மேலும் அறிய

ABP Exclusive: அந்த ரத்தக்கறை உண்மைதான்.. ஆனால்..- ஸ்ரீமதி இறப்பு விசாரணை குறித்து பேசிய எஸ்.பி

மாணவி ஸ்ரீமதி இறந்த பள்ளியில் இரத்த கறை இருந்தது உண்மைதான். விசாரணைக்கு பிறகே உண்மை தெரியவரும் என எஸ்.பி. செல்வகுமார் ABP நாடு செய்தி நிறுவனத்திற்கு தகவல் அளித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி மாவட்ட சின்னசேலம் அருகே கனியாமூர் பள்ளியில் மாடியில் இருந்து விழுந்து ஸ்ரீமதி என்ற மாணவி உயிரிழந்தது தொடர்பாக டி.எஸ்.பி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருவதாக மாவட்ட எஸ்.பி. செல்வகுமார் ABP நாடு செய்தி நிறுவனத்திற்கு தகவல் அளித்துள்ளார்.

மாணவி ஸ்ரீமதியின் கடிதத்தில் தன்னை இரண்டு ஆசிரியர்கள் அவமானப்படுத்தும் விதத்தில் பேசியதாகவும் அதோடு மற்ற பள்ளி ஊழியர்களிடம் இதை சொல்லியதால் ஏற்பட்ட மன உளைச்சலால் தான் தற்கொலை செய்துள்ளதாக சொல்லியுள்ளார். அந்த கடிதத்தை கைப்பற்றியும் சம்பந்தப்பட்ட பள்ளியின் ஆசிரியர்கள், நிர்வாகிகள் என அனைவரிடமும் விசாரணை நடைபெற்று வருகிறது.

முழுமையான விசாரணைக்கு பின்னரே ஸ்ரீமதி மரணத்தில் என்ன நடந்திருக்கிறது என்பதை சொல்ல முடியும். அதே பள்ளியில் இரத்த கறை இருப்பதுபோல சமூக வலைதளங்களில் பகிரப்படும் படம் உண்மைதான். ஆனால் அது ஸ்ரீமதி ரத்தக்கறையா என்பது இன்னும் உறுதியாகவில்லை. அந்த ரத்தக்கறை சற்று உயரத்தில் இருக்கிறது. அதையும் சேகரித்து பரிசோதனைக்கு அனுப்பியிருக்கிறோம்.

ஏற்கனவே இந்த பள்ளியில் 5 மாணவர்களுக்கு இதுபோன்று நடந்துள்ளதாக சொல்வதில் இதுவரை உண்மை இருப்பதாக தெரியவில்லை. ஆனால், ஒரு மாணவி பரீட்சை பயத்தில் மாடியில் இருந்து குதித்து தற்கொலை முயற்சியில் ஈடுபட்டு, கையில் முறிவு ஏற்பட்டுள்ளது. அதேபோல், ஒரு மாணவர், இன்னொரு மாணவரை தள்ளிவிட்டு அவர் உயிரிழந்த சம்பவம் அந்த பள்ளியில் நடந்திருக்கிறது” என தெரிவித்துள்ளார். 

இந்தநிலையில் உயிரிழந்த பள்ளி மாணவி ஸ்ரீமதிக்கு நீதி வழங்க வேண்டும் என நெட்டிசன்கள் ட்விட்டர் பக்கத்தில் #justiceforsrimathi என்ற ஹேஷ்டேக்கை இந்திய அளவில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர். தற்போது மாணவி உயிரிழந்த விவகாரம் இந்திய மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

இறுதியாக மாணவி எழுதிய கடிதம் : 

மாணவி தற்கொலை செய்து கொள்வதற்கு முன்னதாக எழுதி வைத்த கடிதத்தினை அவரது உறவினர்கள் முன்னிலையில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் படித்துக் காண்பித்தார். அந்த கடிதத்தில், ஆசிரியை பொது இடத்தில் சக மாணவர்கள் முன்னிலையில் மாணவியை திட்டியதாகவும்,  தனது பள்ளி கட்டணம் விடுதி கட்டணம் மற்றும் புத்தக கட்டணம் ஆகியவற்றை தனது தாயிடம் திருப்பி வழங்குமாறும் "I Am sorry Amma I Am Sorry Appa I Am Sorry Santhosh" என குறிப்பிட்டிருந்தார். 

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூட்யூபில் வீடியோக்களை காண

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Bussy Anand Angry |கறார் காட்டிய புஸ்ஸி ஆனந்த்..முகம்சுழித்த தவெக நிர்வாகிகள்!Nellai Drunkard | ’’கார்ல கள்ளச்சாராயம் இருக்கு’’  வடிவேலு பாணியில் ரகளை!  மதுபிரியர் அட்ராசிட்டிAnnamalai on Sengol | ”செங்கோலை எடுக்கணுமா? திமுக என்ன சொல்லப்போகுது?”I.N.D.I.A-ஐ விளாசும் பாஜகவினர்Vijay Banner | சிறுவன் மீது சரிந்த விஜய் பேனர் பரபரப்பு CCTV காட்சி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
IND vs SA Final: கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கடந்த 10 ஆண்டுகளில் 5 முறை ஃபைனல்.. இந்திய அணிக்கு தோல்வி மட்டுமே தொடர்ச்சி.. காத்திருக்கும் ஐசிசி கோப்பை!
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
கட்டுமான சேதங்கள்: காங். தலைவர் கார்கே வெளியிட்ட பட்டியல்.. சிக்கலில் மோடி அரசு..?
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ரூ1,146 கோடியில் அடுக்குமாடி குடியிருப்புகள்: அசத்தல் அறிவிப்புகளை வெளியிட்ட முதலமைச்சர் ஸ்டாலின்...
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்:  காரணம் என்ன தெரியுமா?
ஜூலை 4 முதல் தொடர் போராட்டத்தில் குதிக்கப்போகும் ஆசிரியர்கள்: காரணம் என்ன தெரியுமா?
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Breaking News LIVE: ஐரோப்பிய கவுன்சிலின் தலைவராக தேர்வான அன்டோனியோவுக்கு பிரதமர் மோடி வாழ்த்து
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
Rahul Gandhi on NEET: நீட் முறைகேடு.. எதிர்த்த எதிர்கட்சி தலைவர் ராகுல்.. கலக்கத்தில் பிரதமர் மோடி!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
வரலாற்று சாதனை படைத்த இந்திய வீராங்கனைகள்.. அசத்திய ஸ்மிரிதி மந்தனா - ஷபாலி வர்மா!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிர்ச்சி - வாக்காளர் பட்டியலில் இறந்துபோன 15 ஆயிரம் வாக்காளர்கள்
Embed widget