கரூர் காவிரியில் தண்ணீர் வரத்து சரிவு; டெல்டா பாசனத்துக்கு நீர் திறப்பு
காவிரி ஆற்றில் மாயனூர் கதவணைக்கு நேற்று வினாடிக்கு, 24 ஆயிரத்து, 872 கன அடி தண்ணீர் வந்தது. காலை 8:00 மணி நிலவரப்படி, வினாடிக்கு, 21 ஆயிரத்து, 314 கன அடியாக, தண்ணீர் வரத்து குறைந்தது.
காவிரியில் தண்ணீர் வரத்து சரிவு.
காவிரி ஆற்றில் மாயனூர் கதவணைக்கு நேற்று வினாடிக்கு, 24 ஆயிரத்து, 872 கன அடி தண்ணீர் வந்தது. காலை 8:00 மணி நிலவரப்படி வினாடிக்கு 21 ஆயிரத்து 314 கன அடியாக, தண்ணீர் வரத்து குறைந்தது. டெல்டா பாசனத்துக்கு 20 ஆயிரத்து 94 கன அடி தண்ணீரும், நான்கு பாசன வாய்க் காலில் 1,220 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டுள்ளது.
அமராவதி அணை தண்ணீர் வரத்து
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டையில் உள்ள அமராவதி அணைக்கு காலை 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 1,318 கன அடி தண்ணீர் வந்தது. அமராவதி ஆற்றில் 100 கன அடி தண்ணீரும், புதிய பாசன வாய்க்காலில் 50 கன அடி தண்ணீரும் திறக்கப்பட்டது. 90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம் 86.06 அடியாக இருந்தது கரூர் அருகே பெரிய ஆண்டாங் கோவில் தடுப்பணைக்கு காலை 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு 3,130 கன அடியாக தண்ணீர் வந்தது அதிகரித்தது.
நங்காஞ்சி அணை தண்ணீர் வரத்து
திண்டுக்கல் மாவட்டம், நங்காஞ்சி அணைக்கு வடகாடு மலைப்பகுதிகளில் மழை காரணமாக காலை, 6:00 மணி நிலவரப்படி வினாடிக்கு, 58 கன அடி தண்ணீர் வந்தது. 39.37 அடி உயரம் கொண்ட, அணையின் நீர்மட்டம், 34.97 அடியாக இருந்தது.
மழை நிலவரம்
கரூர் மாவட்டத்தில் காலை 8:00 மணியிலான கடந்த 24 மணி நேரத்தில் பெய்த மழையளவு (மி.மீ )
கரூர் -07.00, அரவக்குறிச்சி 04.00, அணைப்பாளையம் 05.04, க.பரமத்தி 01.02, குளித்தலை- 05.00, கிருஷ்ணராயபுரம்- 07.00, மாயனுார் 09.06, பஞ்சப்பட்டி 05.06, கடவூர்- 24.00, பாலவிடுதி- 26.02, மைலம் பட்டி- 15.00 ஆகிய அளவுகளில் மழை பெய்தது. மாவட்டம் முழுவதும் சராசரியாக 09.17 மி.மீ. மழை பதிவானது.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. இந்நிலையில் கரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மேகமூட்டத்துடன் காணப்பட்டாலும் சில இடங்களிலேயே மழை பெய்துள்ளது. பல்வேறு இடங்களில் வறண்ட வானிலையை காட்சியளிக்கிறது. மேலும் அமராவதி ஆற்றில் வழக்கத்தை விட கூடுதல் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளதால் அமராவதி ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்து உள்ளது. இதே நிலையில் காவிரி ஆற்றில் தண்ணீர் வரத்து நாளுக்கு நாள் குறைந்து கொண்டு வருவதால் விவசாயிகள் கலக்கமடைந்துள்ளனர்.