"இரட்டை இலைக்கு மேலே தாமரை மலர்ந்தே தீரும்" - நயினார் நாகேந்திரன்
கூட்டணி பற்றி விமர்சனம் செய்தால் வேறு மாதிரி போய்விடும். நம் கூட்டணி இறுதியான உறுதியான கூட்டணி என்பதை மறந்து விடக் கூடாது - பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன்

பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவராக பொறுப்பேற்ற பின்பு முதன்முறையாக சேலம் வந்த நயினார் ராஜேந்திரனுக்கு சேலம் பெருங்கோட்டம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
தொடர்ந்து மேடையில் பேசிய பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், கொங்குநாடான சேலம் பகுதியில் சந்திப்பது மகிழ்ச்சியளிக்கிறது. வாய்ப்பளித்த அகில இந்திய தலைமை, பிரதமர், உள்துறை அமைச்சர் அனைவருக்கும் நன்றியைத் தெரிவித்து கொள்கிறேன். தமிழகம் முழுவதும் "என் மண் என் மக்கள்" யாத்திரை மூலம் அனைவரையும் சந்தித்து எழுச்சியை ஏற்படுத்திய அண்ணாமலைக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
2026-ல் பாரதிய ஜனதா கட்சி, அதிமுக மற்றும் தோழமைக் கட்சிகளோடு இணைந்து வெற்றி பெறும் எழுச்சி தெரிகிறது. அகில இந்திய தலைமையின் முடிவுக்கு கட்டுப்பாடோடு இருக்க வேண்டும். தேர்தலில் கடுமையாக உழைக்க வேண்டும். சமூக வலைதளங்களில் ஒரு மீம்ஸ் போட்டால், உடனே இன்னொரு மீம்ஸ் வந்து விடுகிறது. அகில இந்திய தலைமை சொன்னபடி, சமூக வலைதளங்களில் முழுமையாக செயல்பட வேண்டும். தவறான மீம்ஸ் போட்டால் திமுக கட்டுப்பாட்டில் இருக்கும் காவல்துறை கைது செய்து விடுகிறது. சமூக வலைதளங்களில் இயங்கும் அனைவரும் எச்சரிக்கையோடு செயல்பட வேண்டும் என்று கூறினார்.
வேல் கொடுத்துள்ளார். தனியாக கொடுத்தால் பங்கு போட்டால் காலேஜ்-ல் எடுத்த போட்டோ இன்னும் பயன்படுத்தி வருகிறார். வேல் யாத்திரை மூலம் அமைச்சர் முருகன் தமிழகம் முழுவதும் எழுச்சியை ஏற்படுத்தினார். சிபி ராதாகிருஷ்ணன் ரத யாத்திரை மூலம் கட்சியை வளர்த்தார். இந்த பொறுப்பை நம்பி கொடுத்துள்ளனர். தேர்தலில் எப்படி நடக்க வேண்டும். கூட்டணி பற்றி விமர்சனம் செய்தால் வேறு மாதிரி போய்விடும். நம் கூட்டணி இறுதியான உறுதியான கூட்டணி என்பதை மறந்து விடக் கூடாது. இரட்டை இலைக்கு மேலே தாமரை மலர்ந்தே தீரும். எசந்தர்ப்பவாத கூட்டணி திமுக தலைமையில் அமைந்துள்ளது. எங்களது நியாயமான, நேர்மையான ஊழலற்ற கூட்டணி என்பதை சொல்லிக் கொள்கிறோம். தேசிய ஜனநாயக ஆட்சி வருவதற்கு தயாராக இருக்க வேண்டும். பல தியாகங்களால்தான் பாரதிய ஜனதாக் கட்சி வளர்ந்துள்ளது. அந்த தியாகத்திற்கு பெருமை சேர்க்க அனைத்து நிர்வாகிகளும் ஒன்றுபட்டு செயல்பட்டு பூத் அளவில் பணியைத் தொடங்க வேண்டும். பூத் செம்மைபடுத்தினால் நிச்சயம் வெற்றி பெற முடியும். எத்தனை தொகுதிகள் எந்த இடம் என்பதை அமித்ஷா, இபிஎஸ் தான் முடிவு செய்வார்கள். என்னுடைய அதிகாரம் என்பது தொண்டர்களை பாதுகாப்பது என்பதுதான். கட்சியை வளர்க்க வேண்டும் என்பது தான் என்னுடைய நிலை. எனக்கு மேலே இருக்கிற தலைமை எடுக்கும் முடிவை ஏற்பதுதான் கட்சி நிர்வாகிகளின் கடமை என்பதை உணர்ந்து செயல்பட வேண்டும் என்றார்.
தமிழக அரசுக்கு அதிக அதிகாரம் வேண்டும், அதிக நிதி வேண்டும் என்பதில் எங்களுக்கு தயக்கம் கிடையாது. மற்ற மாநிலங்களை விட அதிக நிதி வேண்டும் என்பதில் எங்களுக்கு மாறுபட்ட கருத்து கிடையாது. பொதுமக்களின் எதிர்ப்பை திசை திருப்ப வேண்டும் என்றே தீர்மானங்கள் போடப்படுகிறது. நீட் தேர்வை யாராலும் ரத்து செய்ய முடியாது. ஆனால் அதற்கு தீர்மானம் போடுகிறார்கள். கச்சத்தீவு மீண்டும் வராது. பிரதமர் நினைத்தால் மட்டுமே நமக்கு கிடைக்கும். ஆனால் அதற்கு தீர்மானம் போடுகிறார்கள். தீர்மானங்களை மட்டுமே போட்டால் போதுமா. மத்திய அரசோடு கலந்து பேசி நல்ல உறவு வைத்திருந்தால் மட்டுமே ஆட்சி நன்றாக இருக்கும். 18 ஆண்டுகள் மத்திய அமைச்சரவையில் இருந்தபோது பேசாமல் இப்போது மாநில சுயாட்சி பற்றி திமுக பேசி வருகிறது. இதற்கு எல்லாம் பதிலளிக்காமல் மக்களின் மனதை மடைமாற்றவே இதுபோன்ற தீர்மானங்கள் போடப்படுகின்றன. ஆனால் மக்களின் மனநிலையில் மாற்றம் ஏற்பட்டு விட்டது. ஆட்சி மாற்றம் ஏற்படுவது நிச்சயம் உறுதி என்பதை தெரிவித்துக் கொள்கிறேன். சிறு கருத்து வேறுபாடுகளை மறந்து அனைவரும் ஒற்றுமையாக செயல்பட வேண்டும் என்று தெரிவித்தார்.
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

