மேலும் அறிய
Advertisement
cuddalore accident: கடலூர் - சாலைவிபத்தில் 2 பெண்கள், 2 வயது குழந்தை உட்பட 4 பேர் பலி
கடலுர் மாவட்டம் திட்டக்குடி அருகே ஆவட்டி கிராமத்தில் பேருந்து மோதியதால் கார் மரத்தில் மோதியதில் 3 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சாலை விபத்தில் 4 பேர் பலி:
சென்னையில் இருந்து திருச்சி நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் சென்ற அரசு பேருந்து, முன்னே சென்று கொண்டிருந்த கார் மீது முட்டியது. இதில் கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோரத்தில் இருந்த வேப்ப மரத்தின் மீது வேகமாக மோதியது. கடலூர் திட்டக்குடி அடுத்துள்ள ஆவட்டி கூட்டு ரோட்டில் தேசிய நெடுஞ்சாலையில் நடந்த, இந்த விபத்தில் காரில் இருந்த 2 பெண்கள் ஒரு குழந்தை உட்பட 4 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.
தகவலறிந்து வந்த போலீசார் இறந்த 4 பேரின் உடலையும் மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். படுகாயமடைந்த முதியவர் ஒருவர் சிகிச்சைக்காக பெரம்பலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளார். விபத்து குறித்து ராமநத்தம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
கல்வி
அரசியல்
கிரிக்கெட்
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion