Karnataka’s forced conversion : 10 வருஷம் ஜெயில்! திருமண மதமாற்றத்துக்கு சட்டம் கொண்டுவரும் கர்நாடகா!
கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டு கால சிறை தண்டனையும், 1 லட்சம் அபராதமும் வழங்க சட்டத்தில் வழி வகை செய்யப்பட்டுள்ளது
கட்டாயம் மதமாற்றத்திற்கு எதிரான வரைவு மசோதாவை கர்நாடகா அரசு தயாரித்து வருகிறது. தற்போது நடைபெற்று வரும் குளிர்கால கூட்டத் தொடரில் இந்த மசோதாவை தாக்கல் செய்ய அம்மாநில அரசு தீவிரமாக முயற்சிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கவனிக்கத்தக்க அம்சங்கள்: உத்தரபிரதேசம், மத்திய பிரதேசம் ஆகிய பாஜக ஆளும் மாநிலங்களில் நிறைவேற்றப்பட்டதைப் போன்று கடுமையான முறையில் மசோதா வரைவு செய்யப்பட்டுள்ளது. கட்டாய மதமாற்றத்தில் ஈடுபடுபவர்களுக்கு 10 ஆண்டு கால சிறை தண்டனையும், 1 லட்சம் அபராதமும் வழங்க சட்டத்தில் வழி வகை செய்யப்பட்டுள்ளது.
எந்தவொரு நபரும், தவறாக சித்தரிக்கப்படுதல்,வற்புறுத்தல், தூண்டுதல் அல்லது மோசடி வழிமுறையினாலும் அல்லது திருமணத்தினாலும் ஒரு மதத்திலிருந்து வேறு எந்த நபரையும் நேரடியாகவோ அல்லது வேறுவிதமாகவோ மாற்ற முயற்சிக்கக் கூடாது. சிறார்கள், பெண்கள், பட்டியலின் பழங்குடியின மக்களை கட்டாய மதமாற்றம் செய்தால் 3 முதல் 10 ஆண்டு கால சிறை தண்டனையும், பொது பிரிவினரை சட்டவிரோதமாக மதமாற்ற செய்வோருக்க் மூன்று ஆண்டு முதல் 5 ஆண்டு காலசிறைத் தண்டனையும் விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
சட்டவிரோத மதமாற்றம் தொடர்பான புகார்களை பாதிக்கப்பட்டவரின் குடும்ப உறுப்பினர்கள் அல்லது அவருக்கு தொடர்புடைய நபர்கள் யார் வேண்டுமானாலும் அளிக்கலாம். மேலும், குற்றம் சாட்டப்பட்டவர் தான் தனது தரப்பு வாதத்தை மெய்பிக்கும் (Burden of Proof )கடமை உண்டு என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ச்சியான போக்கு: கர்நாடகாவில் செயல்படும் அநேக கிறிஸ்த்துவ தேவாலயங்கள் திட்டமிட்டு மதமாற்றத்தில் ஈடுபடுவதாக அம்மாநில முதல்வர் பசவராஜ் பொம்மை குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து, மதரீதியாக சிறுபான்மையின மக்களுக்கு எதிரான தாக்குதல் சம்பவங்கள் அங்கு அதிகரித்து காணப்படுகின்றன. குறிப்பாக, கிறிஸ்தவ போதர்களுக்கும் பிரார்த்தனை கூட்டங்களில் பங்குபெறுவோருக்கும் எதிரான வன்செயல் சம்பவங்களை Association for Protection of Civil Rights அமைப்பு வெளியிட்ட உண்மை கண்டறியும் அறிக்கை ஆவணப்படுத்தியது. கிறிஸ்துவ சமயச்சார்பான குழுக்கள் மீதும், மதக்கொள்கையிலும் தீவிரமான போக்கை கைவிடுமாறு மாநில எதிர்க்கட்சிகள் முதல்வருக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றன.
கடந்த நவம்பர் மாத இறுதியில், பெலூர் பகுதியில், தேவாலயத்தில் பிரார்த்தனை சேவை நடைபெற்றுக் கொண்டிருக்கும் போது, விஸ்வ இந்து பரிசத் மற்றும் பஜ்ரங் தளத்தைச் சேர்ந்தவர்கள் வேண்டுமென்றே இடையூறு செய்தனர். இதுதொடர்பான வீடியோ ஒன்று சமூக ஊடகங்களில் பேசுபொருளானது. இருந்தாலும், இதுவரைக்கும் இந்த விசயத்தில் காவல்துறை சார்பில் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை என்று சமூகஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
Bajarang Dal members barge into a Prayer Hall in Hassan district of #Karnataka, allege Conversion. Visuals of alleged incident shows the activists stopping the prayer and asking the people to step out of the prayer hall. @IndianExpress pic.twitter.com/GNtpTNqHzn
— Darshan Devaiah B P (@DarshanDevaiahB) November 29, 2021
இதற்கிடையே, மாநிலத்தில் செயல்பட்டு கொண்டிருக்கும் கிறிஸ்துவ சமயச்சார்பான தொடர்பான கணக்கெடுப்பை நடத்த வேண்டும் என கர்நாடகா சட்டப்பேரவை பிற்படுத்தப்பட்டோர் மட்டும் சிறுபான்மையினர் குழு முடிவெடுத்தது. இதற்கு, பல்வேறு கிறிஸ்த்துவ சமயகுழுக்களும் எதிர்ப்புத் தெரிவித்து வந்தன.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்