மேலும் அறிய

தேர்தல் முடிவுகள் 2024

(Source: ECI/ABP News/ABP Majha)

Thirumavalavan | புதிய ஆளுநரை திரும்ப பெற வேண்டும் - திருமாவளவன் வலியுறுத்தல்

ஆளுநரை மாற்றினாலும், ஆட்சியை கலைக்க முடியாது. திமுக பெரும்பான்மை உடன் ஆட்சியில் இருக்கிறது, மக்கள் ஆதரவுடன் செயல்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டுக்கு புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ரவியை திரும்பப் பெற வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார்.

இமானுவேல் சேகரன் நினைவுநாள் நாளையொட்டி, சென்னை அசோக்நகரில் அவரது படத்திற்கு விசிக தலைவர் திருமாவளவன் மரியாதை செலுத்தினார். இதன்பிறகு செய்தியாளர்களுக்கு திருமாவளவன் அளித்த பேட்டியில், “இம்மானுவேல் சேகரன் சமூக நீதிக்காக போராடியவர். அவருக்கு மணிமண்டபம் அமைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கிறோம். பாரதியார் பெண்கள் விடுதலைக்காகவும், சுதந்திரம் கிடைத்திட மக்களை ஒருங்கிணைத்தவர் அவருக்கும் மரியாதை செலுத்துகிறோம். தமிழ்நாட்டுக்கு புதிய ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ள ரவியை திரும்பப் பெற வேண்டும். உளவுத்துறையில் பணியாற்றவரை தமிழ்நாட்டுக்கு மாற்றம் செய்திருப்பது சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. தமிழகத்தில் 25 ஆண்டுகளாக திராவிட கட்சிகளுக்கு எதிராக போராடும் பா.ஜ.க வுக்கு எந்த முன்னேற்றமும் இல்லை. திராவிட கட்சியை அகற்ற வேண்டும் என்று பா.ஜ.க தலைவர் அண்ணாமலை கருத்து நிறைவேறாது. ஆளுநரை மாற்றினாலும், ஆட்சியை கலைக்க முடியாது. திமுக பெரும்பான்மை உடன் ஆட்சியில் இருக்கிறது, மக்கள் ஆதரவுடன் செயல்பட்டு வருகிறது” என்றார்.  மேலும், போதை பொருட்கள் விற்பவர்கள் மீது முதல்வர் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், ஒராண்டுக்குள் கட்டுக்குள் கொண்டு வர வேண்டும் எனவும் திருமாவளவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

தமிழ்நாட்டின் புதிய ஆளுநராக பொறுப்பேற்கவிருக்கும் ஆர்.என்.ரவி பீகாரில் பிறந்தவர். கேரளா பிரிவைச் சேர்ந்த முன்னாள் ஐபிஎஸ் அதிகாரி. ஆரம்ப காலத்தில் கேரள மாநில பணிகளில் இருந்த ரவி, சில ஆண்டுகளுக்குள் சிபிஐக்கு மாற்றப்பட்டார். அங்கு Oraganised Crime unit எனப்படும் குழுவாக இணைந்து குற்ற செயல்களில் ஈடுபடுவோரை கண்காணித்து தடுக்கும் பிரிவிலும் ஊழல் தடுப்பு பிரிவிலும் பணியாற்றினார். கண்காணிப்பு பணி பிடித்துப் போக, உளவுத்துறையில் சேர்ந்தார் ரவி. மத்திய அரசின் பல்வேறு பணிகளில் பணியாற்றியுள்ள ரவி, துணை தேசிய பாதுகாப்பு ஆலோசகராகவும் இருந்துள்ளார். பிரதமர் நரேந்திர மோடியின் Good Book ல் இடம்பெற்றிருந்த அதிகாரிகளில் மிக முக்கியமானவர்.

ஐபிஎஸ் அதிகாரியான ரவி, காஷ்மீரிலும் வடகிழக்கு மாநிலங்களிலும் பல ஆண்டுகள் பணியாற்றிய அனுபவம் கொண்டவர். குறிப்பாக உளவுத்துறை அதிகாரியாக. இந்த அனுபவம் அவருக்கு பல வழிகளில் கை கொடுத்தது. ராணுவத்துக்கு பல நேரங்களில் தூதுவராகவும் பேச்சுவார்த்தை நடத்தும் நபராகவும் இருந்திருக்கிறார். பெரும்பாலும் வடகிழக்கு தொடர்பான விஷயங்களை கவனித்து வந்ததால், ரவியை வடகிழக்கு நிபுணர் என்றும் மத்திய அரசில் அழைப்பார்கள்.

Thirumavalavan | புதிய ஆளுநரை திரும்ப பெற வேண்டும் - திருமாவளவன் வலியுறுத்தல்

2014ம் ஆண்டு மே மாதம் மோடி தலைமையில் ஆட்சி அமைத்தது பாஜக. அப்போது உள்துறை அமைச்சராக இருந்தவர் ராஜ்நாத் சிங். நாகாலாந்தில் தொடர்ந்து வந்த குழப்பத்தை போக்க பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வந்தது மத்திய அரசு. அந்த பேச்சுவார்த்தை குழுவின் தலைவராக இருந்தார் அஜித் லால். அவரது பதவிக்காலம் முடிந்த போது, தாங்கள் மிகவும் புதிய அரசாக இருப்பதால் புதிய தலைவரை நியமிக்க வேண்டாம் என்றும் நாகாலாந்து பிரிவினைவாத அமைப்புகளோடு உள்ள சிக்கலை புதிய நியமனம் மேலும் சிக்கலாக்கலாம் என்றும் ராஜ்நாத் சிங் கூறினார். மேலும் அஜித் லாலை தற்போதைக்கு தலைவராக நீடிக்க சொல்லலாம் என்று பரிந்துரைத்தார்.

ஆனால், பிரதமர் அலுவலகத்தில் இருந்து பறந்து வந்தது ஒரு ஆர்டர். ஆர்.என்.ரவியை இந்திய அரசின் பிரதிநிதியாக , நாகா அமைப்புகளோடு பேச்சுவார்த்தை நடத்தும் குழுவின் தலைவராக நியமிக்கிறோம் என உத்தரவிடப்பட்டிருந்தது. ஆடிப்போனது உள்துறை அமைச்சகம். ஏனெனில் அதுவரை உள்நாட்டு பிரச்னைகளில் பிரதம அமைச்சகம் அமைச்சர் மூலமாக அன்றி நேரடியாக தலையிட்டதில்லை. ஆர்.என்.ரவியின் நியமனம் அப்படிப்பட்ட முறையை மாற்றி அமைத்தது. காரணம் அஜித் தோவல். ஆம், பழையை நட்பை புதுப்பித்தார். வடகிழக்கோடு ஈடு கொடுக்க ரவியால் மட்டுமே முடியும் என நம்பினார் தோவல். ஓகே சொன்னார் மோடி.

Thirumavalavan | புதிய ஆளுநரை திரும்ப பெற வேண்டும் - திருமாவளவன் வலியுறுத்தல்

இதன் காரணமாகத்தான் நாகாலந்து அமைதி பேச்சுவார்த்தை குழு தலைவராக நியமிக்கப்பட்டார். ஆனால் மத்திய அரசு நினைத்தது போல நாகாலாந்து பேச்சுவார்த்தை எளிதில் முடியவில்லை. நாகாலாந்தை சேர்ந்த அனைத்து குழுக்களுக்கும் அழைப்பு விடுத்தார். எப்போது அழைத்தாலும் பேச வருவதாக சொன்னார். சுமார் 30 கட்ட பேச்சுவார்த்தை நடந்தது. நாகாலாந்து போராட்டக்குழுவை சேர்ந்த NSCN – IM அமைப்போடு அமைதி 2015ம் ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் ரவி. இதற்கு மற்ற அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்தன. ரவி ஒட்டுமொத்த போராட்டத்தை ஒடுக்க நினைப்பதாகவும் மக்களுக்குள் பிரிவினை உண்டாக்க நினைப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது.

ஆனால் பெரும்பாலான குழுக்களை உள்ளடக்கிய அமைப்பான NSCN – IM உடன் முழுமையான பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் மற்ற யாரும் தம்முடன் பேசவில்லை என்று ரவி பதிலளித்தார். இந்த ஒப்பந்தத்துக்கு பிறகு நாகாலாந்தில் இயல்பு வாழ்க்கை திரும்பியது. அதன் பிறகு 2017ம் ஆண்டில் இன்னும் சில அமைப்புகளோடு பேச்சுவார்த்தை நடத்தி அவர்களோடு அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார் ரவி.

ஒரே ஆண்டில் ஓயாத பேச்சுவார்த்தை நடத்தி வெற்றிகரமாக முடித்த ஆர்.என்.ரவிக்கு ஆளுநர் பதவி தேடி வந்தது. எந்த மாநிலத்துக்கு அமைதி ஒப்பந்தம் செய்ய அனுப்பப்பட்டாரோ அதே மாநிலத்தின் ஆளுநராக நியமிக்கப்பட்டார் ரவி. இந்நிலையில்தான் இப்போது மாற்றப்படுவார், இதோ மாற்றிவிட்டார்கள் என பேசப்பட்டு வந்த பன்வாரிலால் புரோஹித்தின் மாற்றம் நடக்க, தமிழ்நாடு ஆளுநராக நியமிக்கப்பட்டுள்ளார் ரவி.

கண்காணிப்பிலும் உளவிலும் வல்லவரான ஆர்.என்.ரவிக்கு தமிழகத்தில் காத்திருக்கும் அசைண்மென்ட் என்ன என்பதை காலம் சொல்லும்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IPL Auction 2025 LIVE:  போட்டி போட்ட RCB மற்றும் MI.. 12.50 கோடிக்கு ஏலம் போன் ஹேசில்வுட்
IPL Auction 2025 LIVE: போட்டி போட்ட RCB மற்றும் MI.. 12.50 கோடிக்கு ஏலம் போன் ஹேசில்வுட்
IPL Expensive Player List: மாஸ் காட்டிய பண்ட், ஸ்ரேயஸ்.. ஐபிஎல்லில் அதிக விலைக்கு ஏலம் போன டாப் 10  வீரர்கள் பட்டியல் இதோ!
IPL Expensive Player List: மாஸ் காட்டிய பண்ட், ஸ்ரேயஸ்.. ஐபிஎல்லில் அதிக விலைக்கு ஏலம் போன டாப் 10 வீரர்கள் பட்டியல் இதோ!
Good Bad Ugly : காப்பியடிச்ச பாட்டு வேண்டாம்..கோபத்தில் இசையமைப்பாளரை மாற்றிய குட் பேட் அக்லி பட இயக்குநர்
Good Bad Ugly : காப்பியடிச்ச பாட்டு வேண்டாம்..கோபத்தில் இசையமைப்பாளரை மாற்றிய குட் பேட் அக்லி பட இயக்குநர்
"நாயகன் மீண்டும் வரான்" வீட்டுக்கு வரும் அஸ்வின்.. சிஎஸ்கேவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

IPL Auction 2025 | மீண்டும் இந்திரன் சந்திரன் Combo!CSK வில் RRR கேங்!தோனியின் மாஸ் ப்ளான் | AshwinIPL Auction 2025 | ராகுலின் STATS தெரியுமா?கோட்டைவிட்ட RCB - CSK..தட்டி தூக்கிய டெல்லி | KL RahulAR Rahman Saira Divorce Reason : வலியும் வேதனையும் அதிகம்  பிரிந்த AR ரஹ்மான்  சாய்ரா பானுIPL Auction 2025 :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IPL Auction 2025 LIVE:  போட்டி போட்ட RCB மற்றும் MI.. 12.50 கோடிக்கு ஏலம் போன் ஹேசில்வுட்
IPL Auction 2025 LIVE: போட்டி போட்ட RCB மற்றும் MI.. 12.50 கோடிக்கு ஏலம் போன் ஹேசில்வுட்
IPL Expensive Player List: மாஸ் காட்டிய பண்ட், ஸ்ரேயஸ்.. ஐபிஎல்லில் அதிக விலைக்கு ஏலம் போன டாப் 10  வீரர்கள் பட்டியல் இதோ!
IPL Expensive Player List: மாஸ் காட்டிய பண்ட், ஸ்ரேயஸ்.. ஐபிஎல்லில் அதிக விலைக்கு ஏலம் போன டாப் 10 வீரர்கள் பட்டியல் இதோ!
Good Bad Ugly : காப்பியடிச்ச பாட்டு வேண்டாம்..கோபத்தில் இசையமைப்பாளரை மாற்றிய குட் பேட் அக்லி பட இயக்குநர்
Good Bad Ugly : காப்பியடிச்ச பாட்டு வேண்டாம்..கோபத்தில் இசையமைப்பாளரை மாற்றிய குட் பேட் அக்லி பட இயக்குநர்
"நாயகன் மீண்டும் வரான்" வீட்டுக்கு வரும் அஸ்வின்.. சிஎஸ்கேவின் மாஸ்டர் ஸ்ட்ரோக்!
Rishabh Pant: 10 நிமிஷத்தில் ஸ்ரேயாஸை காலி செய்த ரிஷப் பண்ட்.. ஏலத்தில் தட்டித்தூக்கிய LSG!
10 நிமிஷத்தில் ஸ்ரேயாஸை காலி செய்த ரிஷப் பண்ட்.. தட்டித்தூக்கிய LSG!
Mohammed Siraj : கோலியின் செல்லப்பிள்ளையை கோட்டைவிட்ட ஆர்சிபி! சோகத்தில் RCB ரசிகர்கள்
Mohammed Siraj : கோலியின் செல்லப்பிள்ளையை கோட்டைவிட்ட ஆர்சிபி! சோகத்தில் RCB ரசிகர்கள்
PM Modi: ” சிட்டுக்குருவி ரெம்ப தூரமா போயிருச்சு ” சிட்டுக்குருவி குறித்து உருக்குமாக பேசிய பிரதமர் மோடி.!
PM Modi: ” சிட்டுக்குருவி ரெம்ப தூரமா போயிருச்சு ” சிட்டுக்குருவி குறித்து உருக்குமாக பேசிய பிரதமர் மோடி.!
Shreyas Iyer: அடிச்சது ஜாக்பாட்.. ஏத்திவிட்ட டெல்லி.. அடித்துத்தூக்கிய பஞ்சாப்
Shreyas Iyer: அடிச்சது ஜாக்பாட்.. ஏத்திவிட்ட டெல்லி.. அடித்துத்தூக்கிய பஞ்சாப்
Embed widget