Tamilnadu Covid Update : தமிழ்நாட்டில் இன்று 1467 பேருக்கு தொற்று உறுதி, 16 பேர் உயிரிழப்பு
இன்று 1467 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா காரணமாக 16 பேர் உயிரிழந்தனர்
தமிழ்நாட்டில் இன்று 1467 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. கொரோனா காரணமாக 16 பேர் உயிரிழந்தனர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கையும், உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து குறைந்து வருகிறது.தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் இன்று 16 பேர் உயிரிழந்தனர். அதில் தனியார் மருத்துவமனையில் 6 பேர் , அரசு மருத்துவமனையில் 10 பேரும் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 35,666 ஆக அதிகரித்துள்ளது.
கொரோனா சிகிச்சை முடிந்து இன்று மேலும் 1,5592 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். இதனால் கொரோனா பாதிப்பில் இருந்து குணமடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 26,17,432 ஆக உயர்ந்துள்ளது. தமிழகம் முழுவதும் தற்போது வரை 16,864 பேர் கொரோனா தொற்றிற்கு சிகிச்சை பெற்று வருவதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது. மாநிலம் முழுவதும் இன்று புதிதாக 1 லட்சத்து 48 ஆயிரத்து 749 பேருக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டுள்ளது என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சென்னையில் இன்று மேலும் 181 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவையில் இன்று 155 பேருக்கும், செங்கல்பட்டு 103 பேருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. உலகம் முழுக்க கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களை விட மீண்டவர்கள் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.
சேலம் மாவட்டத்தில் இன்று ஒரேநாளில் புதிதாக 51 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த 24 மணிநேரத்தில் உயிரிழப்பு இல்லை. மாவட்டத்தின் மொத்த உயிரிழப்பு 1667-ஆக உள்ளது. மேலும் 81 பேர் இன்று குணமடைந்து வீடு திரும்பினர். இதுவரை சேலம் மாவட்டத்தில் 95,989 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 98,343 ஆக உயர்வு. மாவட்டத்தில் 687 பேர் கொரோனாவிற்கு சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மாவட்டத்தில் ஐந்து சதவீதத்திற்கும் குறைவான படுக்கைகளில் மட்டுமே நோயாளிகள் உள்ளனர். கரூர் மாவட்டத்தில் புதிதாக 18 நபர்களுக்கு தொற்று பாதிப்பு. இதனால் கரூர் மாவட்டத்தில் இதுவரை தொற்று பதித்தவர்கள் 23667 ஆக உயர்ந்துள்ளது. கரூர் மாவட்டத்தில் இன்று சிகிச்சை பலனின்றி இறந்தவர் யாரும் இல்லை. கரூர் மாவட்டத்தில் இன்று சிகிச்சை பலனின்றி இறந்தவர் யாரும் இல்லை
உலகம் முழுவதும் பல நாடுகளில் மாடர்னா, ஃபைசர் உள்ளிட்ட பல்வேறு வகையான தடுப்பூசிகள் போடப்படுகின்றன. இந்தியாவில் கோவேக்சின், கோவிஷீல்டு,ஸ்புட்னிக் உள்ளிட்ட பல்வேறு வகையான தடுப்பூசிகள் போடப்படுகின்றன. இந்நிலையில் செப்டம்பர் இறுதியில் கொரோனா 3ம் அலைக்கான வாய்ப்புகள் இருப்பதாக சொல்லப்பட்ட நிலையில், தடுப்பூசிதான் அதை வராமல் தடுத்திருப்பதாகவும் தெரிவிக்கிறார்கள் மருத்துவ நிபுணர்கள்.