வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி தொடக்கம்

தமிழகத்தில் நாளை நடைபெற உள்ள வாக்குப்பதிவிற்காக, வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி இன்று காலை முதல் தொடங்கியது.

தமிழகம் முழுவதும் 234 தொகுதிகளுக்கான சட்டசபை தேர்தல் மற்றும் கன்னியாகுமரி மக்களவை இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ளது. முன்னாள் முதல்வர்கள் கருணாநிதி மற்றும் ஜெயலலிதா ஆகிய இருவரும் மறைந்துவிட்டதால், தமிழக சட்டசபை தேர்தல் மீது தேசிய அளவில் மிகுந்த எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. இந்தத் தேர்தலில், அ.தி.மு.க., தி.மு.க. ஆகிய பிரதான கட்சிகளுடன், சீமானின் நாம் தமிழர், கமல்ஹாசனின் மக்கள் நீதிமய்யம், தினகரனின் அ.ம.மு.க. ஆகிய கட்சிகளும் போட்டியிடுகின்றன.வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி தொடக்கம்

வாக்குப்பதிவு நாளை நடைபெற உள்ள நிலையில், தேர்தல் பரப்புரை நேற்றுடன் நிறைவு பெற்றது. தமிழகம் முழுவதும் 88,936 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த வாக்குச்சாவடிகளுக்கு மின்னணு வாக்கு இயந்திரங்கள் அனுப்பும் பணிகள் இன்று காலை முதல் தொடங்கியது. உரிய போலீஸ் மற்றும் துணை ராணுவ பாதுகாப்புடன் அதிகாரிகளின் மேற்பார்வையில் வாக்கு இயந்திரங்கள், அந்தந்த வாக்குச்சாவடி மையங்களுக்கு அனுப்பப்பட்டு வருகிறது. தமிழகம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள வாக்குச்சாவடி மையங்களின் பாதுகாப்பிற்காக, 1.58 லட்சம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.  

Tags: BJP dmk 2021 admk Tamilnadu Congress Election ammk mnm voting vote machine nt

தொடர்புடைய செய்திகள்

புதுச்சேரி: அமைச்சரவை அமைவதில் இழுபறி; பணிகள் ஸ்தம்பிப்பு!

புதுச்சேரி: அமைச்சரவை அமைவதில் இழுபறி; பணிகள் ஸ்தம்பிப்பு!

Tamil Nadu Politics: : 'அதிமுகவை கபளீகரம் செய்ய பாஜக முயற்சி’ கே.சி.பழனிசாமி பரபரப்பு புகார்..!

Tamil Nadu Politics: : 'அதிமுகவை கபளீகரம் செய்ய பாஜக முயற்சி’ கே.சி.பழனிசாமி பரபரப்பு புகார்..!

Tasmac shop : 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைதிறக்க தமிழக அரசு அனுமதி!

Tasmac shop : 27 மாவட்டங்களில் டாஸ்மாக் கடைதிறக்க தமிழக அரசு அனுமதி!

Nayinar Nagendran on ADMK : ’அசைன்மெண்ட் அதிமுக’ நயினாரிடம் அளிக்கப்பட்டுள்ள நச் பிளான்..!

Nayinar Nagendran on ADMK : ’அசைன்மெண்ட் அதிமுக’ நயினாரிடம் அளிக்கப்பட்டுள்ள நச் பிளான்..!

petrol and diesel price hike: பெட்ரோல், டீசல் வரி குறைப்பு எப்போது? தமிழக அரசுக்கு கே.எஸ்.அழகிரி பதில்

petrol and diesel price hike: பெட்ரோல், டீசல் வரி குறைப்பு எப்போது? தமிழக அரசுக்கு கே.எஸ்.அழகிரி பதில்

டாப் நியூஸ்

Tamil Nadu Coronavirus LIVE News : கருப்பு பூஞ்சை நோய் மருந்துக்கான ஜி.எஸ்.டி. வரி ரத்து - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

Tamil Nadu Coronavirus LIVE News : கருப்பு பூஞ்சை நோய் மருந்துக்கான ஜி.எஸ்.டி. வரி ரத்து - மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

Gold Silver Price Today: குமுதா ஹேப்பி அண்ணாச்சி... தங்கம் விலை குறைந்தது!

Gold Silver Price Today: குமுதா ஹேப்பி அண்ணாச்சி... தங்கம் விலை குறைந்தது!

ஒரிஜினல் ‛சிங்கம் -2 டேனி’ தூத்துக்குடியில் கைது; படத்தில் போன்று நிஜத்திலும் நடந்த சேஸிங்!

ஒரிஜினல் ‛சிங்கம் -2 டேனி’ தூத்துக்குடியில் கைது; படத்தில் போன்று நிஜத்திலும் நடந்த சேஸிங்!

தமிழ் சினிமாவில் பார்வதியை ஒப்பந்தம் செய்ய எதிர்ப்பு; வைரமுத்து விவகாரம் காரணமா?

தமிழ் சினிமாவில் பார்வதியை ஒப்பந்தம் செய்ய எதிர்ப்பு; வைரமுத்து விவகாரம் காரணமா?