மேலும் அறிய
Advertisement
பாலக்கோடு அருகே கடந்த 3 ஆண்டுகளாக நிறுத்தப்பட்ட அரசு பேருந்து மீண்டும் இயக்கம்
பாலக்கோடு அருகே கடந்த மூன்று ஆண்டுகளாக நிறுத்தப்பட்ட அரசு பேருந்து மீண்டும் இயக்கப்பட்டதால், பொது மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் அடுத்த பெரியாம்பட்டி பகுதியில் இருந்தது தும்பலஹள்ளி புலிக்கல்-பேதாரள்ளி வழித்தடத்தில் அரசு நகர பேருந்து இயங்கி வந்த நிலையில் கடந்த சில ஆண்டுகளாக அப்ப பேருந்து நிறுத்தப்பட்டது. அப்பேருந்து நிறுத்தப்பட்டதின் காரணமாக அப்பகுதி பெண்கள் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ மாணவிகள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகினர்.
இதனையடுத்து இயங்காமல் இருந்த பேருந்தை மீண்டும் இயக்க வேண்டும் என கடந்த வாரம் தருமபுரி மாவட்டத்திற்கு பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்க வருகை புரிந்த தமிழக வேளாண் மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திடம் , பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
அதனை அடுத்து கிராம மக்கள் அளித்த மனுவை பரிசீலித்த அமைச்சர் அந்த வழித்தடத்தில் புதிய பேருந்து இயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தினார். இதனை அடுத்து பெரியாம்பட்டியில் இருந்து பாலக்கோடு செல்லும் வழித்தடத்தில் அரசு பேருந்து இயக்கம் தொடங்கப்பட்டது. பெரியாம்பட்டியில் இருந்து வந்த பேருந்தை புலிக்கல் கிராமத்தில் பொதுமக்கள் உற்சாக வரவேற்றனர். மேலும் அப்பேருந்தில் வந்த பொதுமக்கள் மற்றும் மாணவ மாணவிகளுக்கு திமுக மேற்கு மாவட்ட செயலாளர் பி.பழனியப்பன் இனிப்புகளை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் மாவட்டத் துணைச் செயலாளர் வழக்கறிஞர் ஆ.மணி, ஒன்றிய செயலாளர் வழக்கறிஞர் கோபால், தலைமை செயற்குழு உறுப்பினர் மனோகரன், மத்திய ஒன்றிய செயலாளர் கிருஷ்ணன், ஒன்றிய தலைவர் செந்தில்குமார் மற்றும் திமுக நிர்வாகிகள் பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.
தங்களது நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று மனு அளித்த 24 மணி நேரத்தில் தீர்வு கண்டு உடனடியாக தங்கள் பகுதிக்கு அரசு பேருந்து இயக்கச் செய்த தமிழக முதல்வருக்கும், வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்திற் கும்அப்பகுதி கிராம மக்கள் தங்களது நன்றியையும் மகிழ்ச்சியையும் தெரிவித்துக் கொண்டனர்.
தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த பணியில் உள்ள காவலர்களுக்கு, வனப் பகுதியில் துப்பாக்கி சுடுதல் நினைவூட்டல் பயிற்சி.
தருமபுரி மாவட்டத்தில் உள்ள தருமபுரி, பென்னாகரம், பாலக்கோடு, அரூர் காவல் உட்கோட்டங்களில் உள்ள பகுதிகளில் காவல் துறையில் பணியாற்றும் காவல் துணை கண்காணிப்பாளர், காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள், சிறப்பு உதவி ஆய்வாளர்கள், தலைமைக் காவலர்கள், காவலர்கள் 1,400 பேர் காவல் துறையில் பணியாற்றி வருகின்றனர். தொடர்ந்து தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த காவலர்கள் வெவ்வேறு மாவட்டங்களில் பணி யாற்றி வருகின்றனர்.
ஆனால் எந்த மாவட்டங்களில் பணியாற்றினாலும் ஆண்டுக்கு ஒரு முறை தங்களது சொந்த மாவட்டங்களில் துப்பாக்கி சுடும் பயிற்சியில் நினைவூட்டல் பயிற்சியை முடிக்க வேண்டும். இந்நிலையில் தருமபுரி மாவட்டத்தில் காவல் துறையில் பணியாற்றும் காவலர்களுக்கான துப்பாக்கி சூடும் நினைவூட்டல் பயிற்சி கடந்த ஆகஸ்ட் 31ம் தேதி தொடங்கியது. தொடர்ந்து இந்த பயிற்சியானது வருகிற செப்டம்பர் 21-ஆம் தேதி வரை நடைபெறுகிறது. இதில் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த, வெளி மாவட்டங்களில் பணியாற்றும் காவலர்கள் பங்குபெற்று தங்களது நினைவூட்டல் பயிற்சியை முடித்துக் கொள்ள வேண்டும் என காவல்துறை சார்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் தருமபுரி மாவட்டம் ஒடசல்பட்டி கூட்ரோடு அருகே உள்ள வனத் பகுதியில் காவல் துறையினர் துப்பாக்கிச் சுடும் நினைவூட்டல் பயிற்சி ஆயுதப்படை காவல் துணை கண்காணிப்பாளர் பாஸ்கரன் மேற்பார்வையில் நடைபெற்ற வருகிறது. இதில் தினந்தோறும் 100 முதல் 150 வரை யிலான காவலர்களுக்கு காவல் உதவி ஆய்வாளர் சின்னசாமி துப்பாக்கிச் சுடும் நினைவூட்டல் பயிற்சியை வழங்கி வருகிறார். இந்த நினைவூட்டல் பயிற்சியில் துப்பாக்கியை பிடிக்கின்ற விதம், சுடுவதற்கு தயாராவது, எவ்வாறு துப்பாக்கியை கையாள வேண்டும் என்பது குறித்த பயிற்சியை உதவி ஆய்வாளர் சின்னசாமி வழங்கி வருகிறார்.
அதே போல் எந்த வகையான துப்பாக்கிகள் பயன்படுத்தப்படுகிறது உள்ளிட்ட விவரங்களும் காவலர்களுக்கு நினைவூட்டல் செய்யப்பட்டு வருகிறது. ஒவ்வொரு காவலர்களுக்கும் 3 சுற்றுகள் என 15 குண்டுகள் வழங்கப்பட்டு வருகிறது. இதில் காவல் உதவி ஆய்வாளர் உள்ளிட்ட உயர் அதிகாரிகளுக்கு 9 mm பிஸ்டல் வழங்கப்படுகிறது. தொடர்ந்து காவலர்களுக்கு 303, 7.62 mm போர்டு ஆக்சன், இன்சாஸ் என காவலர்களுக்கு மூன்று ரக துப்பாக்கி சுடும் பயிற்சி வழங்கப்படுகிறது. மேலும் 15 குண்டுகளில் எத்தனை குண்டுகள் இலக்கினை வெற்றிகரமாக அடைகின்றனர் என்பது குறித்தும், துப்பாக்கி சுடும் அவர்களே தங்களது இலக்கு குறித்து கணக்கிடப்பட்டு வருகிறது. இதில் தருமபுரி மாவட்டத்தைச் சேர்ந்த காவலர்கள் கலந்து கொண்டு தங்களது திறமைகளை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த நினைவூட்டல் பயிற்சியில் முடியில், சிறப்பாக துப்பாக்கி சுடுதல் பயிற்சி(குட் சூட்டர்) செய்த காவலர்களுக்கு மாவட்ட கண்காணிப்பாளர் பாராட்டி வாழ்த்தி தெரிவிப்பது குறிப்பிடத்தக்கது.
சமீபத்திய செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் செய்திகளைத் (Tamil News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
இந்தியா
சென்னை
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion