இதுவும் ஒரு ஏர்போர்ட் கதை.. ஏர் இந்தியா விமானியை மீண்டும் பணியமர்த்தும் விவகாரத்தில் உயர்நீதிமன்றம் சொன்னது என்ன?
சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஏர் இந்தியா நிறுவன விமானியை மீண்டும் பணியமர்த்துவது குறித்து உரிய முடிவெடுக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஏர் இந்தியா நிறுவன விமானியை மீண்டும் பணியமர்த்துவது குறித்து உரிய முடிவெடுக்கமாறு அந்நிறுவனத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருக்கிறது.
கடந்த 2018 ஆம் ஆண்டு, 136 பயணிகளுடன் துபாய் புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் ஒன்று சிறிய விபத்துக்கு உள்ளானது.
தொழில்நுட்ப கோளாறு காரணமாகவே திருச்சி விமான நிலைய சுற்றுச்சுவரில் விமானம் மோதி விபத்துக்குள்ளானது. தொழில்நுட்பக் கோளாறால் குறைந்த உயரத்தில் பறந்து விமானம் 5 அடி உயர சுற்றுச்சுவர், அங்கு உள்ள கட்டுப்பாட்டு கோபுரத்தில் மோதியது. ஆனால், இந்த விமான விபத்தைத் தொடர்ந்து, விமானி கணேஷ் பாபுவின் உரிமத்தை 3 ஆண்டுகளுக்கு ரத்து செய்து சிவில் விமான போக்குவரத்து இயக்ககம் உத்தரவிட்டது.
இந்த சஸ்பெண்ட் உத்தரவை எதிர்த்து விமானி கணேஷ் பாபு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். இந்த மனு மீதான விசாரணை இன்று (நவம்பர் 30 ஆம் தேதி) நீதிபதி மகாதேவன் முன்பு விசாரணைக்கு வந்தது.
கடந்த 2018 ஆம் ஆண்டு வரை 4,270 மணி நேரம் விபத்தில்லாமல் கணேஷ் பாபு விமானம் ஓட்டியதாக அவரது வழக்கறிஞர் ஐகோர்ட்டில் தகவல் அளித்துள்ளார். ஆனால், விமானம் புறப்படும்போது இன்ஜின் உந்துதலை கண்காணிக்க விமானி தவறிவிட்டதாக விமான போக்குவரத்து இயக்குநரகம் புகார் அளித்துள்ளது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி மகாதேவன், விமானி மனு தொடர்பாக 4 வாரத்தில் முடிவெடுக்க ஏர் இந்தியா நிறுவனத்துக்கு உத்தரவு பிறப்பித்தார்.
சென்னை உயர் நீதிமன்ற உத்தரவால், விமானிக்கு பணியிடை நீக்கத்தில் இருந்து விமோசனம் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மேலும் படிக்க:
மேலும் படிக்க..
Migraine | ஒற்றைத் தலைவலி பாடாய்படுத்துதா? இந்த 7 விஷயமும் உங்களுக்கான மந்திரம்..
இந்த பாகங்களில் தொடர்ச்சியாக வலி இருந்தால் கவனிங்க.. மாரடைப்பின் அறிகுறியாக இருக்கலாம்..
Jaw Pain and Heart Attack | தாடை வலி, மாரடைப்பு வருவதற்கான அறிகுறியா?
முடி கொட்டுதா? பிரச்னை இதுதான்..! தலைமுடியும்.. தெரியாத தகவல்களும்!
Diabetes | சர்க்கரை நோய் குறித்து பரப்பப்படும் டாப் 10 பொய்கள் இவைதான்.. இதையெல்லாம் நம்பாதீங்க..
மழைக்காலத்தில் உடலை கதகதப்பாக்கும் உணவுகள் இதோ!
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்