கரூர் மாயனூர் கதவணைக்கு நீர்வரத்து சரிவு
குடிநீர் தேவைக்காக, அமராவதி ஆற்றில் வினாடிக்கு, 80 கன அடி திறக்கப்பட்டது. புதிய பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. 90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 52.43 அடியாக இருந்தது.
காவிரியில் நீர்வரத்து 252 கனஅடியாக சரிவு
கரூர் காவிரி ஆற்றில், மாயனூர் கதவணைக்கு, வரும் தண்ணீரின் அளவு வினாடிக்கு, 252 கனஅடியாக குறைந்தது. மாயனூர் கதவணைக்கு, காலை ஆறு மணி நிலவரப்படி வினாடிக்கு, 252 கன அடி தண்ணீர் வந்தது. தண்ணீர் முழுவதும், ஆற்றில் அப்படியே திறந்து விடப்பட்டது. நான்கு பாசன வாய்க்காலில், தண்ணீர் நிறுத்தப்பட்டுள்ளது.
அமராவதி அணை நிலவரம்.
திருப்பூர் மாவட்டம், உடுமலைப்பேட்டை அமராவதி அணைக்கு, காலை 6 மணி நிலவரப்படி, வினாடிக்கு, 19 கன அடி தண்ணீர் வந்தது. ஆனால், குடிநீர் தேவைக்காக, அமராவதி ஆற்றில் வினாடிக்கு, 80 கன அடி திறக்கப்பட்டது. புதிய பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டது. 90 அடி உயரம் கொண்ட அணை நீர்மட்டம், 52.43 அடியாக இருந்தது.
நங்காஞ்சி அணை நிலவரம்.
திண்டுக்கல் மாவட்டம், வடகாடு மலைப் பகுதிகளில் மழை இல்லாததால், நங்காஞ்சி ஆற்றுக்கு தண்ணீர் வரத்து இல்லை. 39.37 அடி உயரம் கொண்ட நங்காஞ்சி அணையின் நீர்மட்டம் தற்போது 38.91 அடியாக உள்ளது. நங்கஞ்சி ஆற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
ஆத்துப்பாளையம் அணை
கா. பரமத்தி அருகே, கார்வழி ஆத்துப்பாளையம் அணைக்கு காலை 6:00 மணி நிலவரப்படி தண்ணீர் வரத்து இல்லை. 26.90 அடி உயரம் கொண்ட அணையின் நீர்மட்டம், 14.13 அடியாக இருந்ததால், நொய்யல் பாசன வாய்க்காலில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
மாயனூர் கதவணை அருகில் மீன் விற்பனை
மாயனூர் கதவனை அருகில் மீன் விற்பனை மும்மரமாக நடந்தது. மாயனூர் காவிரி கதவணை பகுதியில் உள்ளூர் மீனவர்கள் பரிசலில் சென்று மீன் பிடித்து வருகின்றனர். இங்கு பிடிக்கப்படும் மீன்களை கதவனை அருகே வாய்க்கால் கரையில் வைத்து விற்பனை செய்கின்றனர். தற்போது மீன்கள் குறைவாக கிடைக்கிறது. ஜிலேபி ராக மீன்களை மீனவர் வகையில் சிக்குகின்றன. விடுமுறை தினம் என்பதால் ஜிலேபி மீன் கிலோ 130 கொண்டை மீன் 100 ரூபாய் விற்பனை செய்யப்பட்டன. மொத்தம் 150 கிலோ மீட்டர் விற்பனை செய்யப்பட்டதாக மீனவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. குளித்தலில், கிருஷ்ணராயபுரம் ஆகிய பகுதிகளில் இருந்து வந்திருந்த மக்கள் மீன்களை வாங்கி சென்றனர்.