மேலும் அறிய

புதுச்சேரியில் சூரிய ஒளி மின் திட்டம்: ₹1.08 லட்சம் மானியம்! மின்சார சிக்கனத்தில் அசத்தலான வாய்ப்பு!

புதுச்சேரியில் 'பிரதமர் சூரிய ஒளி மின் திட்டத்தின்' கீழ் 3 கிலோவாட் சோலார் மின் நிலையம் அமைப்பதற்கான மானியத் தொகையை மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து ரூ.1.08 லட்சமாக உயர்த்தியுள்ளன.

புதுச்சேரி: புதுச்சேரியில் 'பிரதமர் சூரிய ஒளி மின் திட்டத்தின்' (PM Surya Ghar) கீழ் 3 கிலோவாட் சோலார் மின் நிலையம் அமைப்பதற்கான மானியத் தொகையை மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து ரூ.1.08 லட்சமாக உயர்த்தியுள்ளன.

புதுச்சேரியில் செயல்படுத்தப்பட்டு வரும் பிரதமரின் சூரிய ஒளி மின் திட்டத்தில் (PM Surya Ghar), 3 கிலோவாட் மின் நிலையம் அமைக்க மத்திய அரசு வழங்கும் மானியம் ₹78 ஆயிரத்துடன், மாநில அரசு சார்பில் ₹30 ஆயிரம் சேர்ந்து மொத்தம் ₹1.08 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது.

இன்றைய நவீன உலகில் மின்சாரம் அத்தியாவசியத் தேவையாகிவிட்டது. இதன் தேவை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

 அதற்கேற்ப மின் உற்பத்தியைப் பெருக்க அனல் மின் நிலையங்களில் நிலக்கரி உள்ளிட்ட எரிபொருட்களை எரிப்பதாலும், அணு மின் நிலையங்களில் அணுவைப் பிளப்பதாலும் சுற்றுச்சூழல் மாசு ஏற்படுகிறது.

இதனைத் தவிர்த்திட, ஆண்டு முழுவதும் கிடைக்கும் சூரிய ஒளியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பதில் மத்திய அரசு முனைப்பு காட்டி வருகிறது.

 இதற்காகப் பிரதமர் மோடி, ஒரு கோடி வீடுகளுக்கு மாதம் 300 யூனிட் இலவச மின்சாரம் வழங்கும் வகையில், ₹75 ஆயிரம் கோடி முதலீட்டில் 'பிரதமர் சூரிய ஒளி மின் திட்டத்தை' கடந்த 2024-ஆம் ஆண்டு பிப்ரவரி 13-ஆம் தேதி தொடங்கி வைத்தார்.

மானியம் மற்றும் கடனுதவி விவரங்கள்:

இத்திட்டத்தில் வீடுகளில் சூரிய ஒளி மின் நிலையம் அமைக்க மத்திய அரசு பின்வருமாறு மானியம் வழங்குகிறது., 

 1 கிலோவாட்: ₹30,000

 2 கிலோவாட்: ₹60,000

 3 கிலோவாட் மற்றும் அதற்கு மேல்: ₹78,000

மேலும், இத்திட்டத்தைச் செயல்படுத்தத் தேசியமயமாக்கப்பட்ட வங்கிகள் 6 சதவீத வட்டி விகிதத்தில் கடனுதவி வழங்குகின்றன.

வருமானம் ஈட்டும் வாய்ப்பு:

3 கிலோவாட் சோலார் மின் நிலையம் அமைத்தால் ஆண்டிற்குச் சுமார் 4,500 யூனிட் மின்சாரத்தைப் பெறலாம். நுகர்வோர்கள் தங்கள் வீடுகளில் உற்பத்தி செய்த மின்சாரத்தைத் தேவைக்குப் போக, உபரி மின்சாரத்தை மின்துறைக்கு விற்பனை செய்து வருமானம் ஈட்ட முடியும்.

பொதுமக்கள் இத்திட்டத்தைப் பற்றி அறிய மின்துறை சார்பில் விழிப்புணர்வு முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. கடந்த ஓராண்டில் 3,428 பேர் விண்ணப்பித்துள்ளனர். அவர்களில் 2,475 பேர் மின் நிலையம் அமைத்து, மத்திய அரசின் மானியத்தைப் பெற்றுள்ளனர்.

மாநில அரசின் கூடுதல் மானியம்:

புதுச்சேரி அரசு இத்திட்டத்தை ஊக்குவிக்கச் சிறப்பு மானியமாக அதிகபட்சம் ₹30 ஆயிரம் வழங்க அரசாணை வெளியிட்டுள்ளது. 

இது குறித்து அமைச்சர் நமச்சிவாயம் விடுத்துள்ள செய்திக்குறிப்பில்:

பொதுமக்களின் முதலீட்டுச் சுமையைக் குறைக்க மாநில அரசு தன் பங்காக 1 கிலோவாட்டிற்கு ₹10 ஆயிரம், 2 கிலோவாட்டிற்கு ₹20 ஆயிரம், 3 கிலோவாட் மற்றும் அதற்கு மேல் ₹30 ஆயிரம் கூடுதல் மானியம் வழங்க அரசாணை பிறப்பித்துள்ளது. மாநில அரசின் இந்த மானியம், முதலில் இணையும் 13 ஆயிரம் பயனாளிகளுக்கு வழங்கப்படும். 

இதன் மூலம் மத்திய, மாநில அரசுகளின் மொத்த மானியத் தொகை பின்வருமாறு உயர்கிறது: 1 கிலோவாட்: ₹40,000, 2 கிலோவாட்: ₹80,00 , 3 கிலோவாட் மற்றும் அதற்கு மேல்: ₹1.08 லட்சம் இந்தச் சலுகை, ஏற்கனவே இத்திட்டத்தின் கீழ் மின் நிலையம் அமைத்தவர்களுக்கும் பொருந்தும்.

பதிவு செய்வது எப்படி?

இத்திட்டத்தில் இணைய விரும்புவோர் https://pmsuryaghar.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம். மாநிலம், மாவட்டத்தைத் தேர்வு செய்து, மின் நுகர்வோர் எண், கைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரியைப் பதிவிட வேண்டும்.

கூடுதல் விவரங்களுக்கு:

தொலைபேசி: 94890-80373, 94890-8037

இணையதளம்: eezped.py.gov.in

தலைப்பு செய்திகள்

விஜய் அரசின் முதல் பட்ஜெட்: தென் தமிழகத்தை மாற்றும் விண்வெளி முதலீட்டு மண்டலம்!
விஜய் அரசின் முதல் பட்ஜெட்: தென் தமிழகத்தை மாற்றும் விண்வெளி முதலீட்டு மண்டலம்!
தமிழ்நாடு To கர்நாடகாவிற்கு ஜல்லுனு போகலாம்.! பொம்மசந்திரா வரை மெட்ரோ திட்டம்- பட்ஜெட்டில் அசத்தல்
தமிழ்நாடு To கர்நாடகாவிற்கு ஜல்லுனு போகலாம்.! பொம்மசந்திரா வரை மெட்ரோ திட்டம்- பட்ஜெட்டில் அசத்தல்
Tamil Nadu Budget 2026 LIVE: தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
பெண்களை இழிவா பேசுறவங்களுக்கு ஆண்மையே கிடையாது! - அன்புமணி ராமதாஸ் பரபரப்பு பேட்டி!
பெண்களை இழிவா பேசுறவங்களுக்கு ஆண்மையே கிடையாது! - அன்புமணி ராமதாஸ் பரபரப்பு பேட்டி!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Tamil Nadu Budget 2026 LIVE: தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
தமிழ்நாடு TO கர்நாடகா வரை மெட்ரோ ரயில் சேவை - பட்ஜெட்டில் தகவல்
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026 Highlights: தமிழக பட்ஜெட்: முதல்வர் விஜய் அறிவித்த டாப் 10 திட்டங்கள்! தங்கம் முதல் லேப்டாப் வரை!
TN Budget 2026: நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
நிதியை அள்ளிக் கொடுத்த CM விஜய்..! ஒவ்வொரு துறைக்கும் எத்தனை கோடிகள் - தமிழக பட்ஜெட் விவரங்கள்
TN Budget 2026: சமூக நீதியை காப்பாற்றினாரா CM விஜய்? பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதி என்ன? முக்கிய திட்டங்களின் லிஸ்ட்
சமூக நீதியை காப்பாற்றினாரா CM விஜய்? பட்ஜெட்டில் ஒதுக்கிய நிதி என்ன? முக்கிய திட்டங்களின் லிஸ்ட்
அடி தூள்.! 25,000 டூ 35,000 ரூபாயாக உயர்வு.. ஹஜ்க்கு செல்பவர்களுக்கு ஜாக்பாட்- பட்ஜெட்டில் அசத்தல்
அடி தூள்.! 25,000 டூ 35,000 ரூபாயாக உயர்வு.. ஹஜ்க்கு செல்பவர்களுக்கு ஜாக்பாட்- பட்ஜெட்டில் அசத்தல்
தமிழ்நாடு To கர்நாடகாவிற்கு ஜல்லுனு போகலாம்.! பொம்மசந்திரா வரை மெட்ரோ திட்டம்- பட்ஜெட்டில் அசத்தல்
தமிழ்நாடு To கர்நாடகாவிற்கு ஜல்லுனு போகலாம்.! பொம்மசந்திரா வரை மெட்ரோ திட்டம்- பட்ஜெட்டில் அசத்தல்
TN Budget 2026: மின் கட்டணமே கட்ட தேவையில்லை.! புதிய திட்டம் தொடங்க ரூ.1 லட்சம் மானியம்- பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு
மின் கட்டணமே கட்ட தேவையில்லை.! புதிய திட்டம் தொடங்க ரூ.1 லட்சம் மானியம்- பட்ஜெட்டில் அசத்தல் அறிவிப்பு
TN Budget 2026: மாணவர்களுக்கு ஜாக்பாட்: புதிய சைக்கிள் & லேப்டாப்- கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு!
TN Budget 2026: மாணவர்களுக்கு ஜாக்பாட்: புதிய சைக்கிள் & லேப்டாப்- கோடிக்கணக்கில் நிதி ஒதுக்கீடு!
Embed widget