கரூர் மாவட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகளை பார்வையிட்ட மாவட்ட ஆட்சியர்
கரூர் மாவட்டம், கடவூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, மேலபகுதிப்பட்டி, தரங்கம்பட்டி ஊராட்சி, மற்றும் மாவத்தூர் ஊராட்சி ஆகிய பல்வேறு வளர்ச்சிதிட்ட பணிகளை நேரில் சென்று பார்வையிட்டார்.
வளர்ச்சி திட்ட பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் செய்தியாளர்களுடன் நேரில் சென்று பார்வையிட்டார்.
கரூர் மாவட்டம், கடவூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, மேலபகுதிப்பட்டி, தரங்கம்பட்டி ஊராட்சி, மற்றும் மாவத்தூர் ஊராட்சி ஆகிய புகுதிகளில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் – 2022-2023 கீழ் மேற்கொள்ளப்பட்டு வரும் பல்வேறு வளர்ச்சிதிட்ட பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரபுசங்கர் செய்தியாளர்களுடன் நேரில் சென்று பார்வையிட்டார்.
கரூர் மாவட்டத்தில் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் – 2022-2023 கீழ் ரூ. 12.96 கோடி மதிப்பீட்டில் 242 பணிகள் நடைபெற்று வருகின்றது. கடவூர் ஊராட்சி ஓன்றியத்திற்கு உட்பட்ட ரூ.1.36 கோடி மதிப்பீட்டில் 25 பல்வேறு திட்டப்பணிகள் நடைபெற்று வருகிறது; அதன் அடிப்படையில் இன்று கடவூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட, தரங்கம்பட்டி ஊராட்சி கிராமத்தில் வையாழிமடை கிராமத்தில் ரூ.6.36 இலட்சம் மதிப்பீட்டில் குளம் உட்புறம் பகுதிகளில் தடுப்புச்சுவர் மற்றும் படித்துறை அமைக்கப்பட்டுள்ள பணிகளையும், தொடர்ந்து அதேப்பகுதியில் ரூ.4.12 மதிப்பீட்டில் நடைபெற்று வரும் மயானக் கொட்டகை பணிகளையும், தரங்கம்பட்டி செல்வநகர் பகுதியில் ரூ.2.30 இலட்சம் மதிப்பீட்டில் முடிவுற்ற சிமெண்ட் சாலை பணிகளையும், மாவாத்தூர் ஊராட்சிப்பகுதியில் கழுத்தரிக்காபட்டி கிராமத்தில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ரூ.5.80 இலட்சம் மதிப்பீட்டில் பெண்களுக்கான கழிப்பறை கட்டிடம் நடைபெற்று வரும் பணிகளை பார்வையிட்டு பணிகளின் தன்மைகளையும் அதன் விபரங்கள் கேட்டறிந்து. பணிகளை விரைந்து முடித்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டுமென அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள்.
மேலும், மேலபகுதி பட்டி உள்ள சமத்துவபுரத்தில் புனரமைக்கப்பட்ட வீடுகளைமும், சாலைகள் விளையாட்டு மைதானம் பெரியார் சிலை சுற்றுப்புறத்தில் சீரமைக்கு பணிகளையும், சமத்துவபுரம் நுழைவாய்ப்பு பகுதிகளில் பணிகள் நடைபெற்று வருவதை பார்வையிட்ட போது பொதுமக்கள் குடிநீர் வசதி அங்கன்வாடி மையம்அமைத்தல், தெரு விளக்கு வசதிகள், போன்ற கோரிக்கைகளை கேட்டதற்கு இணங்க அனைத்து வசதிகளையும் உடனுக்குடன் நிறைவேத்திட அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்கள். வீரணம்பட்டி பகுதியில் ரூ.2.70 லட்சம் மதிப்பீட்டில் பாரதப்பிரதமர் வீடு கட்டும் திட்டப் பணிகளையும், அதே பகுதிகளில் ரூ.4.12 லட்சம் மதிப்பீட்டில் வெள்ளக்குளம் வாரியில் மழைநீர் உறிஞ்சிக்குழி அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதையும் பார்வையிட்டு. பணிகளை விரைந்து முடிக்க சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு மாவட்ட ஆட்சியர் த. பிரபுசங்கர் அறிவுறுத்தினார்.
இந்த செய்தியாளர் பயணத்தின் போது திட்ட இயக்குநர் ஊரக வளர்ச்சி முகமை வாணி ஈஸ்வரி, செயற்பொறியாளர் பிரேம்குமார், கடவூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராணி, சுரேஷ், ஊராட்சி மன்ற தலைவர் மாணிக்கம், மற்றும் அரசு அலுவலர்கள் உட்பட பலர் உடன் இருந்தனர்.
புதிய தனியார் தொழிற்பயிற்சி நிலையங்கள் துவங்குதல் / இடமாற்றம் / கூடுதல் புதிய தொழிற்பிரிவுகள் துவங்குதல் தொடர்பான அறிவிப்பு.
புதிய தொழிற்பயிற்சி நிலையங்கள் தொடங்குதல், அரசு/தனியார் தொழிற்பயிற்சி நிலையங்களில் புதிய தொழிற்பிரிவுகள்/ கூடுதல் அலகுகள் தொடங்குதல் மற்றும் இடமாற்றம் செய்வது செய்வது உள்ளிட்டவைகளுக்கு 28.03.2023 முதல் 25.04.2023 ஆம் தேதிக்குள் www.nimionlineadmissio.in/iti என்ற இணையதளத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம். இதில், விண்ணப்பிக்க விரும்புவோர், தொழிற்பயிற்சி நிலையங்கள் இல்லாத பஞ்சாயத்து யூனியன்களில் குறைந்தபட்சம் 4 தொழிற்பிரிவுகளுடன் புதிய தொழிற்பயிற்சி நிலையம் தொடங்க விண்ணப்பிக்கலாம், நான்கு தொழிற்பிரிவுகளுக்கும் குறைவாக நடைபெற்று கொண்டிருக்கும் தொழிற்பயிற்சி நிலையங்கள் புதிய தொழிற்பிரிவுகள் துவங்கிடவும் மற்றும் கூடுதல் அலகுகள் துவங்கிடவும் விண்ணப்பிக்கலாம், தொழிற்பயிற்சி நிலையங்கள் இடமாற்றம் செய்யவும் விண்ணப்பிக்கலாம். மேலும், இதுதொடர்பான தகவல் மற்றும் அறிவுரைகள் www.nimionlineadmissio.in/iti என்ற இணையதளத்தின் மூலம் தெரிந்துகொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் பிரபுசங்கர் தெரிவித்துள்ளார்.