இலவச பள்ளிக்கூடம் கட்டுகிறாரா விஜய்... உண்மை என்ன?
பிரிட்டோ கல்லூரி பேராசிரியராக இருந்தவர். இவருக்கு சொந்தமாக ஏற்கனவே கல்லூரியும், பள்ளிக்கூடமும் இருக்கிறது. தற்போது கட்டப்படுவது அவரது இரண்டாவது பள்ளிக்கூடமாகும்.
கோலிவுட்டின் டாப் ஹீரோ விஜய். வசூல் மன்னராக திகழ்ந்துவரும் இவர் தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். படம் விரைவில் வெளியாக இருக்கிறது.
பீஸ்ட் படத்துக்கு பிறகு வம்சி இயக்கத்தில் தமிழ், தெலுங்கு மொழிகளில் உருவாகும் படத்தில் நடிக்க விஜய் ஒப்பந்தமாகியிருக்கிறார். படத்தின் ஷூட்டிங் விரைவில் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் ஏழை மாணவர்கள் இலவசமாக படிப்பதற்காக நடிகர் விஜய் இலவச பள்ளிக்கூடம் ஒன்றை கட்டிவருவதாக கடந்த சில நாள்களில் தகவல் வெளியானது.
விஜய் அரசியலுக்கு வரவேண்டும் என ஏற்கனவே அவரது ரசிகர்கள் வலியுறுத்திவரும் சூழலில், அவர் பள்ளிக்கூடம் கட்டிவருவதாக வெளியான தகவலால், விஜய் அரசியலுக்கு அச்சாரம் போட்டுவிட்டார் என அவரது ரசிகர்கள் கூறினர்.
ஆனால், பள்ளிக்கூடம் கட்டுவது விஜய் இல்லை என்பது தெரியவந்துள்ளது. அந்தப் பள்ளிக்கூடத்தை கட்டுபவர் விஜய்யின் மாமாவும், மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளருமான பிரிட்டோ.
பிரிட்டோ கல்லூரி பேராசிரியராக இருந்தவர். இவருக்கு சொந்தமாக ஏற்கனவே கல்லூரியும், பள்ளிக்கூடமும் இருக்கிறது. தற்போது கட்டப்படுவது அவரது இரண்டாவது பள்ளிக்கூடமாகும்.
சமந்தாவைப் பிரிய காரணம் இதுதானோ?- நாகசைதன்யாவின் மனம்திறந்த பேட்டி
இந்த கட்டுமான பணிகளை விஜய் சமீபத்தில் பார்வையிட்டதை தொடர்ந்து அந்தப் பள்ளிக்கூடத்தை விஜய்தான் கட்டுகிறார் என வதந்தி பரவி வெளியாகிவிட்டதாக கூறப்படுகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
மேலும் வாசிக்க: தென்னாப்பிரிக்காவில் வெறி தனமாக பயிற்சி செய்யும் இந்திய வீரர்கள் !
Top 10 Songs 2021 | எஞ்சாயி எஞ்சாமி To ஊ சொல்றியா மாமா.. 2021-ஆம் ஆண்டில் வைரலான டாப் 10 பாடல்கள்
ஜெர்ஸி பட மேக்கிங் வீடியோ.. பந்து பட்டு கிழிந்த உதடு.! ஷாகித் சொன்ன ரத்த ரகசியம்
மீண்டும் பேரரசுடன் இணைகிறாரா விஜய்? பிரபலம் கூறிய புதுத்தகவல்..