Karur: கரூர் மாயனூர் கதவணையில் நீர்வரத்து அதிகரிப்பு
மாயனூர் கதவணைக்கு வினாடிக்கு, 8,911 கன அடி தண்ணீர் வந்தது. நீர்வரத்து 9,139 கன அடியாக அதிகரித்தது.
மாயனூர் கதவணைக்கு, தண்ணீர் வரத்து அதிகரித்தது. விடுமுறை நாள் என்பதால் மீன் வியாபாரம் களைகட்டி இருந்தது. கடந்த 12 ல் டெல்டா மாவட்டங்களில் குருவை சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு, 10,000 கன அடி தண்ணீர் முதல் கட்டமாக திறக்கப்பட்டது. இதை அடுத்து, கரூர் அருகே, மாயனூர் கதவணைக்கு தண்ணீர் வரத்து அதிகரித்துள்ளது. காலை மாயனூர் கதவணைக்கு வினாடிக்கு, 8,911 கன அடி தண்ணீர் வந்தது. காலை 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, தண்ணீர் வரத்து 9,139 கன அடியாக அதிகரித்தது. அந்த தண்ணீர் முழுவதும் டெல்டா பாசன பகுதிக்காக காவிரி ஆற்றில் திறக்கப்பட்டது. நான்கு பாசன கிளை வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
அமராவதி அணை
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு காலை, வினாடிக்கு, 108 கன அடி தண்ணீர் வந்தது. காலை 6 மணி நிலவரப்படி வினாடிக்கு, தண்ணீர் வரத்து, 118 கன அடியாக அதிகரித்தது. அணையில் இருந்து, அமராவதி ஆற்றில் வினாடிக்கு, 230 கன அடியாக தண்ணீர் திறக்கப்பட்டது. புதிய பாசன வாய்க்காலில், தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது. 90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம் 64.87 அடியாக இருந்தது.
நங்காஞ்சி அணை நிலவரம்
திண்டுக்கல் மாவட்டம், வடகாடு மலைப்பகுதிகளில் மழை இல்லாததால்,நங்காஞ்சி ஆற்றுக்கு தண்ணீர் வரத்து இல்லை. 39.37 அடி உயரம் கொண்ட நங்கஞ்சி அணை நீர்மட்டம் தற்போது 28.67 அடியாக உள்ளது. ஆற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
ஆத்துப்பாளையம் அணை
கரூர் மாவட்டம் கா. பரமத்தி அருகே கார்வழி ஆத்துப்பாளையம் அனைக்கு காலை 6 மணி நிலவரம் படி அணைக்கு தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம் 11.67 அடியாக இருந்தது. நொய்யல் பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.