குரு பகவானின் வக்கிர நிவர்த்தி - மேஷ ராசி!!!
முன்பாக நின்று தைரியமாக பேசாத நபர்கள் கூட தற்பொழுது அனைத்து காரியங்களிலும் முன்பாக நின்று பேசுவார்கள்...
அன்பார்ந்த மேஷ ராசி வாசகர்களே குரு பகவான் கடக ராசியில் இருந்து தற்போது வக்கிர நிவர்த்தி அடைந்து மிதுன ராசியில் பயணம் செய்யும் காலகட்டம் வந்துவிட்டது... டிசம்பர் முதல் வாரத்திற்கு பிறகு வக்கர நிவர்த்தி அடையும் குரு பகவான் உங்கள் ராசிக்கு 12-ம் வீட்டு அதிபதியும் ஒன்பதாம் வீட்டு அதிபதியுமாக வருகிறார்.... 12 ஆம் பாவகம் என்பது நீண்ட தூர பிரயானங்களை குறிக்கும், நல்ல உறக்கத்தையும் குறிக்கும், ஒரு மனிதனுக்கு நல்ல உறக்கம் வரவேண்டும் என்றால் நிச்சயம் அவர் கவலை இல்லாமல் இருக்க வேண்டும் அல்லவா? இந்த காலகட்டத்தில் குரு பனிரெண்டாம் பாவகத்திற்கு நான்காம் பாவகத்தில் அமர்ந்திருக்கிறார் அதாவது சௌகரியமான இடம்... ஆனால் அவர் உங்கள் ராசிக்கு மூன்றாம் வீட்டில் அமர்வதால் நிச்சயமாக பயணங்கள் மூலம் உங்களுடைய முயற்சிகள் இருக்கும்... சண்டை போட்டுக் கொண்டு நீ எனக்கு தேவையில்லை என்று சொல்லிக்கொண்டு இருந்த நண்பர்கள் நீங்கள்தான் வேண்டும் என்று வந்து நிற்பார்கள்... கணவன் மனைவிக்குள் எப்படிப்பட்ட பிரச்சனைகள் இருந்தாலும் அவை சரியாக கூடிய காலகட்டம்... நான்காம் பாவத்திற்கு பன்னிரெண்டாம் பாவகத்தில் குரு பகவான் அமரும் பொழுது ஒரு இடத்தை விட்டு மற்றொரு இடத்திற்கு போகலாமா? அல்லது இந்த வீட்டை விற்று வேறு வீடு வாங்கலாமா போன்ற எண்ணங்கள் மேலோங்கும்... அதற்காக அனைத்து மேஷ ராசியினரும் இப்படித்தான் செய்வார்கள் என்பது இல்லை... அவரவர் தசாபுத்திகளின் அடிப்படையில் நிச்சயமாக ஜாதக பலன்கள் மேலோங்கும்....
முன்பாக நின்று தைரியமாக பேசாத நபர்கள் கூட தற்பொழுது அனைத்து காரியங்களிலும் முன்பாக நின்று பேசுவார்கள்... காற்று ராசியில் குரு பகவான் பயணிக்கும் பொழுது கடல் கடந்து போக வாய்ப்பு உண்டு... வெளிநாட்டு தொழிலில் ஈடுபடுபவர்கள் அதாவது ஏற்றுமதி இறக்குமதி போன்ற துறைகளில் இருப்பவர்களுக்கு பிசினஸ் நிமித்தமாக அயல்நாடு செல்வதற்கான யோகம் உண்டு.... ஒரு ஊரிலிருந்து மற்றொரு ஊருக்கு சென்று வியாபாரம் செய்வதற்கான ஏற்ற காலகட்டம்தான்... தாயாரின் உடல் நிலையில் சற்று அக்கறை தேவை.... குறிப்பாக அவர்களுக்கு எது மாதிரியான பிரச்சனைகள் இருந்தாலும் தற்போது அவை குணமாக கூடிய நேரமாக தான் உள்ளது... மேஷ ராசிக்கு ஏற்கனவே பதினொன்றாம் பாவகத்தில் ராகு அமர்ந்து பெரிய லாப கணக்கு மனதிற்குள் போட்டு வைத்திருப்பீர்கள்.. அதாவது பணம் வரும் சிறப்பாக இருக்கலாம் கடன் எல்லாம் அடைந்து விட்டது என்பது போன்று ஆனால் அவை ஒரு முறைக்கு இருமுறை உண்மைதானா சரிதானா என்று சிந்தித்துப் பாருங்கள்... லாப ஸ்தானத்தில் ராகு அமரும்போது சோசியல் மீடியா மூலமாக புகழ் வெளிச்சம் உங்கள் மீது படும் அதற்கு எந்தவிதமான தடையும் கிடையாது... உங்களை பிரமோட் செய்ய சமூக வலைதளங்களை பயன்படுத்தினால் நிச்சயமாக நல்ல பலன்களை எதிர்பார்க்கலாம்... யூட்யூப் சேனல் ஆரம்பிக்க போகிறேன் instagramயில் பேச போகிறேன் என்பது போன்ற நபர்களுக்கு இது ஒரு பொற்காலம் என்றே கூற வேண்டும்.. காரணம் குருவானவர் கம்யூனிகேஷன் என்று சொல்லக்கூடிய மூன்றாம் பாவகத்தில் அமர்ந்து பயணிக்கிறார் அதேபோல ராகுவானவர் பதினொன்றாம் பாவகத்தில் அமர்ந்து லாபத்தை கொடுக்க குருவானவர் ராகுவை பார்க்கும் இந்த காலகட்டத்தில் மேஷ ராசிக்கு இன்டர்நெட்டை பயன்படுத்தி செய்யக்கூடிய விஷயங்கள் எல்லாம் சாதகமாக தான் முடியும்... நவ கிரகத்தில் இருக்கும் குரு பகவானை சென்று வழிபடுங்கள் ஏற்றத்தை பெறுங்கள்...





















