துரோகிகளால் பாழுங்கிணற்றில் தள்ளப்பட்டு அரசனான இளைஞன்- கிறிஸ்துமஸ் விழாவில் குட்டிக்கதை சொன்ன விஜய்!
அந்த இளைஞர் மீண்டு வந்து ஒரு நாட்டுக்கே அரசனாகி, தன் சகோதரர்களையும் நாட்டையும் காப்பாற்றினார். அந்த குறிப்பிட்ட கதை யாரைப் பற்றிய கதை என்று நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை- விஜய்.

தவெக சார்பில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா, செங்கல்பட்டு மாவட்டம் மாமல்லபுரம் தனியார் விடுதியில் இன்று நடைபெற்றது. இதில் தவெக தலைவர் விஜய் பேசியதாவது:
’’இதுவோர் அன்பான தருணம். அன்பும் கருணையும்தான் எல்லாவற்றுக்கும் அடிப்படைதான். தாயுள்ளம் கொண்ட மண் தமிழ்நாடு. பொங்கல், தீபாவளி, ரம்ஜான், கிறிஸ்துமஸ் என எல்லா பண்டிகைகளையும் சேர்ந்து கொண்டாடும் ஊர் நம்முடையது. நாம் எல்லோரும் சகோதரர்கள்தான். மத்தவங்க நம்பிக்கையை மதிக்க கத்துக்கணும்;
ஒளி பிறக்கும், அது நம்மை வழிநடத்தும்
கண்டிப்பாக ஒளி பிறக்கும், அது நம்மை வழிநடத்தும். சமூக, சம்யா நல்லிணக்க்கத்தை காப்பதில் 100% உறுதியாக இருப்போம். உண்மையான நம்பிக்கை மத நல்லிணக்கத்தை விதைக்கும், மற்றோரின் நம்பிக்கையை விதைக்க கற்றுத் தரும்.
ஒரு இளைஞன்மீது பொறாமை கொண்டு, அவனுக்கு எதிராக சொந்த சகோதரர்களே கிணற்றில் தள்ளி விட்ட கதை உண்டு. அந்த இளைஞர் மீண்டு வந்து ஒரு நாட்டுக்கே அரசனாகி, தன் சகோதரர்களையும் நாட்டையும் காப்பாற்றினார். அந்த குறிப்பிட்ட கதை யாரைப் பற்றிய கதை என்று நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை.
எவ்வளவு பெரிய எதிரிகளையும் வெல்லலாம்
எவ்வளவு பெரிய எதிரிகளையும் வெல்லலாம் என்ற நம்பிக்கையை அந்த கதைகள் நமக்குத் தருகின்றன. நம்பிக்கை குறித்த பைபிளில் வரும் கதைகள், எவ்வளவு பெரிய உறுதியை அளித்துச் செல்கின்றன? அந்த நம்பிக்கையுடன் கிறிஸ்துமஸ் பண்டிகையைக் கொண்டாடுவோம்’’ என்று தவெக தலைவர் விஜய் பேசினார்.






















