தேர்தல் நேரத்தில் தீவிரமாக பரவும் கொரோனா - தடுப்பு பணிகளை மேற்கொள்ள சிறப்பு அதிகாரிகள் நியமனம்.!
பீகார் மாநிலத்தை சேர்ந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் சுதிர்குமார் மற்றும் ரோஹினி

தமிழகத்தில் தற்போது தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் மீண்டும் கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதால் அதனை எதிர்கொண்டு கட்டுப்படுத்த 2 சிறப்பு அதிகாரிகளை தேர்தல் ஆணையம் நியமித்துள்ளது. பீகார் மாநிலத்தை சேர்ந்த சுகாதாரத்துறை அதிகாரிகள் சுதிர்குமார் மற்றும் ரோஹினி ஆகியோர் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை ஒருங்கிணைக்க சிறப்பு அதிகாரிகளாக தமிழகம் வந்துள்ளனர்.
கொரோனா பரவல் காலக்கட்டத்தில் பீகார் தேர்தலை நடத்தி அனுபவம் பெற்றவர்கள் என்பதால் இவர்கள் தமிழகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளனர். இருவரோடும் தமிழக தலைமை தேர்தல் ஆணையர் சத்தியபிரதாசாஹூ ஆலோசனை நடத்திய நிலையில், இருவரின் அறிவுறுத்தலின்பேரில் தமிழக சுகாதாரத்துறையினர் நடவடிக்கைகளை எடுப்பார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




















