Chennai Metro Train: கிருஷ்ண ஜெயந்தி..சென்னை மெட்ரோ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு
கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு இன்று (ஆகஸ்ட் 26) சென்னை மெட்ரோ ரயில்கள் சனிக்கிழமை அட்டவணைப்படி இயங்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
![Chennai Metro Train: கிருஷ்ண ஜெயந்தி..சென்னை மெட்ரோ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு Chennai Metro Train Krishna Jayanthi Timings Train arrival timings Chennai Metro Train: கிருஷ்ண ஜெயந்தி..சென்னை மெட்ரோ வெளியிட்ட முக்கிய அறிவிப்பு](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2024/08/26/5c273fc07f30d8fdc60e1b87e105afad1724650714896572_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
சென்னை மெட்ரோ:
சென்னையில் போக்குவரத்து சேவையில் முக்கிய பங்கு வகிப்பது சென்னை மெட்ரோ. நாளுக்கு நாள் இதில் பயணிக்கும் பயணிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. இச்சூழலில் தான் கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு இன்று (ஆகஸ்ட் 26) சென்னை மெட்ரோ சனிக்கிழமை அட்டவணைப்படி இயங்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது.
சனிக்கிழமை கால அட்டவணை:
இது தொடர்பாக சென்னை மெட்ரோ நிர்வாகம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருக்கிறது. அந்த அறிவிப்பில்,"கிருஷ்ண ஜெயந்தியை முன்னிட்டு இன்று சனிக்கிழமை கால அட்டவணை பின்பற்றப்படும். மெட்ரோ ரயில்கள் காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை பின்வரும் நேர நேர இடைவெளிகளில் இயங்கும். அதன்படி, காலை 8 மணி முதல் 11 மணி வரை, மாலை 5 மணி முதல் இரவு 8 மணி வரை 6 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயங்கும்.
On account of Krishna Jayanthi Festival on 26/08/2024 (Monday). Saturday Timetable will be followed tomorrow (26-08-2024). Metro Trains will run during its service hours from 05:00 am to 23:00 pm in the following timings: 08:00 am – 11:00 am & 17:00 pm- 20:00 pm : Metro…
— Chennai Metro Rail (@cmrlofficial) August 25, 2024
காலை 5 மணி முதல் 8 மணி வரை, காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை மற்றும் இரவு 8 மணி முதல் 10 மணி வரை 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயங்கும். இரவு 10 மணி முதல் 11 மணி வரை 15 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயங்கும்" என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)