மேலும் அறிய

போராடும் செவிலியர்கள் பணி நிரந்தரம்? பொங்கலுக்கு முன் பணி நியமன ஆணை- அமைச்சர் மா.சு. முக்கிய தகவல்!

போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

5ஆவது நாளாகப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். பொங்கலுக்கு முன்பு பணி நியமன ஆணைகள் வழங்கப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். இதனால், செவிலியர்கள் பணி நிரந்தரம் செய்யப்பட உள்ளார்களா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

 2015ஆம் ஆண்டு முதல் இப்போது வரை மொத்தம் 14 ஆயிரம் செவிலியர்கள் ஒப்பந்த முறையில் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இவர்கள் அனைவரும் மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் போட்டித்தேர்வு நடத்தித்தான் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் அனைவரும் இரு ஆண்டுகளுக்குப் பிறகு பணி நிரந்தரம் செய்யப்படுவர் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.

 8,322 செவிலியர்கள் போராட்டம்

ஆனால், அவர்களில் 6 ஆயிரம் பேர் மட்டுமே இதுவரை பணி நிரந்தரம் செய்யப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள 8,322 செவிலியர்கள் இன்னும் நிரந்தரமாக்கப்படவில்லை. இதை எதிர்த்து பல ஆண்டுகளாக அவர்கள் போராடி வருகின்றனர்.

அதேபோல கொரோனா காலத்தில் பணியாற்றிய செவிலியர்கள் அனைவரும் பணி நிரந்தரம் செய்யப்படுவர் என்றும் அறிவிப்பு வெளியாகி இருந்தது. எனினும் இதுவரை இந்த அறிவிப்பு நிறைவேற்றப்படவில்லை. 

5ஆம் நாளாகப் போராட்டம்

சுமார் 10 ஆண்டுகளாக ஒப்பந்த செவிலியர்களாக பணியாற்றி வரும் அவர்கள் பணி நிரந்தரம் கோரி கடந்த 18ஆம் தேதி முதல் போராட்டம் நடத்தி வருகின்றனர். குறிப்பாக சென்னை, தஞ்சை, தூத்துக்குடி உள்ளிட்ட மாவட்டத் தலைநகரங்களில் 5ஆம் நாளாக ஒப்பந்த செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பணி நிரந்தரம், ஊதிய உயர்வு உள்ளிட்ட 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இந்த நிலையில், போராட்டத்தில் ஈடுபட்டுள்ள செவிலியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார். செவிலியர்கள் உடனான பேச்சுவார்த்தைக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

செவிலியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும்

இதுகுறித்து அவர் மேலும் கூறும்போது, ‘’புதிதாக 723 காலி இடங்கள் உருவாக்கப்பட்டு உள்ளன. கொரோனா காலத்தில் பணியாற்றிய 723 செவிலியர்களுக்கு தொகுப்பூதிய அடிப்படையில் பணி வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது. பொங்கலுக்கு முன்பு பணி நியமன ஆணைகள் வழங்கப்படும். அடுத்தடுத்து காலி இடங்கள் தொடர்ந்து உருவாக்கப்படும்.  

புதிதாக செவிலியர் கல்லூரி உருவாக்கப்படும். அடுத்தடுத்த கோரிக்கைகள் குறித்து பரிசீலிக்கப்பட்டு, நிறைவேற்றப்படும் என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவித்துள்ளார்.

An Engineer by Education, Journalist by Profession, Ramani Prabha Devi hails from a tiny village in Tiruppur. Her agricultural background influenced to take part in the welfare of society.She quit her job from IT industry and joined Journalism with utmost enthusiasm. She has been working in Tamil media for the past 11 years. Her areas of focus are Education, Jobs, Politics, Psychology, Women, Health, Positive and Social Awareness news. She is the author of 3 books and got many awards.  She keenly researches and provides accurate and detailed updated news on Education, Jobs which are important to each and everyone. In addition to that, she writes news and articles related to politics, national and international events to the public. Currently she works as Associate Producer in ABP NADU Tamil website.

Read More

தலைப்பு செய்திகள்

" காதலனால் கர்ப்பமான நர்ஸ் " எனக்கு எதுவுமே தெரியாது என சாதித்த நர்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?

வீடியோ

CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
DMK vs TVK: தவெக வெள்ளை அறிக்கை VS தவெக பட்ஜெட்! கம்பேர் செய்த திமுக - பரபரப்பு அறிக்கை
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
CM Joseph Vijay: திமுக, அதிமுக MPக்களுக்கு முதல்வர் விஜய் திடீர் அழைப்பு.. என்ன காரணம்?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
Maruti Car Offers: ரூபாய் 1.55 லட்சம் தள்ளுபடி.. ஆடி மாத ஆஃபரை அள்ளித்தெளித்த மாருதி சுசுகி - எந்தெந்த காருக்கு?
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
முதல் பட்ஜெட்டிலேயே பெரும் ஏமாற்றம்... கரும்பு விவசாயிகள் சங்க செயலாளர் வேதனை
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
Sekar Babu: ஓரங்கட்டப்படுகிறாரா சேகர்பாபு? உளறிக்கொட்டிய திமுக எம்எல்ஏ - குறைக்கப்படுகிறதா அதிகாரம்?
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
சென்னைவாசிகளுக்கு செம்ம நியூஸ்! தாம்பரத்தில் திடீரென உருவாகும் ‘கிரீன் மேஜிக்’..!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
டாஸ்மாக் மதுபானங்கள் விலை உயர்வா? .. குடிமகன்கள் அதிர்ச்சி.. அமைச்சர் விக்னேஷ் சொன்ன பதில்!
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Chennai Traffic: சென்னையில் 3 நாட்கள் போக்குவரத்தில் திடீர் மாற்றம்! எந்த ஏரியாவில்? எதற்காக தெரியுமா?
Embed widget