Sam Konstas : தம்பி நீ அடிச்சது யார் தெரியுமா.. பும்ராவை ஆஃப் செய்த 19 வயது இளைஞர்! யார் இந்த சாம் கோன்ஸ்டாஸ்?
Sam Konstas : இந்திய ஆஸ்திரேலிய அணிகளுக்கு எதிரான பாக்சிங் டே டெஸ்டில் அறிமுக சாம் கோஸ்டாஸ் அரைசதம் அடித்தார்.
தம்பி நீங்க அடிச்சது யாரு தெரியுமா? என்று சண்டக்கோழி படத்தில் வரும்காட்சியை போல இந்திய அணிக்கு எதிரான நான்காவது பார்டர் கவாஸ்கர் டெஸ்டில் 19 வயதான சாம் கோன்ஸ்டாஸ் அதிரடியாக ஆடினார், அவர் யார் என்பதை இந்த தொகுப்பில் காண்போம்.
சாம் கோன்ஸ்டாஸ் அதிரடி:
இந்தியாவுக்கு எதிரான நான்காவது பாக்சிங் டே டெஸ்ட் போட்டியில் டாஸ் ஜெயித்த ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங் செய்தது. இதில் அறிமுக வீரர் சாம் கோன்ஸ்டாஸ் அரைசதம் அடித்து ஆட்டமிழந்தார். ஆனால் அவரது அதிரடி ஆட்டம் இந்திய அணியை நிலைக்குலைய வைத்தது. குறிப்பாக இந்திய அணியின் ஸ்டார் பவுலரான ஜஸ்பிரீத் பும்ராவின் ஆறாவது ஓவரில் 18 ரன்கள் குவித்தார். மேலும் பும்ராவை 100 ஸ்டிரைக் ரேட் மேல் விளையாடிய இரண்டாவது வீரரும் இவர் தான்.
FIRST SIX AGAINST BUMRAH IN TEST CRICKET AFTER 4,483 BALLS. 🥶
— Mufaddal Vohra (@mufaddal_vohra) December 26, 2024
Sam Konstas, 19 year old, on debut - part of the history. 🤯pic.twitter.com/ZTATUCje5c
இதுமட்டுமில்லாமல் 4688(746.1 ஓவர்) பந்துகளாக சிக்சர் கொடுக்காமல் இருந்த ஜஸ்பீரித் பும்ராவின் ஓவரில் கோன்ஸ்டாஸ் சிக்சர் விளாசி அதையும் முடிவுக்கு கொண்டு வந்தார். சாம் கோன்ஸ்டாஸ் 65 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
SAM KONSTAS SMASHED 4,6,4 AGAINST BUMRAH IN AN OVER. 🥶pic.twitter.com/Wb5hICRZEP
— Mufaddal Vohra (@mufaddal_vohra) December 26, 2024
யார் இந்த சாம் கோன்ஸ்டாஸ்?
19 வயது இளைஞரான சாம் கான்ஸ்டாஸ் நியூ சவுத் வேல்ஸ் அணிக்காக உள்ளூர் போட்டிகளில் விளையாடி வருகிறார். இதுவரை 11 முதல் தரப் போட்டிகளில் விளையாடியுள்ள கான்ஸ்டாஸ் 2 சதம், 3 அரைசதங்களுடன் 718 ரன்கள் குவித்துள்ளார். இறுதியாக சிட்னியில் மேற்கு ஆஸ்திரேலியாவுக்கு எதிராக நடந்த முதல் தர போட்டியில் அவர் 145 பந்துகளில் 88 ரன்கள்( 7 பவுண்டரி மற்றும் இரண்டு சிக்சர்கள்) எடுத்தார்.
பயிற்சி போட்டியில் சதம்:
மேலும் கான்பெரா மனுகா ஓவலில் இந்தியாவுக்கு எதிராக பிரைம் மினிஸ்டர்ஸ் லெவன் அணிக்காக பிங்க்-பால் பயிற்சி ஆட்டம் நடைப்பெற்றது. இந்த ஆட்டத்தில் கோன்ஸ்டாஸ் அதிரடியாக விளையாடி சதமடித்தார், அவர் 97 பந்துகளில் 107 ரன்கள் எடுத்தார். இந்தப் போட்டியில் நெருக்கடியான கட்டத்தில் இறங்கி சதமடித்தது ஆஸ்திரேலிய தேர்வு குழுவினர்களை தன் பக்கம் திருப்பி அணிக்குள் நுழைந்துள்ளார்.
இதையும் படிங்க: KL Rahul : பாக்சிங் டே டெஸ்ட்டின் பாட்ஷா! ஹாட்ரிக் சதம் அடிப்பாரா கே.எல் ராகுல்?
டேவிட் வார்னர் ஓய்வு பெற்ற பிறகு ஆஸ்திரேலிய அணியின் தொடக்க விக்கெட் பார்ட்னர்ஷிப் சொல்லிக்கொள்ளும் படி இல்லை, இதனால் தான் முதல் மூன்று டெஸ்ட் போட்டிகளில் நாதன் மெக்ஸ்வீனி அணியில் சேர்க்கப்பட்டார், ஆனால் அவர் 6 இன்னிங்ஸ்களில் 4 முறை பும்ராவிடம் தனது விக்கெட்டை பறிக்கொடுத்தார். இதன் காரணமாகவே சாம் கோன்ஸ்டாஸ் பக்கம் ஆஸ்திரேலிய தேர்வாளர்கள் திரும்பியுள்ளனர்.
பிக் பாஷ் தொடரில் அரைசதம்:
பிக் பாஷ் லீக் தொடரில் சிட்னி தண்டர் அணிக்காக கான்ஸ்டாஸ் களம் இறங்கி தனது முதல் BBL போட்டியில் 27 பந்துகளில் அரை சதம் அடித்தார். சிட்னி தண்டர் அணிக்காக அதிவேக அரைசதம் அடித்த பேட்ஸ்மேன் என்கிற சாதனையும் படைத்தார்.