மேலும் அறிய

ISRO IIT Madras MoU: விண்வெளி விமானத்‌ திட்டங்கள்; இஸ்ரோவுடன் கைகோக்கும் ஐஐடி சென்னை

ஐஐடி சென்னை‌ இந்திய விண்வெளி விமானத்‌ திட்டங்களுக்காக ஏஆர்‌/ விஆர்/ ‌எம்‌ஆர்‌ ஆகியவற்றைப்‌ பயன்படுத்தி விண்வெளி வீரர்‌ பயிற்சித்‌ தொகுதியை உருவாக்க உள்ளது.

ஐஐடி சென்னை‌ இந்திய விண்வெளி விமானத்‌ திட்டங்களுக்காக ஏஆர்‌/ விஆர்/ ‌எம்‌ஆர்‌ ஆகியவற்றைப்‌ பயன்படுத்தி விண்வெளி வீரர்‌ பயிற்சித்‌ தொகுதியை உருவாக்க உள்ளது.

சென்னையில்‌ உள்ள இந்திய தொழில்நுட்பக்‌ கழகம்‌ (ஜஜடி மெட்ராஸ்‌) ஆக்மென்டட்‌ ரியாலிட்டி / விர்ச்சுவல்‌ ரியாலிட்டி / மிக்ஸ்டு ரியாலிட்டி (AR/VR/MR)-ஐப்‌ பயன்படுத்தி இந்திய விண்வெளிப்‌ பயணத்‌ திட்டத்திற்கான பயிற்சித்‌ தொகுதியை உருவாக்க உள்ளது.

எக்ஸ்டெண்டட்‌ ரியாலிட்டி தொழில்நுட்பத்தில்‌ ஆராய்ச்சி மற்றும்‌ மேம்பாட்டை (R&D) ஊக்குவிக்கும்‌ வகையில்‌ ஐஜஜடி மெட்ராஸ்‌-ல்‌ புதிதாக நிறுவப்பட்டுள்ள அனுபவமிக்க தொழில்நுட்பக்‌ கண்டுபிடிப்பு மையத்தின் (XTIC) உயர்‌ தொழில்நுட்பங்களை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம்‌ (இஸ்ரோ பயன்படுத்திக்‌ கொள்ளும்‌.

இந்திய மனித விண்வெளிப்‌ பயணத்‌ திட்டத்தில்‌ எக்ஸ்டெண்டட்‌ ரியாலிட்டி (XR) மற்றும்‌ இதர தொழில்நுட்பங்களைப்‌ பயன்படுத்துவது தொடர்பாக இஸ்ரோ, ஜஜடி மெட்ராஸ்‌ இடையே அண்மையில்‌ புரிந்துணர்வு ஒப்பந்தம்‌ கையெழுத்தானது.

இஸ்ரோ மற்றும்‌ ஐஜடி மெட்ராஸ்‌ இடையேயான இந்த ஒத்துழைப்பின்‌ முக்கிய அம்சங்களை விவரித்த எக்ஸ்டிஐசி-ஐஐடி மெட்ராஸ்‌ கொள்கை ஆய்வாளரான, ஐஜடி மெட்ராஸ்‌ அப்ளைட் மெக்கானிக்ஸ்‌ துறையின்‌ பேராசிரியர்‌ எம்‌. மணிவண்ணன்‌ கூறுகையில்‌, மணித விண்வெளிப்‌ பயணத்‌ திட்டத்தின்‌ பல்வேறு அம்சங்களில்‌ குறிப்பாக வடிவமைப்பு சுழற்சியைக்‌ குறைத்தல், விண்வெளிச்‌ சூழலை உருவகப்படுத்துதல்‌ போன்றவற்றில்‌ மதிப்புக்‌ கூட்டும்‌ ஆற்றல்‌ எக்ஸ்‌ஆர்‌ தொழில்நுட்பத்திற்கு உண்டு, உடலியல்‌ அமைப்புகளின்‌ மாதிரிகள்‌, வடிவமைப்பை மேம்படுத்துதல்‌ போன்ற ஆய்வுகளுடன்‌ இதனைத் தொடங்க உள்ளோம்‌ எனத்‌ தெரிவித்தார்‌.

மனித விண்வெளிப்‌ பயணத்‌ திட்டத்திற்கான எக்ஸ்‌ஆர்‌ தொழில்நுட்பங்களை உருவாக்குவது மட்டுமின்றி, மனித விண்வெளி விமான மையத்தில்‌ சம்மந்தப்பட்ட பொறியாளர்களுக்கு அதற்கான பயிற்சியை அளிப்பதுடன்‌, மனித விண்வெளி விமான மையத்தில்‌ உள்ள ஆய்வகத்தில்‌ எக்ஸ்‌ஆர்‌விஆர்‌ பரிசோதனைக்‌ கூடத்தை அமைக்கவும்‌ எக்ஸ்டிஜசி உதவும்‌.

இந்த ஒத்துழைப்பின்‌ மூலம்‌ எதிர்பார்க்கப்படும்‌ முக்கிய முடிவுகள்‌

* மனித உடலியல்‌ மற்றும்‌ விண்வெளி அமைப்புகளின்‌ மாதிரியாக்கம்‌ மற்றும்‌ உருவகப்படுத்துதல்‌

* சேவைகளை விரிவாக்கம்‌ செய்தல்‌

* வடிவமைப்பு கட்டமைப்பைக்‌ காட்சிப்படுத்துதல்‌, மேம்படுத்துதல்‌

* இஸ்ரோ விஞ்ஞானிகள்‌ தங்களுக்கான எக்ஸ்‌ஆர்‌ சிஸ்டமை தாங்களே உருவாக்கிக்‌ கொள்ளப்‌ பயிற்சி அளித்தல்‌

இந்தியாவில்‌ எக்ஸ்‌ஆர்‌, ஹாப்டிக்ஸ்‌ துறையில்‌ ஸ்டார்ட்‌அப்கள்‌ மற்றும்‌ தொழில்‌ நிறுவனங்களை உள்ளடக்கிய CAVE என்ற கூட்டமைப்பை எக்ஸ்டிஜசி உருவாக்கியுள்ளது. எக்ஸ்டிஜசி தலைமையிலான சுற்றுச்சூழல்‌ அமைப்பானது, மனித விண்வெளிப்‌ பயணத்‌ திட்டத்தின்‌ சேவை விரிவாக்கம்‌ மற்றும்‌ கல்வியில்‌ தொடங்கி டிஜிட்டல்‌ ட்வின்ஸ்‌ வரை பல்வேறு அப்ளிகேஷன்களில்‌ பயன்படுத்தக்‌ கூடியதாகும்‌.

எக்ஸ்‌ஆர்‌ மற்றும்‌ ஹாப்டிக்ஸ்‌ தொழில்நுட்பத்தில்‌ எக்ஸ்டிஐஜசிதான்‌ இந்தியாவிலேயே முதலாவது ஆராய்ச்சி மற்றும்‌ தயாரிப்பு கண்டுபிடிப்பு மையமாகும்‌. மேலும்‌ பொறியியல்‌, மருத்துவம்‌, உளவியல்‌, கலைகள்‌ ஆகிய பல துறைகளை உள்ளடக்கிய ஒரு இடைநிலை மையமாகவும்‌ திகழ்கிறது.

எக்ஸ்‌ஆர்‌ என்பது இடைநிலையானது என்பதால்‌, இந்தத்‌ துறையில்‌ புதிய கண்டுபிடிப்புகளுக்கு வெவ்வேறு துறைகளைச்‌ சேர்ந்தவர்களின்‌ கருத்துக்கள்‌ ஒன்றிணைவது அவசியமாகும்‌.

உலகெங்கும்‌ உள்ள பெரும்பாலான ஆராய்ச்சிக்‌ கூடங்கள்‌ எக்ஸ்‌ஆர்‌ தொடர்புடைய சாப்ட்வேர்‌ அல்லது ஹார்டுவேரில்‌ கவனம்‌ செலுத்தி வருகின்றன. ஐஐடி சென்னையில் உள்ள இந்த மையம்‌ மனிதக்‌ காரணிகள்‌ குறிப்பாக உணர்தல்‌ மற்றும்‌ மாயை ஆகிய அடிப்படைக்‌ கூறுகளில்‌ கவனத்தை செலுத்துவதுடன்‌, புத்தம்‌ புதிய துறையான புலன்‌ உணர்வுப்‌ பொறியியல்‌, புலன்‌ உணர்வு இயற்கணிதம்‌ ஆகியவற்றில்‌ முன்னோடியாகவும்‌ திகழ்ந்து வருகிறது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

கூட்ட நெரிசலில் சிக்கி 3 குழந்தைகள், பெண்கள் 27 பேர் உயிரிழப்பு: உ.பி.யில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 3 குழந்தைகள், பெண்கள் 27 பேர் உயிரிழப்பு: உ.பி.யில் அதிர்ச்சி
Breaking News LIVE: அனைவரையும் உள்ளடக்கி, அனைவருக்குமான வளர்ச்சி - பிரதமர் மோடி!
Breaking News LIVE: அனைவரையும் உள்ளடக்கி, அனைவருக்குமான வளர்ச்சி - பிரதமர் மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Cooking Tips : உங்கள் சமையல் வேலையை எளிதாக்க சூப்பர் டிப்ஸ் இதோ!
Cooking Tips : உங்கள் சமையல் வேலையை எளிதாக்க சூப்பர் டிப்ஸ் இதோ!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Villupuram Kallasarayam | மீண்டும் கள்ளச்சாரயம்..பட்டப்பகலில் ஆசாமி அலப்பறை விழுப்புரத்தில் பரபரப்புBJP Cadre cheating | ”பணத்தை ஆட்டைய போட்டபாஜக நிர்வாகி!” கதறும் பெண்!A Raja Speaker chair : ”என்னைய பார்த்து பேசுங்க” சபாநாயகர் CHAIR-ல் ஆ.ராசா! அவையை வழிநடத்திய MPDMK Vs PMK | மக்களை அடைத்து வைத்ததா திமுக?போராட்டத்தில் குதித்த பாமக! விக்கிரவாண்டியில் பரபர!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
கூட்ட நெரிசலில் சிக்கி 3 குழந்தைகள், பெண்கள் 27 பேர் உயிரிழப்பு: உ.பி.யில் அதிர்ச்சி
கூட்ட நெரிசலில் சிக்கி 3 குழந்தைகள், பெண்கள் 27 பேர் உயிரிழப்பு: உ.பி.யில் அதிர்ச்சி
Breaking News LIVE: அனைவரையும் உள்ளடக்கி, அனைவருக்குமான வளர்ச்சி - பிரதமர் மோடி!
Breaking News LIVE: அனைவரையும் உள்ளடக்கி, அனைவருக்குமான வளர்ச்சி - பிரதமர் மோடி!
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Parliament Session: பேசத்தொடங்கிய மோடி:  எதிர்க்கட்சிகளின் அமளியால் ரணகளமான நாடாளுமன்றம் - நடந்தது என்ன?
Cooking Tips : உங்கள் சமையல் வேலையை எளிதாக்க சூப்பர் டிப்ஸ் இதோ!
Cooking Tips : உங்கள் சமையல் வேலையை எளிதாக்க சூப்பர் டிப்ஸ் இதோ!
"சிலரின் வலியை புரிந்து கொள்ள முடிகிறது" நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் மீது பிரதமர் மோடி தாக்கு!
Education Scholarship: முந்துங்க மாணவர்களே! ரூ.12 லட்சம் கல்வி உதவித்தொகை: இப்படித்தான் விண்ணப்பிக்க வேண்டும்!
முந்துங்க மாணவர்களே! ரூ.12 லட்சம் கல்வி உதவித்தொகை: இப்படித்தான் விண்ணப்பிக்க வேண்டும்!
 MK Stalin: 25 மீனவர்கள்; 2 படகுகள்; இப்படியே தொடர்ந்தா எப்படி? - முதல்வர் ஸ்டாலின் எழுதிய முக்கிய கடிதம்!
 MK Stalin: 25 மீனவர்கள்; 2 படகுகள்; இப்படியே தொடர்ந்தா எப்படி? - முதல்வர் ஸ்டாலின் எழுதிய முக்கிய கடிதம்!
அடடே இது நல்லா இருக்கே... தமிழ்நாட்டில் முதல்முறையாக பலூன் தியேட்டர் - எங்கு இருக்கு தெரியுமா?
அடடே இது நல்லா இருக்கே... தமிழ்நாட்டில் முதல்முறையாக பலூன் தியேட்டர் - எங்கு இருக்கு தெரியுமா?
Embed widget