54 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு: புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் முதல்வர் இன்று கையெழுத்து..!
54 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கக்கூடிய வகையில் ரூ.17 ஆயிரம் கோடி மதிப்பிலான 33 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கங்களில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கையெழுத்திடுகிறார்.
54 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கக்கூடிய வகையில் ரூ.17 ஆயிரம் கோடி மதிப்பிலான 33 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கங்களில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கையெழுத்திடுகிறார்.
ஆட்டோமொபைல், காற்றாலை, எரிசக்தித் துறை, சரக்கு போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு துறைகள் சார்ந்த புரிந்துணர்வு ஒப்பந்தங்களை மேற்கொள்ளப்பட்ட உள்ளன. இதன் மொத்த மதிப்பு ரூ.17 ஆயிரத்து 279 கோடி எனத் தெரிகிறது.
கேப்பிட்டள் லேண்ட், அதானி, ஜேஎஸ்டபிள்யு, இசட்எஃப் வேப்கோ என பல்வேறு நிறுவனக்கள் தமிழக அரசுடன் இன்று புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் கையெழுத்திடுகின்றன.
இதுதவிர மாநிலத்தில் 14 வளர்ச்சித் திட்டங்களுக்கும் முதல்வர் ஸ்டாலின் இன்று அடிக்கல் நாட்டுகிறார்.
இந்த விழாவில் தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழில்துறை முதன்மை செயலாளர் முருகானந்தம், வழிகாட்டி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பூஜா குல்கர்னி உள்ளிட்ட அதிகாரிகள் நிகழ்ச்சியில் பங்கேற்கின்றனர்.
தமிழகம் எப்போதுமே தொழில் வளர்ச்சியில் முன்னிலையில் இருக்கும் மாநிலமாகத் திகழ்கிறது. அதற்கு மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு நிலைமை முக்கியக் காரணமாகக் கூறப்படுகிறது. தமிழகம் ஆட்சிகள் மாறினாலும் அமைதிப் பூங்காவாகவே இருப்பதால், இங்கு அதிகப்படியான தொழிற்சாலைகள் உருவாகின்றன.
கொரோனா பேரிடர், ஊரடங்கு என பல்வேறு தடைகளைத் தாண்டி இந்தியாவிலேயே நம்பர் 1 இடத்தை மீண்டும் தக்கவைத்திருந்தது தமிழ்நாடு.
மாநிலத்தின் ஒருங்கிணைந்த வளர்ச்சியில் தொழில்துறை வளர்ச்சி பங்கு மிக முக்கியமானது. தொழில் வளர்ச்சியால் அதன் மூலம் வேலைவாய்ப்புகள் அதிகரித்து மக்களின் வாழ்வாதாரம் பாதுகாக்கப்படும். இதனை அறிந்து ஆட்சி மாற்றம் கண்டுள்ள தமிழகத்தில் முதல்வர் 54 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கக்கூடிய வகையில் ரூ.17 ஆயிரம் கோடி மதிப்பிலான 33 புதிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கங்களில் கையெழுத்திடுகிறார்.
கொரோனா பேரிடரை முன்னிட்டு ஏற்கெனவே தொழில்துறைக்காக முதல்வர் ஸ்டாலின் பல்வேறு சலுகைகளை அறிவித்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
பெரிய தொழில் முதலீட்டுகளை ஈர்ப்பது எவ்வளவு அவசியமோ அதேபோல் சிறு, குறு, நடுத்தர தொழில்களை வளர்த்தெடுப்பதும் அவசியம் என்பதால் முதல்வராகப் பொறுப்பேற்ற உடனேயே குறு,சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு முதலீட்டு மானியம் வழங்க, முதலீட்டு மானியத்திற்கான திட்ட மதிப்பீட்டுக்கு ரூ.280 கோடி ஒதுக்கி உத்தரவிட்டார். இதில் 60 சதவீதம்(ரூ.168 கோடி) உடனே விடுவித்து உத்தரவிட்டார்.
கொரோனாவால் வேலையிழப்பு பெரும் சவாலாக இருக்கும் நிலையில் இன்று முதல்வர் கையெழுத்திடும் 33 புரிந்துணர்வு ஒப்பந்தங்களால் குறைந்தது 54 ஆயிரம் பேருக்காவது வேலைவாய்ப்பு உருவாகும் எனக் கணிக்கப்படுகிறது.
இது தமிழகத்தின் பொருளாதாரத்தை மீட்டெடுக்கும் என பொருளாதார நிபுணர்கள் கணித்துள்ளனர்.