மேலும் அறிய

ராமநாதபுரம் மாவட்ட பள்ளிகளில் பற்றி எரியும் சாதீ...! கைதாகி கருகும் மாணவ மலர்கள்...!

பொதுவாக மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கக்கூடாது என்ற அடிப்படையில் இதுபோன்ற சம்பவங்களின்போது சமரசம் செய்து எச்சரித்து எழுதி வாங்கியோ, நிலைய பிணையிலோ அனுப்பி விடுவது வழக்கம்

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களாக மாணவர்களிடையே சாதிய மோதல் அதிகரித்து வருகிறது. இந்தநிலையில் அரசு பேருந்தில் சாதி பாடல் சத்தமாக கேட்டதால் இரு பிரிவினரிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக 5 மாணவர்கள் கைது செய்யப்பட்டு மதுரை சிறையில் அடைக்கப்பட்டனர். பள்ளிகளில் சாதியை குறிக்கும் வகையில், மாணவர்கள் வண்ணக்கயிறுகள் கட்டக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை சார்பில் கடந்த கடந்த 2019 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12 ஆம் தேதி, சுற்றறிக்கை அனுப்பப்பட்டது. தென் தமிழகத்தில் உள்ள பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்கள், தாங்கள் சார்ந்திருக்கும் சாதியைக் குறிக்கும் வகையில் கைகளில் வண்ணக்கயிறுகள், ரப்பர் பேண்ட்கள் அணிவதை வழக்கமாக கொண்டுள்ளனர்.  மேலும், சாதிக்கொடிகளை பிரதிபலிக்கும் வகையில் நெற்றியில் பொட்டு வைக்கின்றனர்.

ராமநாதபுரம் மாவட்ட பள்ளிகளில் பற்றி எரியும் சாதீ...! கைதாகி கருகும் மாணவ மலர்கள்...!

ராமநாதபுரம் மாவட்டத்தில் கடந்த காலங்களில் சாதிய மோதல்கள் அதிக அளவில் நடந்து வந்த நிலையில் அதன் பின்னர் அமைதி ஏற்பட்டு மாவட்டம் பல்வேறு வளர்ச்சி திட்டங்கள், கல்வி காரணமாக வளர்ச்சியை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. இந்தநிலையில் கொரோனா பரவலுக்கு பின்னர் பள்ளி, கல்லூரிகளுக்கு செல்லாமல் வீடுகளில் இருந்து சுற்றிதிரிந்து வந்த மாணவர்களிடையே பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன. குறிப்பாக கடந்த சில மாதங்களாக பள்ளி கல்லூரி மாணவர்களிடையே அடிக்கடி மோதல் சம்பவங்கள், கல்வீச்சு என நடந்து வருகிறது. ராமநாதபுரம் பள்ளிகளின் வாசல்களிலேயே இதுபோன்ற தாக்குதல் சம்பவங்கள் கடந்த சில மாதங்களில் நடந்துள்ளது. இதனை அந்தந்த பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பெற்றோர்கள் போலீசாருடன் இணைந்து சமரச பேச்சுவார்த்தை மூலம் தீர்த்து பிரச்சினை பெரிதாகாமல் பார்த்து வந்தனர். 

ராமநாதபுரம் மாவட்ட பள்ளிகளில் பற்றி எரியும் சாதீ...! கைதாகி கருகும் மாணவ மலர்கள்...!

இருப்பினும் மாணவர்கள் இடையே மோதல் போக்கு என்பது அதிகரித்த வண்ணம் இருந்து வருகிறது. குறிப்பாக சாதி தொடர்பான மோதல் போக்கு அதிகரித்து வருவது வேதனை அளிப்பதாக உள்ளது. இவ்வாறு மாணவர்கள் அரசு பேருந்தில் பள்ளி, கல்லூரிக்கு சென்றுவரும்போது மோதல் உருவாகி உள்ளது. இதில் ஒரு பிரிவை சேர்ந்த மாணவர்கள் தங்களின் சமுதாயம் சார்ந்த பாடல்களை ப்ளுடூத்தில் அதிக சத்தத்துடன் கேட்டு வந்ததால் மற்றொரு பிரிவை சேர்ந்த மாணவர்கள் கண்டித்து அதனால் தகராறும் அதனை தொடர்ந்து இருதரப்பினரும் இருவேறு இடங்களில் மோதல் நடவடிக்கையிலும் இறங்கி கல்வீச்சு வரை சென்று உள்ளனர்.

ராமநாதபுரம் மாவட்ட பள்ளிகளில் பற்றி எரியும் சாதீ...! கைதாகி கருகும் மாணவ மலர்கள்...!

இதுதொடர்பாக இருதரப்பினரும் ஒருவர் மீது ஒருவர் ராமநாதபுரம் நகர் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். இதன்படி 5 மாணவர்கள் மீதும் வழக்கு பதிந்து கைது செய்து மதுரை சிறுவர் சிறையில் அடைத்துள்ளனர்.  பொதுவாக மாணவர்களின் எதிர்காலம் பாதிக்கக்கூடாது என்ற அடிப்படையில் இதுபோன்ற சம்பவங்களின்போது சமரசம் செய்து எச்சரித்து எழுதி வாங்கியோ, நிலைய பிணையிலோ அனுப்பி விடுவது வழக்கம். ஆனால், இந்த சம்பவத்தில் சாதி மோதல் ஏற்படாமல் முற்றுப்புள்ளி வைத்து பிரச்சினையை தீர்க்க வேண்டும் என்பதற்காக போலீசார் கைது நடவடிக்கை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது. பெரியவர்களிடையே சாதி மோதல் ஏற்பட்டு பரபரப்புக்கு பஞ்சமில்லாத ராமநாதபுரம் மாவட்டத்தில் தற்போது பள்ளி மாணவர்கள் இடையே அந்த நிலை ஏற்பட்டுள்ளது கவலை அளிப்பதாக உள்ளது.  இதுகுறித்து உரிய கவுன்சிலிங் நடத்தி ஆரம்ப நிலையிலேயே பெரிதாகாமல் தடுக்க வேண்டும் என்று அனைத்து தரப்பினரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

தலைப்பு செய்திகள்

ஒரே ஒரு வார்த்தை..நண்பனின் மனைவியை தப்பாக பேசிய பிளஸ் - 2 மாணவனுக்கு நேர்ந்த சோகம்
ஒரே ஒரு வார்த்தை..நண்பனின் மனைவியை தப்பாக பேசிய பிளஸ் - 2 மாணவனுக்கு நேர்ந்த சோகம்
அமைச்சர் கலந்துகொள்ளும் நிகழ்வை புறக்கணிக்கும் சொந்த கட்சி எம்.எல்.ஏ., - சிவகங்கையில் அரசியல் சர்ச்சை?
அமைச்சர் கலந்துகொள்ளும் நிகழ்வை புறக்கணிக்கும் சொந்த கட்சி எம்.எல்.ஏ., - சிவகங்கையில் அரசியல் சர்ச்சை?
கிராமங்களுக்கும் ஹை-ஸ்பீட் இன்டர்நெட்! 'TANFINET' தரும் சூப்பர் பிசினஸ் வாய்ப்பு!
கிராமங்களுக்கும் ஹை-ஸ்பீட் இன்டர்நெட்! 'TANFINET' தரும் சூப்பர் பிசினஸ் வாய்ப்பு!
புதுச்சேரியில் பரபரப்பு: தவெக எம்எல்ஏ மீது பாய்ந்தது வழக்கு... என்ன நடந்தது... ?
புதுச்சேரியில் பரபரப்பு: தவெக எம்எல்ஏ மீது பாய்ந்தது வழக்கு... என்ன நடந்தது... ?

வீடியோ

SP Velumani On EPS : இபிஎஸ் எடுத்த தவறான முடிவுகள்? சசிகலா,டிடிவியை சேர்க்கணும்!அதிமுக சீனியர்கள் செக்
Kallakurichi Viral Video : ”என் கண்முன்னே வெட்டுறாங்களே! 10 ஆண்டு உழைப்பு போச்சே” கதறி அழுத தாய்
Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMK: பறிபோகப்போகும் மாவட்டச் செயலாளர் பதவி! முன்னாள் அமைச்சர்களுக்கு இனி MLA சீட்டும் கிடையாதா?
DMK: பறிபோகப்போகும் மாவட்டச் செயலாளர் பதவி! முன்னாள் அமைச்சர்களுக்கு இனி MLA சீட்டும் கிடையாதா?
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
DMK: திமுக பொறுப்புகளுக்கு வயது நிர்ணயம்.. வெளியேற்றப்படும் சீனியர்கள்.. மு.க.ஸ்டாலின் அதிரடி உத்தரவு!
இது தெரியுமா? ஜென் ஆல்ஃபா மாணவர்களின் துணிச்சல் போராட்டம்! வகுப்புகள் புறக்கணிப்பு-ஏன், எதற்கு?
இது தெரியுமா? ஜென் ஆல்ஃபா மாணவர்களின் துணிச்சல் போராட்டம்! வகுப்புகள் புறக்கணிப்பு-ஏன், எதற்கு?
Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
Ilayarajaa: OG IS Back.. வழிய விடு.. குத்துனா இதான் குத்து.. பாட்டை கேட்டு வந்து பேசுங்கப்பா!
Gujiliyamparai Issue: சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையை அனுப்பிய விவகாரம்; குஜிலியம்பாறை முன்னாள் வட்டாட்சியருக்கு நோட்டீஸ்
சர்ச்சைக்குரிய சுற்றறிக்கையை அனுப்பிய விவகாரம்; குஜிலியம்பாறை முன்னாள் வட்டாட்சியருக்கு நோட்டீஸ்
Ather Rizta Record Sales: ஒரே சார்ஜில் 161 கிமீ மைலேஜ்.! சந்தையை கதறவிடும் EV ஸ்கூட்டர்; விற்பனையில் சாதனை படைத்த ஏதர் ரிஸ்டா
ஒரே சார்ஜில் 161 கிமீ மைலேஜ்.! சந்தையை கதறவிடும் EV ஸ்கூட்டர்; விற்பனையில் சாதனை படைத்த ஏதர் ரிஸ்டா
Baleno Facelift Launch: அட்டகாசமான புதிய அம்சங்கள்.! CNG-ல் ஆட்டோமேட்டிக்; சூப்பர் அப்டேட்டுடன் Baleno Facelift லாஞ்ச் தேதி என்ன.?
அட்டகாசமான புதிய அம்சங்கள்.! CNG-ல் ஆட்டோமேட்டிக்; சூப்பர் அப்டேட்டுடன் Baleno Facelift லாஞ்ச் தேதி என்ன.?
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
திமுக மாவட்ட செயலாளர்கள் பதவியை இழக்கும் முக்கிய தலைவர்கள்? - யார் அந்த 13 பேர்? லிஸ்ட் இதோ
Embed widget