Rain Update: தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழை... வானிலை ஆய்வு மையம் தகவல்!
மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் இன்று முதல் ஐந்து நாட்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும்.
![Rain Update: தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழை... வானிலை ஆய்வு மையம் தகவல்! Rain update rain for five days from today in all over Tamilnadu Rain Update: தமிழ்நாட்டில் இன்று முதல் 5 நாட்களுக்கு மிதமான மழை... வானிலை ஆய்வு மையம் தகவல்!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/06/f7e16a6e226ad8cbe7a3024ccaae10081659774655_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
தமிழ்நாட்டில் இன்று தொடங்கி ஐந்து நாட்களுக்கு மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
மேலும், மேற்கு திசைக்காற்றின் வேக மாறுபாடு காரணமாக தமிழ்நாட்டின் நீலகிரி, கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், திருப்பூர், தென்காசி ஆகிய ஆறு மாவட்டங்களில் இன்று கன மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) August 6, 2022
“மேற்குத் தொடர்ச்சி மலை மாவட்டங்கள் மற்றும் அதனை ஒட்டிய மாவட்டங்களில் இன்று முதல் ஐந்து நாள்களுக்கு மிதமான மழை பெய்யக்கூடும். சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மழை பெய்யக்கூடும்.
மேலும், இன்றும், அடுத்த இரண்டு நாள்களுக்கும் கன்னியாகுமரி, திருநெல்வேலி, திண்டுக்கல், தென்காசி, தேனி, வட தமிழ்நாட்டின் சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது" எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) August 5, 2022
கடந்த 24 மணி நேரத்தில் நீலகிரி மாவட்டம், அவலாஞ்சியில் 32 செ.மீ மழை பதிவாகியுள்ளது. அதே போல், நேற்று (ஆக.05) மேல்பவானியில் 20 செ.மீ, பந்தலூர் தாலுகாவில் 14 செ.மீ மழையும் பதிவாகியுள்ளது.
மேலும் படிக்க: Friendship Day 2022 Wishes: உலகப்போரால் உருவான நண்பர்கள் தினம்! தோள் கொடுக்கும் தோழமைக்காக ஒருநாள்! வரலாறு இதுதான்!
கேரளாவில் பருவ மழை தீவிரமடைந்துள்ளது. அதே வேளை தமிழ்நாட்டின் கடலோரப் பகுதிகளில் வளிமண்டலத்தில் மேல் அடுக்கு சுழற்சி நிலவுகிறது. இந்நிலையில் தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் பரவலாக மழை பெய்து வருகிறது.
அடுத்த ஏழு தினங்களுக்கான வானிலை முன்னறிவிப்பு - சென்னை pic.twitter.com/LDtzTVTsVo
— Tamilnadu Weather-IMD (@ChennaiRmc) August 6, 2022
தொடர் கனமழை எதிரொலியாக ஒகேனக்கல், மேட்டூர் அணைகளுக்கு நீர்வரத்து கணிசமாக அதிகரித்துள்ளது. முன்னதாக மழை தொடர்ந்து பெய்து வருவதால் கேரள மக்கள் தேவையின்றி வெளியில் வர வேண்டாம் என்று கேரள மாநில அரசு வேண்டுகோள் விடுத்திருந்தது. மழைநீர் தேங்கியுள்ள இடங்களில் இளைஞர்கள் செல்பி எடுக்கும் மோகத்தை கைவிட வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)