மேலும் அறிய

பிரதமர் அடிக்கல் நாட்டிய மதுரை எய்ம்ஸ் கல்லூரியில் மாணவர்களுக்கான வகுப்புகள் தொடக்கம்

மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கான முதலாமாண்டு வகுப்புகள், ராமநாதபுரம் மருத்துவ கல்லூரியில் தொடங்கி உள்ளது

மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரிக்கான முதலாமாண்டு வகுப்புகள், ராமநாதபுரம் கல்லூரியில் ஏப்ரல் 4-ம் தேதி முதல் தொடங்கப்படுவதாக, மதுரை எய்ம்ஸ் கல்லூரியின் இயக்குநர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். மதுரையில் எய்ம்ஸ் மருத்துவமனையை தொடங்குவதற்காக 27-1-2019 அன்று மாண்புமிகு பிரதமர் அவர்களால் அடிக்கல் நாட்டப்பட்டது. மருத்துவமனைக்காக தலைவர் மற்றும் செயல் இயக்குனர் நியமிக்கப்பட்டு சில குழுக்களும் அமைக்கப்பட்டுள்ளன. இதற்கான நிலம் மத்திய் அரசுக்கு வழங்கப்பட்ட நிலையில், இவ்விடத்தில் மருத்துவமனை மற்றும் கல்லூரி வளாகத்திற்கான பணிகள் இன்னும் முடிவடையவில்லை. இந்த நிலையில், ராமநாதபுரம் மாவட்ட அரசு மருத்துவக் கல்லூரியில் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மாணவர்களுக்கான வகுப்புகள் இன்று முதல் தொடங்கி உள்ளது. மதுரை எய்ம்ஸ் கல்லூரியின் கட்டுமான பணிகள் முடிவடையாததை அடுத்து ராமநாதபுரம் மாவட்ட மருத்துக் கல்லூரியின் 5 ஆவது தளத்தில் 2 ஆண்டுகளுக்கு தற்காலிக வகுப்பறைகள் அமைக்கப்பட்டுள்ளன.

பிரதமர் அடிக்கல் நாட்டிய மதுரை எய்ம்ஸ் கல்லூரியில் மாணவர்களுக்கான வகுப்புகள் தொடக்கம்

50 மாணவர்களுக்கு தேவையான ஆய்வகங்கள், விடுதிகள், அலுவலக கட்டிடங்கள் என அனைத்து கட்டமைப்புகளும் உருவாக்கப்பட்டுள்ளன. உடற்கூறுயியல், உடலியங்கியல், பயோகெமிஸ்ட்ரி மற்றும் சமூகம் சார்ந்த மருத்துவத்துறைக்கு 8 பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.மீதமுள்ள பேராசிரியர்கள் கல்லூரியில் பணிக்கு இணைவார்கள் என்று தெரிகிறது. இங்கு மாணவர்களுக்கு வசதியாக ஸ்மார்ட் வகுப்பறைகள், உலக தரத்திலான விரிவுரை அரங்குகள், டிஜிட்டல் நூலகம் ஆய்வகம், பயிற்சிக்கூடம், உடற்கூறு அறுவை அரங்குகள் போன்றவையும் ஏற்படுத்தப்பட்டு உள்ளது.

இதனிடையே ராமநாதபுரத்தில் புதிய அரசு மருத்துவக்கல்லூரி தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில் பிரதமர் மோடியால் தொடங்கி வைக்கப்பட்டது.  முதற்கட்டமாக ராமநாதபுரத்தில் நூறு மாணவர்கள் சேர்க்கைக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டு வகுப்புகள் தற்போது நடந்து வருகின்றன.  50 இடங்கள் மதுரை எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரி மருத்துவ மாணவர்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.  

பிரதமர் அடிக்கல் நாட்டிய மதுரை எய்ம்ஸ் கல்லூரியில் மாணவர்களுக்கான வகுப்புகள் தொடக்கம்

அதாவது, மதுரை எய்ம்ஸ் மருத்துவ கல்லூரி தற்காலிகமாக ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரியில் செயல்படுகிறது. எய்ம்ஸ் மருத்துவக் கல்லூரியின் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை முடிந்து விட்டது. தமிழகம் உட்பட இந்தியா முழுவதிலும்  பல்வேறு மாநிலங்களில் இருந்து 50 மாணவர்கள்  இந்தாண்டு சேர்க்கப்பட்டுள்ளனர். இன்று முதல் முதலாம் ஆண்டு எம்பிபிஎஸ் மாணவர்களுடைய வகுப்பு தொடங்கப்படுகிறது.  ராமநாதபுரம் அரசு மருத்துவ கல்லூரி வளாகத்தில்  தனியாக செயல்படும் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிக்கு என உடற்கூரியியல், உடல் இயங்கியல், பயோ கெமிஸ்ட்ரி  மற்றும் சமூகம் சார்ந்த மருத்துவ துறைக்கு என தனியாக பேராசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர் மதுரை ராமநாதபுரம் மருத்துவ கல்லூரி வளாகத்தில் உள்ள எய்ம்ஸ் மருத்துவ கல்லூரியில்  ஸ்மார்ட் வகுப்பறைகள், உலகத்தரம் வாய்ந்த விரிவுரை அரங்கம், டிஜிட்டல் நூலகம், நவீன ஆய்வகங்கள், பயிற்சிக் கூடம், உடற்கூரியியல் அறுவை அரங்கம் மற்றும் மாணவ மாணவிகளுக்கு என தனித்தனியாக ஹாஸ்டல் வசதிகள் செய்யப்பட்டுள்ளது என எய்ம்ஸ் நிர்வாக துணை இயக்குனர் பி.வி எஸ்.ஜம்வால் தெரிவித்திருந்தார்.இந்த நிலையில் இன்று ராமநாதபுரம் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் எய்ம்ஸ் மருத்துவ கல்லூரிக்கான வகுப்புகள் தொடங்கியுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

மெயின் விக்கெட்! நாம் தமிழர் கட்சியின் பொறுப்புகளை துறந்த காளியம்மாள்? இன்று வெளியாகும் அறிவிப்பு
மெயின் விக்கெட்! நாம் தமிழர் கட்சியின் பொறுப்புகளை துறந்த காளியம்மாள்? இன்று வெளியாகும் அறிவிப்பு
US Threatens Ukraine: நீ அத தரலைன்னா, நான் இத கட் பண்ணிடுவேன்... உக்ரைனை மிரட்டும் அமெரிக்கா...
நீ அத தரலைன்னா, நான் இத கட் பண்ணிடுவேன்... உக்ரைனை மிரட்டும் அமெரிக்கா...
CBSE: எதிர்த்தா பேசுறீங்க..! மாநில அரசுகளின் உரிமையை பறித்த மத்திய அரசு - இனி சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு..!
CBSE: எதிர்த்தா பேசுறீங்க..! மாநில அரசுகளின் உரிமையை பறித்த மத்திய அரசு - இனி சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு..!
Rahul Slams Modi: அது ஒண்ணும் பர்சனல் மேட்டர் இல்ல, மோடி இப்படி செஞ்சுருக்க கூடாது..எதை பற்றி கூறினார் ராகுல்.?
அது ஒண்ணும் பர்சனல் மேட்டர் இல்ல, மோடி இப்படி செஞ்சுருக்க கூடாது..எதை பற்றி கூறினார் ராகுல்.?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

NEEK Movie review | விடிய விடிய ஒட்டிய NEEK! தனுஷ் செய்த பெரிய தப்பு? காவியமா..? கிரிஞ்சா..?Annamalai | சால்வை போட வந்த நிர்வாகி தள்ளி விட்ட கே.பி ராமலிங்கம் அ.மலை நிகழ்ச்சியில் அதிர்ச்சி! | BJPMarina Police vs Lady : ’’இருட்டுல என்ன பண்றீங்க?’’அநாகரிகமாக விசாரித்த போலீஸ் மெரினாவில் பெண் ஆவேசம்!Delhi New CM | டெல்லியின் புதிய முதல்வர்! பெண் MLA விற்கு அடித்த ஜாக்பாட்! யார் இந்த ரேகா குப்தா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
மெயின் விக்கெட்! நாம் தமிழர் கட்சியின் பொறுப்புகளை துறந்த காளியம்மாள்? இன்று வெளியாகும் அறிவிப்பு
மெயின் விக்கெட்! நாம் தமிழர் கட்சியின் பொறுப்புகளை துறந்த காளியம்மாள்? இன்று வெளியாகும் அறிவிப்பு
US Threatens Ukraine: நீ அத தரலைன்னா, நான் இத கட் பண்ணிடுவேன்... உக்ரைனை மிரட்டும் அமெரிக்கா...
நீ அத தரலைன்னா, நான் இத கட் பண்ணிடுவேன்... உக்ரைனை மிரட்டும் அமெரிக்கா...
CBSE: எதிர்த்தா பேசுறீங்க..! மாநில அரசுகளின் உரிமையை பறித்த மத்திய அரசு - இனி சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு..!
CBSE: எதிர்த்தா பேசுறீங்க..! மாநில அரசுகளின் உரிமையை பறித்த மத்திய அரசு - இனி சிபிஎஸ்இ பள்ளிகளுக்கு..!
Rahul Slams Modi: அது ஒண்ணும் பர்சனல் மேட்டர் இல்ல, மோடி இப்படி செஞ்சுருக்க கூடாது..எதை பற்றி கூறினார் ராகுல்.?
அது ஒண்ணும் பர்சனல் மேட்டர் இல்ல, மோடி இப்படி செஞ்சுருக்க கூடாது..எதை பற்றி கூறினார் ராகுல்.?
Anna Univ Case: யாருப்பா நீ? மேலும் 7 வழக்குகளில் கைதான ஞானசேகரன் - நீளும் குற்றப்பட்டியல், போலீஸ் அதிரடி
Anna Univ Case: யாருப்பா நீ? மேலும் 7 வழக்குகளில் கைதான ஞானசேகரன் - நீளும் குற்றப்பட்டியல், போலீஸ் அதிரடி
Udhayanidhi: ஆண்மை என்றால் என்ன? அமைச்சருக்கு கிளாஸ் எடுத்த உதயநிதி - ”நான் சொல்றது என்னென்னா..”
Udhayanidhi: ஆண்மை என்றால் என்ன? அமைச்சருக்கு கிளாஸ் எடுத்த உதயநிதி - ”நான் சொல்றது என்னென்னா..”
WPL 2025 Points Table: நீயா? நானா? மும்பை - பெங்களூரு இடையே கடும் போட்டி - புள்ளிப்பட்டியலில் முதலிடம் யாருக்கு?
WPL 2025 Points Table: நீயா? நானா? மும்பை - பெங்களூரு இடையே கடும் போட்டி - புள்ளிப்பட்டியலில் முதலிடம் யாருக்கு?
Eknath Shinde: நான் கொஞ்சம் வேற மாதிரி..! எச்சரிக்கும் ஏக்நாத் ஷிண்டே..! லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்யும் பாஜக
Eknath Shinde: நான் கொஞ்சம் வேற மாதிரி..! எச்சரிக்கும் ஏக்நாத் ஷிண்டே..! லெஃப்ட் ஹேண்டில் டீல் செய்யும் பாஜக
Embed widget