MONTHA Cyclone: வருகிறது MONTHA புயல்; எப்போது? எந்தெந்த மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை? சென்னைக்கு எப்படி?
Tamil Nadu Weather Update: ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, 27ஆம் தேதி காலை தென் மேற்கு, மேற்கு மத்திய வங்கக் கடலில் புயலாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது

வங்கக் கடலில் உருவாகி உள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, 27ஆம் தேதி காலை புயலாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த புயலால் வட தமிழகம், கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டு உள்ளது.
MONTHA புயல்
வங்கக் கடலில் உள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, 27ஆம் தேதி காலை தென் மேற்கு, மேற்கு மத்திய வங்கக் கடலில் புயலாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. முதலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி, ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக இன்று மாற உள்ளது.
எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?
தொடர்ந்து 26ஆம்தேதி ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, 27ஆம் தேதி காலை புயல் உருவாக உள்ளதாக கணிக்கப்பட்டு உள்ளது. மேற்கு, வட மேற்கு திசையில் நகர்ந்து காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, புயலாக மாறும் என்றும் வானிலை ஆய்வு மையம் சார்பில் கணிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் மிக கன மழை
தாய்லாந்து நாடு பரிந்துரைந்த MONTHA என்னும் பெயர் இந்த புயலுக்கு சூட்டப்பட உள்ளது. இந்த மோன்தா புயலால், வட தமிழகம், கடலோர மாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், உள் மாவட்டங்களில் கன மழை பெய்யும் என்று கணிக்கப்பட்டு உள்ளது. இதனால் அக்டோபர் 27ஆம் தேதி சென்னையில் மிக கன மழை பெய்யும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
அதேபோல அக்டோபர் 26ஆம் தேதி சென்னை பெருநகர், புறநகர் பகுதிகளில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.






















