மேலும் அறிய
Rasipalan December 26: மேஷத்திற்கு கடன் பிரச்னை குறையும்; ரிஷபத்திற்கு பணவரவு - உங்க ராசி பலன்?
Rasi Palan Today, December 26: இன்று மார்கழி மாதம் 11ஆம் நாளில், எந்தெந்த ராசியினருக்கு என்னென்ன பலன்கள் குறித்து விரிவாக காணலாம்.
![Rasipalan December 26: மேஷத்திற்கு கடன் பிரச்னை குறையும்; ரிஷபத்திற்கு பணவரவு - உங்க ராசி பலன்? RasiPalan Today In Tamil 2024 December 26th Daily Horoscope12 Zodiac Signs Astrology know Check details Rasipalan December 26: மேஷத்திற்கு கடன் பிரச்னை குறையும்; ரிஷபத்திற்கு பணவரவு - உங்க ராசி பலன்?](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/12/25/79331ad5110c7b18c76d58878eb18ca41735140758900572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
ராசிபலன்
Source : Abp
இன்றைய ராசி பலன்கள்: Rasi Palan Today December 26, 2024:
அன்பார்ந்த வாசகர்களே இன்றைய நாளில் உங்கள் ராசிக்கு எப்படி இருக்க போகிறது என்று பார்க்கலாம்....
மேஷ ராசி
குண இயல்புகளில் மாற்றம் உண்டாகும். சிந்தனைகளில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். குடும்பத்தில் புதிய நபர்களின் அறிமுகம் ஏற்படும். தனவரவுகள் இருந்துவந்த நெருக்கடிகள் குறையும். கடன் தொடர்பான பிரச்சனைகள் குறையும். நுட்பமான செயல்பாடுகள் மீது ஆர்வம் அதிகரிக்கும். வியாபார ரீதியான முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். சுகம் நிறைந்த நாள்.
ரிஷப ராசி
பணவரவு தாராளமாக இருக்கும். வழக்கில் நல்ல தீர்ப்பு கிடைக்கும். மனதை அழுத்திக் கொண்டிருந்த இனந்தெரியாத வேதனை விலகும். உடன் பிறந்தவர்கள் ஆதரவாக இருப்பார்கள். மறதி தொடர்பான இன்னல்கள் குறையும். உத்தியோகத்தில் சூட்சுமங்களை அறிந்து கொள்வீர்கள். வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். நட்பு மேம்படும் நாள்.
மிதுன ராசி
பொழுதுபோக்கு விஷயங்களில் ஆர்வம் உண்டாகும். பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் அடைவீர்கள். உடன்பிறப்புகள் ஆதரவாக இருப்பார்கள். வித்தியாசமான கற்பனைகள் மனதில் மேம்படும். சிற்றின்ப விஷயங்களில் ஈடுபாடு உண்டாகும். எதிர்காலம் தொடர்பான சிந்தனைகள் மேம்படும். தாய்மாமன் வழியில் அனுசரித்துச் செல்லவும். தன்னம்பிக்கை வேண்டிய நாள்.
கடக ராசி
சிந்தனைப் போக்கில் கவனம் வேண்டும். உயர் பொறுப்பில் இருப்பவர்களிடம் நிதானத்துடன் செயல்படவும். அந்நிய தேச பயண வாய்ப்புகள் சாதகமாகும். பிற இன மக்களால் ஆதாயம் அடைவீர்கள். நெருக்கமானவர்களின் தேவைகளை நிறைவேற்றுவீர்கள். நண்பர்களிடத்தில் விட்டுக்கொடுத்து செல்லவும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். ஆதரவு மேம்படும் நாள்.
சிம்ம ராசி
மனதில் தன்னம்பிக்கை அதிகரிக்கும். வியாபார பணிகள் மத்தியமாக நடைபெறும். சிந்தனைகளில் தெளிவுகள் பிறக்கும். துறைகளில் இருந்துவந்த குழப்பங்கள் விலகும். கொடுக்கல், வாங்கலில் சிந்தித்து செயல்படவும். அண்டை வீட்டினர் ஒத்துழைப்பாக இருப்பார்கள். எதிர்காலம் பற்றிய சிந்தனைகள் அதிகரிக்கும். உயர்வு நிறைந்த நாள்.
கன்னி ராசி
தனம் தொடர்பான நெருக்கடிகள் குறையும். முகத்தளவில் இருந்துவந்த குழப்பங்கள் குறையும். முயற்சிகளில் மாற்றமான சூழல் ஏற்படும். பொருளாதாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். உடன் இருப்பவர்கள் பற்றிய புரிதல் ஏற்படும். உத்தியோக துறையில் நுட்பமான சில விஷயங்களை புரிந்து கொள்வீர்கள். போட்டி நிறைந்த நாள்.
துலாம் ராசி
எதிலும் கோபம் இன்றி செயல்படவும். உத்தியோகப் பணிகளில் பொறுப்புகள் அதிகரிக்கும். வாடிக்கையாளர்களால் சில வருத்தங்கள் நேரிடும். குடும்பத்தாரை அனுசரித்துச் செல்லவும். மற்றவர்கள் பற்றிய கருத்துக்களை தவிர்க்கவும். தற்பெருமையான பேச்சுக்களை தவிர்க்கவும். மனதில் புதிய சிந்தனைகள் மேம்படும். வெற்றி கிடைக்கும் நாள்.
விருச்சிக ராசி
சஞ்சலமான சில சிந்தனைகள் மூலம் குழப்பங்கள் ஏற்பட்டு நீங்கும். வாகனம் தொடர்பான விரயங்கள் ஏற்படும். செயல்பாடுகளில் ஒருவிதமான மந்த தன்மை உண்டாகும். உறவினர்கள் வழியில் சுபச்செய்திகள் கிடைக்கும். வீடு மற்றும் மனை சார்ந்த பணிகளில் ஆதாயம் ஏற்படும். விலை உயர்ந்த பொருட்களில் கவனம் வேண்டும். வாக்குறுதி அளிக்கும் போது சிந்தித்துச் செயல்படவும். புகழ் நிறைந்த நாள்.
தனுசு ராசி
உறவினர்கள் வழியில் ஆதாயம் உண்டாகும். அரசால் அனுகூலம் உண்டாகும். அடுத்தவருக்கு அறிவுரை கூறுவதை குறைத்துக் கொள்ளவும். சேமிப்பு தொடர்பான சிந்தனைகள் மேம்படும். வீட்டினை மனதிற்கு பிடித்த விதத்தில் மாற்றி அமைப்பீர்கள். விவசாய பணிகளில் சாதகமான வாய்ப்புகள் கிடைக்கும். கால்நடை தொடர்பான வியாபாரத்தில் மேன்மை உண்டாகும். செலவு நிறைந்த நாள்.
மகர ராசி
பணிபுரியும் இடத்தில் உயர் அதிகாரிகளால் ஆதரவான சூழ்நிலைகள் காணப்படும். வெளியூர் தொடர்பான பயணங்கள் கைகூடும். தொழில் நிமித்தமான முடிவுகளில் கவனம் வேண்டும். விவசாயப் பணிகளில் மேன்மை ஏற்படும். மனதளவில் புத்துணர்ச்சியுடன் காணப்படுவீர்கள். வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கான தருணங்கள் உண்டாகும். எதிர்பாராத சில உதவிகள் கிடைக்கும். அமைதி நிறைந்த நாள்.
கும்ப ராசி
தடைப்பட்ட பணிகளை செய்து முடிப்பீர்கள். உயர் அதிகாரிகள் பற்றிய புரிதல்கள் மேம்படும். எழுத்து சார்ந்த துறைகளில் புதிய வாய்ப்புகள் கிடைக்கும். வெளிநாடு குடியுரிமை கிடைப்பதில் இருந்துவந்த தடைகள் விலகும். புத்திரர்கள் வழியில் மகிழ்ச்சியான செய்திகள் உருவாகும். வியாபார பணிகளில் புதுவிதமான அனுபவம் கிடைக்கும். நிதானம் வேண்டிய நாள்.
மீன ராசி
ஆரோக்கியத்தில் ஏற்ற இறக்கம் உண்டாகும். எதிராக இருந்தவர்களைப் பற்றி புரிந்து கொள்வீர்கள். சில நிகழ்வுகள் மூலம் மனதில் மாற்றம் உண்டாகும். உடன் பிறந்தவர்களிடம் விட்டுக்கொடுத்து செல்லவும். சக ஊழியர்களிடம் அனுசரித்து நடந்து கொள்ளவும். கடன் சார்ந்த செயல்பாடுகளில் சிந்தித்துச் செயல்படவும். விவேகம் வேண்டிய நாள்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தேர்தல் 2025
அரசியல்
கல்வி
தேர்தல் 2025
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)
வினய் லால்Columnist
Opinion