மேலும் அறிய

தர்காவில் சந்தனக்கூடு விழா! ”இந்துக்களை விட மாட்டீங்களா” திருப்பரங்குன்றத்தில் மோதல்

திருப்பரங்குன்றம் சிக்கந்தர் தர்கா சந்தனக்கூடு விழாவை முன்னிட்டு மீண்டும் மோதல் ஆரம்பமாகியுள்ளது. தீபம் ஏற்றத் தடை விதித்து விட்டு கொடியேற்ற மட்டும் அனுமதி கொடுக்கலாமா என போலீசாருடன் மக்கள் கடும் வாக்குவாதம் செய்த நிலையில், பரபரப்புக்கு மத்தியில் கொடியேற்றம் நடந்தது.

திருப்பரங்குன்றம் மலைமேல் உள்ள தூணில் தீபம் ஏற்றும் விவகாரத்தின் வழக்கு விசாரணையில் இருக்கிறது. இந்தநிலையில் வரும் ஜனவரி 6ஆம் தேதி பெரிய ரத வீதியில் உள்ள சிக்கந்தர் பாதுஷா அவுலியா தர்கா சந்தனக்கூடு விழா நடைபெற உள்ளது. விழாவை முன்னிட்டு மலை மீது உள்ள சிக்கந்தர் தர்காவில் கொடியேற்ற இஸ்லாமியர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இருபதாம் தேதி மலை மேல் உள்ள தர்கா கொடிக்கம்பத்தை பழுது பார்ப்பதற்காக மலைப்பாதை வழியாக இஸ்லாமியர்கள் அனுமதிக்கப்பட்டனர். அப்போது மலைப்பாதையில் உள்ள பழனி ஆண்டவர் கோவில் தெருவை சேர்ந்த பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து போலீசார் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

மலையடிவாரத்தில் உள்ள தங்களை மலைக்குச் செல்ல அனுமதிக்காமல் வெளியூரில் இருந்து வரக்கூடிய இஸ்லாமியர்களை எப்படி அனுமதிக்கலாம் என கூறி கையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட 20க்கும் மேற்பட்டோரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தனர். பாஜக மூத்த தலைவர் ஹெச். ராஜா உள்ளிட்டோர் அவர்களை நேரில் சந்தித்து பேசினார். 

இந்த நிலையில் சந்தனக்கூடு விழா பெரியார் ரத வீதியில் உள்ள தர்காவில் இரவு 8 மணி அளவில் தொடங்கியது. அப்போது அப்பகுதி மக்கள் கையில் அகல் விளக்கை ஏந்தி மலை மேல் தீபம் ஏற்ற செல்வதாக கூறி அரோகரா கோசமிட்டு போலீசார் உடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து மற்றொரு பாதையில் கையில் அகல் விளக்குடன் சென்று தீபம் ஏற்ற முயற்சித்தவர்களை போலீசார் தடுத்து நிறுத்தியதால் தாங்கள் கொண்டு வந்த தீபத்தை பழனியாண்டவர் கோவிலில் ஏற்ற அனுமதி தர வேண்டும் என கூறினர். ஒருவருக்கு மட்டும் அனுமதி அளித்ததால் கோயில் முன்பு பெண் ஒருவர் விளக்கேற்றி வழிபாடு செய்தார்.

இதனை தொடர்ந்து பல்வேறு பரபரப்புகளுக்கு பின் திருப்பரங்குன்றம் மலை மீது உள்ள தர்காவில் சந்தனக்கூடு திருவிழாவையொட்டி கொடியேற்றப்பட்டது.

மேலும் படிக்க
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Seeman: ”ஸ்டாலின் மன்னிப்பு கோரினார், நீங்க என்ன செய்ய போறிங்க?” CM விஜயை கடுமையாக சாடிய சீமான்
”ஸ்டாலின் மன்னிப்பு கோரினார், நீங்க என்ன செய்ய போறிங்க?” CM விஜயை கடுமையாக சாடிய சீமான்
CM Vijay: காத்திருக்கும் 5 மாநில தேர்தல்; விஜய்யை களத்திற்கு கூப்பிடும் காங்கிரஸ்? தளபதியின் முடிவு என்ன?
CM Vijay: காத்திருக்கும் 5 மாநில தேர்தல்; விஜய்யை களத்திற்கு கூப்பிடும் காங்கிரஸ்? தளபதியின் முடிவு என்ன?
சூரனை வதம் செய்த முருகப்பெருமான்! சூரசம்ஹாரம் நமக்கு உணர்த்தும் மகத்தான ஆன்மிக ரகசியம் தெரியுமா?
சூரனை வதம் செய்த முருகப்பெருமான்! சூரசம்ஹாரம் நமக்கு உணர்த்தும் மகத்தான ஆன்மிக ரகசியம் தெரியுமா?
விவசாயிகளே... உங்களிடம் இந்த எண் இல்லையென்றால் PM-KISAN நிதி கிடைக்காது!
விவசாயிகளே... உங்களிடம் இந்த எண் இல்லையென்றால் PM-KISAN நிதி கிடைக்காது!

வீடியோ

Minister Inspection : ”எல்லாமே அப்படியே தான் இருக்கு ஒரு நாளும் வேலை நடக்கல”அதிகாரியை விளாசிய அமைச்சர்
MK Stalin on Vijay :
Rowdy Sullan Madhan : ஜாமீனில் வெளிவந்த ரவுடி ஓட ஓட விரட்டி வெட்டிக் கொலை சிவகங்கையில் கொடூரம்!
Mridangam Performance : 8 வயது சிஷ்யனை மேடையேற்றிய மிருதங்க வித்வான் ராமச்சந்திரன்!பக்தர்கள் கரவொலி
5 family members dead : தூக்கத்திலேயே 5 பேர் பலி! கொலையா? நூடுல்ஸ் காரணமா? விசாரணையில் திடுக் தகவல்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: காத்திருக்கும் 5 மாநில தேர்தல்; விஜய்யை களத்திற்கு கூப்பிடும் காங்கிரஸ்? தளபதியின் முடிவு என்ன?
CM Vijay: காத்திருக்கும் 5 மாநில தேர்தல்; விஜய்யை களத்திற்கு கூப்பிடும் காங்கிரஸ்? தளபதியின் முடிவு என்ன?
தனிஷ்க் கொள்ளை: 4வது நாளாக தேடுதல்; முக்கிய குற்றவாளி நிஷாந்தை நெருங்கியது காவல்துறை!
தனிஷ்க் கொள்ளை: 4வது நாளாக தேடுதல்; முக்கிய குற்றவாளி நிஷாந்தை நெருங்கியது காவல்துறை!
திருவிழா தொடங்கியது! திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கொடியேற்றம்.. பக்தர்கள் பரவசம்!
திருவிழா தொடங்கியது! திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் கொடியேற்றம்.. பக்தர்கள் பரவசம்!
கடனில் தவித்த காதலி, உருகிப்போன காதலன்..! தனிஷ்க் கடையில் காட்டிக் கொடுத்த டாட்டூ - முழு சம்பவம்
கடனில் தவித்த காதலி, உருகிப்போன காதலன்..! தனிஷ்க் கடையில் காட்டிக் கொடுத்த டாட்டூ - முழு சம்பவம்
IND vs NZ: மீண்டும் சொதப்பிய இந்திய பேட்டிங்.. ரோ-கோ-க்கு என்னாச்சு? கம்பேக் கட்டாயம் பாய்ஸ்
IND vs NZ: மீண்டும் சொதப்பிய இந்திய பேட்டிங்.. ரோ-கோ-க்கு என்னாச்சு? கம்பேக் கட்டாயம் பாய்ஸ்
Gold Rate Today: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரமா? இன்று விலை உயர்ந்ததா? குறைந்ததா? இதோ நிலவரம்!
Gold Rate Today: தங்கம் வாங்க இதுதான் சரியான நேரமா? இன்று விலை உயர்ந்ததா? குறைந்ததா? இதோ நிலவரம்!
TN Weather News: வேகமெடுக்கும் அக்வான் புயல், தமிழக மீனவர்களுக்கு வார்னிங், இன்று எங்கெல்லாம் மழை? வானிலை அறிக்கை
வேகமெடுக்கும் அக்வான் புயல், தமிழக மீனவர்களுக்கு வார்னிங், இன்று எங்கெல்லாம் மழை? வானிலை அறிக்கை
Tasmac Case: ரத்தீஷிற்கு இண்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ்..! ரூ.1000 கோடி ஊழல் வழக்கில் முக்கிய தலைகள், திமுக?
ரத்தீஷிற்கு இண்டர்போல் ரெட் கார்னர் நோட்டீஸ்..! ரூ.1000 கோடி ஊழல் வழக்கில் முக்கிய தலைகள், திமுக?
Embed widget