மேலும் அறிய
Advertisement
குவியும் கொரோனா மரணங்கள் : மதுரையில் கூடுதல் மின் தகன மேடைகளுக்கான பணிகள் தொடக்கம்..
மதுரையில் உள்ள மின் மயானத்தில் கூடுதலாக மூன்று யூனிட் மின் தகன மேடை அமைக்கும் பணி தொடக்கம் : ஓரிரு நாட்களில் பயன்பாட்டுக்கு வரும் என மாநகராட்சி நிர்வாகம் தகவல்.
மதுரையில் உள்ள மின் மயானத்தில் கூடுதலாக மூன்று யூனிட் மின் தகன மேடை அமைக்கும் பணி தொடக்கப்பட்டுள்ளது. ஓரிரு நாட்களில் பயன்பாட்டுக்கு வரும் என மாநகராட்சி நிர்வாகம் தகவல் தெரிவித்துள்ளது.
'கொரோனா' இரண்டாவது பேரலையைத் தடுக்க தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. ஆனாலும் தமிழகத்தில் கொரோனா தாக்கம் குறையவில்லை. அதற்காக ஊரடங்கை அமல்படுத்துவது, ஆக்ஸிஜன், தடுப்பூசி தட்டுப்பாடுகளைக் கருத்தில்கொண்டு அவற்றைத் தமிழகத்திலேயே உற்பத்தி செய்யவும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவலைத் தமிழக அரசால் மட்டும் தனித்திருந்து தடுத்துவிட முடியாது. அதற்குத் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசியல் தலைவர்கள் குறிப்பாகப் பொதுமக்களின் ஒத்துழைப்பு மிக மிக அவசியம். அதைத்தான் தமிழக அரசும் தொடர்ந்து வலியுறுத்திவருகிறது. இந்நிலையில் தொற்று பாதித்தவர்களின் உயிரிழப்புகளும் அதிகரித்து வருகிறது.
குறிப்பாக தமிழகத்தில் தென் மாவட்டங்களில் மிக முக்கிய பகுதியான மதுரை மாவட்டத்தில்தான் கொரோனாவுக்கு பிரத்யேகமாக சிகிச்சை அளிக்கக்கூடிய கொரோனா சிறப்பு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இங்கு தினமும் 15-க்கும் மேற்பட்டோர் தொற்றால் பாதிக்கபட்டு உயிரிழந்துவரும் நிலையில், தொற்று அறிகுறியுடன் 30-க்கும் மேற்பட்ட உயிரிழக்கும் நிலை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. இந்த நிலையில் உயிரிழந்த உடல்நிலை உறவினரிடம் வழங்கக்கூடாது என அரசு உத்தரவிட்ட நிலையில், அரசு ஆம்புலன்ஸ் மூலம் கொண்டு செல்லப்பட்டு தகனம் செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் மதுரை தத்தனேரி, மூலக்கரை (கீரைத்துரை) பகுதியில் உள்ள மின் மயானங்களில் எரியூட்டப்படுகிறது. உடலை எரியூட்ட நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டது, அதனைத் தொடர்ந்து கூடுதலாக மின் தகன மேடையில் அமைக்கப்பட வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை வலுத்தது. இதையடுத்து மதுரை மாநகராட்சி ஆணையர் இன்னும் ஓரிரு நாட்களுக்குள் புதியதாக தகன மேடைக்கு அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், மதுரை தத்தநேரி பகுதியில் ஏற்கனவே இரண்டு தகன மேடையில் உள்ள நிலையில் கூடுதலாக இரண்டு மின் தகன மேடையில் அமைக்கும் பணி தற்போது தொடங்கியுள்ளது, அதேபோன்று மூலக்கரை பகுதியிலும் மின் தகன மேடை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது, மதுரையில் கூடுதலாக 3 மின் தகன மேடை அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், இன்னும் ஓரிரு நாட்களுக்குள் பணி முடிந்து பொதுமக்களின் பயன்பாட்டுக்கு வரும் என மதுரை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இது குறித்து அதிகாரிகள் சி,"மதுரை தத்தனேரி மற்றும் கீரைத்துரையில் தலா 2 மின் மயானங்கள் செயல்பட்டு வருகிறது. தற்போது கொரோனா காலகட்டத்தில் இறப்பு விகிதம் அதிகரித்துள்ளதால் தத்தனேரியில் கூடுதலாக 3 மின்மயானம் அமைக்கும் பணி நடைபெறுகிறது. அனேகமாக இந்த வாரத்தில் பணி முடிந்துவிடும். இறந்த உடல்கள் காத்திருக்கும் சூழல் ஏற்படாது” என்றார். இது குறித்து மதுரை மாநகராட்சி ஆணையர் விசாகன் நம்மிடம்," கொரோனா காலகட்டத்தில் தொடர்ந்து செயல்பட்டு வருகிறோம். தற்போதைய அசாதாரண சூழலில் மாநகராட்சி நிர்வாகம் தயார் நிலையில் உள்ளோம்” என்றார்.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
நிதி மேலாண்மை
வணிகம்
தமிழ்நாடு
இந்தியா
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion