வுகளை கீழே தலைப்புச் செய்திகளாக காணலாம்.
Tamilnadu Election Voting : நாளை தொடங்கும் நாட்டின் ஜனநாயகத் திருவிழா: சுவாரஸ்யமான புள்ளிவிவரங்கள் இதோ..
தமிழகத்தில் உள்ள 39 தொகுதிகளிலும் நாளை காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. வாக்காளர்கள் தங்களின் வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட 13 ஆவணங்களைப் பயன்படுத்தி வாக்களிக்கலாம். தமிழக வாக்காளர்கள் மொத்தம் எத்தனை பேர்? தமிழகத்தில் மொத்தம் 6 கோடியே 23 லட்சத்து 33 ஆயிரத்து 925 வாக்காளர்கள் (சுமார் 6.23 கோடி) உள்ளனர். இவர்களில் ஆண்கள்- 3 கோடியே 6 லட்சத்து 5 ஆயிரத்து 793, பெண்கள்- 3 கோடியே 17 லட்சத்து 19 ஆயிரத்து 665, மூன்றாம் பாலினத்தவர்கள் 8 ஆயிரத்து 467 பேர் ஆவர். இதில் 18 முதல் 19 வயது வரையிலான முதல் முறை வாக்காளர்கள் 10.92 லட்சம் பேர் ஆவர். மேலும் படிக்க..
Mettur Dam: அதிரடியாக சரிந்த மேட்டூர் அணையின் நீர்வரத்து - இன்றைய நீர் நிலவரம்.
தமிழ்நாடு மற்றும் கர்நாடகா மாநிலங்களில் பருவமழை தொடங்கி உள்ளது. இதனால் கர்நாடகாவில் இருந்து மேட்டூர் அணைக்கு வரும் நீரானது அதிகரித்தும், குறைந்தும் காணப்பட்ட நிலையில் தற்போது மேட்டூர் அணையின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது. நேற்று முன்தினம் அணைக்கு வினாடிக்கு 68 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்றைய தினம் அணைக்கு வரும் நீரின் அளவு 91 கன அடியாக இருந்தது. இந்த நிலையில் இன்று காலை அணைக்கு வரும் நீரின் அளவு 22 கன அடியாக குறைந்துள்ளது. மேலும் படிக்க..
விழுப்புரம்: தங்கும் விடுதிகளில் அதிரடியாக நடந்த சோதனை.. என்ன ஆச்சு?
விழுப்புரத்தில் உள்ள தங்கும் விடுதிகளில் போலீசார் அதிரடி சோதனை, தொகுதிக்கு சம்மந்தமில்லாத வெளி ஆட்கள் உடனடியாக வெளியேறாவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை எச்சரிக்கை விடுத்தனர். தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வரும் 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் பல்வேறு அரசியல் கட்சியினர் மேற்கொண்டு வந்த அனல் பறக்கும் தேர்தல் பிரச்சாரம் நேற்று மாலை 6 மணியுடன் நிறைவடைந்தது. மேலும் படிக்க
Uthiramerur: 1000 ஆண்டு கால மக்களாட்சி.. தமிழர்களின் ஜனநாயகத்தை பறைசாற்றும் உத்திரமேரூர் கல்வெட்டுகள்!
இந்தியாவை பொறுத்தவரையில் மக்களாட்சிக்கு நீண்ட நெடிய வரலாறு உண்டு. குறிப்பாக, பல விஷயங்களில் இந்தியாவுக்கே முன்னுதாரணமாக திகழும் தமிழர்கள், ஜனநாயக வரலாற்றிலும் எடுத்துக்காட்டாக வாழ்ந்துள்ளனர். 1000 ஆண்டுகளுக்கு முன்பே, ஜனநாயக நெறிமுறைகளை தமிழர்கள் பின்பற்றி வந்துள்ளது உத்திரமேரூர் கல்வெட்டுகள் மூலம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது. 30 உறுப்பினர்கள் கொண்ட 'சபை' மூலம் கிராமத்தை ஆட்சி புரிந்து வந்துள்ளனர். மேலும் படிக்க..
சி.வி.சண்முகம் எழுதியதை போன்ற போலி அறிக்கை - விழுப்புரம் எஸ்பி அலுவலகத்தில் அதிமுகவினர் புகார்
விழுப்புரம்: விழுப்புரம் பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளரின் செயல்பாடுகள் வெற்றியை பாதிப்பது போன்று சி.வி.சண்முகம் எடப்பாடி பழனிசாமிக்கு எழுதியது போன்ற போலியான கடிதத்தினை பரப்பியவர் மீது நடவடிக்கை எடுக்ககோரி விழுப்புரம் எஸ் பி அலுவலகத்தில் அதிமுக வழக்கறிஞர்கள் புகாரளித்தனர். மேலும் படிக்க