மேலும் அறிய

Kamal Haasan: கிராம சபைக் கூட்டங்கள் முறையாக நடத்தப்படுவதை உறுதி செய்யுங்கள் - கமல்ஹாசன்

கிராம சபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை பொதுவெளியில் வைக்கவும், கூட்டங்களை வீடியோ பதிவு செய்வதையும் நாம் உறுதிசெய்ய வேண்டும்.

காந்தி ஜெயந்தி அன்று  கிராம சபைக் கூட்டங்கள் முறையாக நடத்தப்படுவதை உறுதிசெய்ய வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கேட்டுக்கொண்டுள்ளார்.

இதுதொடர்பாக கமல்ஹாசன் வெளியிட்ட அறிக்கை:

உயிரே உறவே தமிழே!

வணக்கம்,  

கிராம சபைகளைப் பொருத்தவரை ‘கடைசி மனிதனுக்கும் அதிகாரம்’ எனும் காந்தியின் கனவே நம்முடைய கனவு. கிராம சபைகளின் முக்கியத்துவத்தை தமிழகத்தின் மூலைமுடுக்கெல்லாம் கொண்டு சேர்க்கும் பணியை மக்கள் நீதி மய்யம் திறம்படச் செய்தது எனும் பெருமை நமக்கு உண்டு. 

கிராம சபைகளைக் கண்டு அஞ்சுவதும், ஏதாவது ஒரு காரணம் சொல்லி அதை நடத்தாமல் இருப்பதிலும் ஆண்ட கட்சியும், ஆளும் கட்சியும் ஒன்றுக்கொன்று சளைத்தவை அல்ல. கொரோனா பெருந்தொற்று இவர்களுக்கு மிக வசதியான ஒரு காரணமாக அமைந்தது. தேர்தல் பிரச்சாரம், வாக்குப்பதிவு, வாக்கு எண்ணிக்கை, பதவியேற்பு என எதையுமே தடுக்காத கொரோனா, கிராம சபை நடத்தப்படவேண்டிய நாள் வந்ததும் தலைவிரித்தாடிவிடும். 

2020-ஆம் ஆண்டு ஜனவரி 26-ஆம் தேதி நடந்த கிராம சபைதான் கடைசியாக நடந்த கூட்டம். பல்வேறு தரப்பின் அழுத்தத்தினாலும், ‘கிராம சபை நடத்தும் என் உரிமையில் மாநில அரசு தலையிட முடியாது’ என ஒரு பஞ்சாயத்துத் தலைவர் தொடர்ந்த வழக்கின் அழுத்தத்தினாலும் தமிழக அரசு, வரும் அக்டோபர் 2-ஆம் தேதி காந்தி ஜெயந்தி அன்று கிராம சபை நடத்த ஒப்புக்கொண்டுள்ளது.  சுமார் 615 நாட்களுக்குப் பிறகு நடைபெறவிருக்கும் கிராம சபை இது.  

ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ள 9 மாவட்டங்கள் தவிர்த்து பிற மாவட்டங்களில்தான் கிராம சபை நடைபெற இருக்கிறது. மக்கள் நீதி மய்யத்திற்கு இது முதல் உள்ளாட்சித் தேர்தல். நானும் கட்சியின் மூத்த நிர்வாகிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம். தேர்தல் நடைபெறாத மாவட்டங்களைச் சேர்ந்த மக்கள் நீதி மய்ய உறுப்பினர்கள் அனைவரும் கிராம சபைக் கூட்டங்களில் அவசியம் கலந்துகொள்ள வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.  

கிராம சபைக் கூட்டத்தின் முக்கியத்துவத்தைப் பற்றி இப்போதே உங்களைச் சுற்றி இருப்பவர்களிடம் எடுத்துச் சொல்லி, அவர்களையும் பங்கேற்கச் செய்யுங்கள். கிராமங்களில் நிலவும் பிரச்சனைகள் குறித்து கூட்டத்தில் அனைத்து தரப்பு மக்களின் குரல்களும் வலுவாக ஒலிக்க வேண்டும். சுற்றுச்சூழல் மாசுபாடு, இயற்கைவளச் சுரண்டல், டாஸ்மாக், கைவிடப்படும் நீர்நிலைகள் குறித்து கவனம்கொள்ள கிராம சபைக் கூட்டங்கள் உதவட்டும். 

இந்தச் சபையில் நிறைவேற்றப்படும் தீர்மானங்கள் மிக வலுவானவை. கிராம சபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்படும் தீர்மானங்களை பொதுவெளியில் வைக்கவும், கூட்டங்களை வீடியோ பதிவு செய்வதையும் நாம் உறுதிசெய்ய வேண்டும். பல கிராம சபைக் கூட்டங்களில் கலந்துகொண்ட அனுபவம் மக்கள் நீதி மய்ய உறுப்பினர்கள், நிர்வாகிகளுக்கு உண்டு. அந்த அனுபவங்களைக் கொண்டு கிராம சபைக் கூட்டங்கள் முறையாக நடத்தப்படுவதை உறுதிசெய்யுங்கள். கடைசி மனிதரும் அரசியல் தெளிவு பெற்று தன் அதிகாரங்களை உணரும் வரை நம் பணி தொய்வில்லாமல் தொடர வேண்டும்.  நாளை நமதே!  

இன்றைய முக்கியச் செய்திகள் இதோ:

வேலூர் மாவட்டத்தில் வெற்றி பெறப்போவது யார்?

விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மீது தடியடி

அழகுக்கு அப்பாலும் ஜொலித்தவர் சில்க்!

மாலையில் சஸ்பெண்ட்... இரவில் ரத்து... ஆசிரியை மகாலட்சுமிக்கு நடந்தது என்ன?

மேல்மருவத்தூர் பங்காரூஅடிகளார் மனைவிக்கு இவ்வளவு சொத்தா?

Maharastra NEET scam: நீட் மோசடிகளின் கூடாரம்... - பா.ம.க. ராமதாஸ் கண்டன அறிக்கை!
 
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
H-1B Visa Renewal Issue: அமெரிக்கா கெடுபிடி; தள்ளி வைக்கப்பட்ட விசா நேர்காணல்; H-1B-ஐ புதுப்பிக்க இந்தியா வந்தவர்கள் தவிப்பு
அமெரிக்கா கெடுபிடி; தள்ளி வைக்கப்பட்ட விசா நேர்காணல்; H-1B-ஐ புதுப்பிக்க இந்தியா வந்தவர்கள் தவிப்பு
போராடும் செவிலியர்கள் பணி நிரந்தரம்? பொங்கலுக்கு முன் பணி நியமன ஆணை- அமைச்சர் மா.சு. முக்கிய தகவல்!
போராடும் செவிலியர்கள் பணி நிரந்தரம்? பொங்கலுக்கு முன் பணி நியமன ஆணை- அமைச்சர் மா.சு. முக்கிய தகவல்!
ABP Premium

வீடியோ

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்
”5 வருசம் நான் தான் CM
விஜய்யுடன் 3 மணி நேரம் மீட்டிங்செங்கோட்டையன் கொடுத்த IDEA! MISS ஆன ஆனந்த்
Bus Accident | தூங்கி வழிந்த ஓட்டுநர் ஆம்னி பஸ் கவிழ்ந்து விபத்து!அந்தரத்தில் தொங்கும் காட்சிகள்
Thiruparankundram Case | “சர்வே கல்லா? சமணர் தூணா?”திருப்பரங்குன்றம் தீபம் சர்ச்சை நீதிமன்றத்தில் காரசார விவாதம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
Padayappa: வசூல்னு வந்துட்டா கில்லிதான்.. விஜயிடம் வீழ்ந்த ரஜினியின் படையப்பா ரீரிலீஸ் - மொத்த கலெக்‌ஷன் எப்படி?
H-1B Visa Renewal Issue: அமெரிக்கா கெடுபிடி; தள்ளி வைக்கப்பட்ட விசா நேர்காணல்; H-1B-ஐ புதுப்பிக்க இந்தியா வந்தவர்கள் தவிப்பு
அமெரிக்கா கெடுபிடி; தள்ளி வைக்கப்பட்ட விசா நேர்காணல்; H-1B-ஐ புதுப்பிக்க இந்தியா வந்தவர்கள் தவிப்பு
போராடும் செவிலியர்கள் பணி நிரந்தரம்? பொங்கலுக்கு முன் பணி நியமன ஆணை- அமைச்சர் மா.சு. முக்கிய தகவல்!
போராடும் செவிலியர்கள் பணி நிரந்தரம்? பொங்கலுக்கு முன் பணி நியமன ஆணை- அமைச்சர் மா.சு. முக்கிய தகவல்!
TVK Vijay Car: விஜய்யின் Lexus LM 350h கார் இத்தனை கோடியா? அப்படி என்ன இருக்குதுப்பா அந்த கார்ல!
TVK Vijay Car: விஜய்யின் Lexus LM 350h கார் இத்தனை கோடியா? அப்படி என்ன இருக்குதுப்பா அந்த கார்ல!
சிறுபான்மையினர் வாக்குகளுக்கு மல்லு கட்டும் திமுக - தவெக! என்ன செய்யப்போகிறது அதிமுக?
சிறுபான்மையினர் வாக்குகளுக்கு மல்லு கட்டும் திமுக - தவெக! என்ன செய்யப்போகிறது அதிமுக?
விஜய் கட்சி: QR கோடு விவகாரம்! தொண்டர்கள் அதிருப்தி, கட்சியினர் ஏமாற்றம்? உண்மை என்ன?
விஜய் கட்சி: QR கோடு விவகாரம்! தொண்டர்கள் அதிருப்தி, கட்சியினர் ஏமாற்றம்? உண்மை என்ன?
அதிமுகவை அழித்து விஜயை வளரவிடுகிறது பாஜக; 2026-ல் இவர்களுடன் தான் கூட்டணி: தமிமுன் அன்சாரி அதிரடி..!
அதிமுகவை அழித்து விஜயை வளரவிடுகிறது பாஜக; 2026-ல் இவர்களுடன் தான் கூட்டணி: தமிமுன் அன்சாரி அதிரடி..!
Embed widget