Ind vs Zim: என்னப்பா இந்த ரெக்கார்ட் போதுமா! ஜிம்பாப்வேயை துவைத்து இந்திய அணி படைத்த சாதனைகள்
2026 டி20 உலகக் கோப்பையின் அதிகபட்ச ஸ்கோர் ஜிம்பாப்வேக்கு எதிராக இந்திய அணி (256/4) என்கிற சாதனையை படைத்துள்ளது

ஜிம்பாப்வே அணிக்கு எதிரான சூப்பர் 8 போட்டியில் இந்திய அணி நடப்பு உலகக்கோப்பையில் மேற்கு இந்திய தீவு அணியின் சாதனையை உடைத்துள்ளது. மேலும் இந்திய அணியின் இப்போட்டியில் செய்த சாதனைகள் என்ன என்பதை கீழே காணலாம்
இந்தியா vs ஜிம்பாப்வே:
முதலில் பேட்டிங் செய்த இந்தியா 256 ரன்கள் எடுத்தது. டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அடிக்கப்பட்ட இரண்டாவது அதிகபட்ச ஸ்கோர் ஆகும். மேலும், இந்த உலகக் கோப்பையின் அதிகபட்ச ஸ்கோராகும். இந்தப் போட்டியில் அபிஷேக் சர்மா பேட்டிங்கில் கலக்கி அரைசதம் அடித்தார், அவரைத் தொடர்ந்து, ஹர்திக் பாண்டியா மற்றும் திலக் வர்மா ஆகியோர் ஜிம்பாப்வே பந்து வீச்சாளர்களை பொளந்து கட்டினர்.
2026 டி20 உலகக் கோப்பை அதிகபட்ச ஸ்கோர்
2026 டி20 உலகக் கோப்பையின் அதிகபட்ச ஸ்கோர் ஜிம்பாப்வேக்கு எதிராக மேற்கிந்திய தீவுகள் எடுத்த 254 ஆகும். இருப்பினும், தற்போது ஜிம்பாப்வேக்கு எதிராக 256 ரன்கள் எடுத்து இந்திய அணி அந்த aசாதனையை உடைத்துள்ளது.
டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிகபட்ச ஸ்கோரை இலங்கை அணி பெற்றுள்ளது, 2007 உலகக் கோப்பையில் கென்யாவுக்கு எதிராக 260 ரன்கள் எடுத்தது. அந்த உலக சாதனையை முறியடிக்க இந்தியா வெறும் நான்கு ரன்கள் மட்டுமே தொலைவில் இருந்தது.
டி20 உலகக் கோப்பை வரலாற்றில் அதிக ரன்கள்
- 260 ரன்கள் - இலங்கை (எதிரணி கென்யா)
- 256 ரன்கள் - இந்தியா (எதிரணி ஜிம்பாப்வே)
- 254 ரன்கள் - மேற்கிந்திய தீவுகள் (எதிரணி ஜிம்பாப்வே)
- 235 ரன்கள் - அயர்லாந்து (எதிரணி ஓமன்)
அபிஷேக் சர்மா அதிரடி:
இந்த உலகக் கோப்பையின் முதல் மூன்று இன்னிங்ஸ்களிலும் அபிஷேக் சர்மா பூஜ்ஜியத்திற்கு ஆட்டமிழந்தார். தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான சூப்பர் 8 போட்டியில் அவர் வெறும் 15 ரன்கள் மட்டுமே எடுத்தார். இன்று, ஜிம்பாப்வேக்கு எதிராக, அவரது பழைய ஃபார்ம் தென்பட்டது என்று சொல்லலாம். அவர் 26 பந்துகளில் அரைசதத்தை எட்டினார், இது அவரது டி20 வாழ்க்கையில் இதுவரை இரண்டாவது மெதுவான அரைசதமாகும். அவர் 30 பந்துகளில் 55 ரன்கள் எடுத்தார்.
ஹார்திக்-திலக் மரண அடி:
அபிஷேக்கிற்குப் பிறகு, ஹார்டிக் பாண்ட்யா மற்றும் திலக் வர்மா ஆகியோர் இணைந்து 31 பந்துகளில் 84 ரன்கள் எடுத்தனர். ஹார்டிக் 23 பந்துகளில் 50 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். மறுபுறம், . திலக் 16 பந்துகளில் 44 ரன்கள் எடுத்தார். ஹார்டிக் மற்றும் திலக் இருவரும் சேர்ந்து 8 சிக்ஸர்களையும் 5 பவுண்டரிகளையும் அடித்தனர்.
ட்ரெண்டிங் செய்திகள்























