TN Rains: மழை நகராக மாறிய தலைநகர்! இன்னைக்கு எந்த மாவட்டத்துல எல்லாம் மழை? இதுதான் லிஸ்ட்
சென்னையில் நேற்று இரவு முதல் காலை வரை விடிய, விடிய மழை கொட்டித் தீர்த்த நிலையில் இன்றும் மழை நீடிக்கும என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
தமிழ்நாட்டில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. குறிப்பாக, வட கிழக்கு பருவமழை தொடங்கிய பிறகு தென் தமிழகம், வட தமிழகம் என பாரபட்சமின்றி தமிழ்நாட்டில் அனைத்து பகுதிகளிலும் மழை கொட்டித் தீர்த்து வருகிறது.
இந்த நிலையில், தமிழ்நாட்டில் கடந்த சில தினங்களாகவே கடும் குளிர் வாட்டி வதைத்து வந்த நிலையில், சென்னையில் கடந்த இரண்டு தினங்களாகவே வானம் மேகமூட்டமாகவே காணப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், சென்னையில் நேற்று மதியம் முதலே மழை பரவலாக பெய்து வந்த நிலையில் நேற்று இரவு முதல் விடிய, விடிய மழை கொட்டித் தீர்த்தது. அண்ணாநகர், தேனாம்பேட்டை, கிண்டி, வடபழனி, கோயம்பேடு, வளசரவாக்கம் என பல பகுதிகளில் மழை கொட்டித் தீர்த்தது.
— IMD-Tamilnadu Weather (@ChennaiRmc) December 26, 2024
இந்த நிலையில், சென்னை உள்பட தமிழ்நாட்டில் பல மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்திற்கு மழை நீடிக்கும் என் வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக, வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது, காலை 10 மணி வரை திருவண்ணாமலை, காஞ்சிபுரம், கள்ளக்குறிச்சி மற்றும் விழுப்புரம் மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
மேலும், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, கடலூர், ராணிப்பேட்டை மற்றும் வேலூரில் மிதமான மழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது. தமிழ்நாட்டில் புத்தாண்டு பிறக்கும் வரை மழை பெய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மழை தொடர்ந்து பெய்து வரும் சூழலில் தமிழ்நாட்டில் உள்ள நீர்நிலைகளில் நீர்மட்டத்தை தொடர்ந்து அரசு கண்காணித்து வருகிறது. முக்கிய ஏரிகளின் கரைகளைப் பலப்படுத்தவும் அரசு மாவட்ட நிர்வாகங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.