மேலும் அறிய

Upcoming Scooters: TVS முதல் Suzuki வரை.. போட்டி போட்டு வரப்போகும் ஸ்கூட்டர்கள் - எப்போ?

Upcoming Scooters: இந்தியாவில் விரைவில் அறிமுகமாக உள்ள ஸ்கூட்டர்களின் பட்டியலை கீழே காணலாம்.

இந்தியாவைப் பொறுத்தமட்டில் இன்றைய சூழலில் இரு சக்கர வாகனமே இல்லாத வீடே இல்லை என்ற நிலை உருவாகியுள்ளது. ஹீரோ, யமஹா, டிவிஎஸ், பஜாஜ் என இந்தியாவின் முன்னணி இரு சக்கர வாகனங்கள் விதவிதமாக தங்களது படைப்புகளை தயாரித்து வருகின்றனர். சமீபகாலமாக, மின்சார ஸ்கூட்டர்களையும் தயாரித்து வருகின்றனர். 

அந்த வகையில்,  இந்தியாவில் இந்தாண்டு அறிமுகமாக உள்ள புதிய ஸ்கூட்டர்களின் பட்டியலை கீழே காணலாம்.

1.Yamaha Nmax 155

யமஹா நிறுவனத்தின் தயாரிப்புகளுக்கு என்று இந்திய சந்தையில் தனி வரவேற்பு உள்ளது. இவர்கள் நடப்பாண்டில் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ள ஸ்கூட்டர் Yamaha Nmax 155. இந்த ஸ்கூட்டர் வரும் மார்ச் மாதம் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை ரூபாய் 1 லட்சத்து 60 ஆயிரம் முதல் ரூபாய் 1 லட்சத்து 70 ஆயிரம் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 

2. Ather EL Scooter:

இந்தியாவின் முன்னணி இ ஸ்கூட்டர் நிறுவனமாக திகழ்வது Ather. வாடிக்கையாளர்களை கவர விதவிதமான இ ஸ்கூட்டர்களை தயாரிப்பதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். அந்த வகையில் ஏதர் நிறுவனத்தின் புதிய தயாரிப்பாக வர உள்ளது Ather EL Scooter. இந்த இ ஸ்கூட்டர் வரும் ஏப்ரல் மாதம் சந்தையில் அறிமுகமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் விலை ரூபாய் 90 ஆயிரம் முதல் ரூபாய் 1 லட்சம் வரை இருக்கும் என்று கருதப்படுகிறது.

3. Simple Energy Ultra:

இந்தியாவில் வளர்ந்து வரும் இ ஸ்கூட்டர் நிறுவனம் Simple Energy. ஒரே சார்ஜில் 400 கிலோமீட்டர் வரை மைலேஜ் தரும் வகையில் இவர்கள் தயாரித்து வரும் இ ஸ்கூட்டர் Simple Energy Ultra. இந்த இ ஸ்கூட்டர் 2 லட்சம் முதல் ரூபாய் 2 லட்சத்து 10 ஆயிரம் வரை இருக்கும் என்று கருதப்படுகிறது. வரும் ஜுன் மாதம் இந்த இ ஸ்கூட்டர் அறிமுகமாகும் என்று கருதப்படுகிறது. 

4. TVS Jupiter Electric:

டிவிஎஸ் நிறுவனம் இந்திய சாலைகளில் அதிகளவு இயங்கும் வாகனத்தை தயாரித்த நிறுவனம். இவர்களின் புதிய படைப்பு TVS Jupiter Electric. மின்சார ஸ்கூட்டரான இந்த TVS Jupiter Electric வரும் ஆகஸ்ட் மாதம் அறிமுகமாகும் என்று கருதப்படுகிறது. இந்த இ ஸ்கூட்டரின் விலை ரூபாய் 1 லட்சத்து 10 ஆயிரம் முதல் ரூபாய் 1 லட்சத்து 30 ஆயிரம் வரை இருக்கும் என்று கருதப்படுகிறது. 

5. Honda Activa 7G:

ஹோண்டா நிறுவனத்தின் வெற்றிகரமான ஸ்கூட்டர் Honda Activa. இதன் 6ஜி வரை தற்போது அறிமுகமாகியுள்ள நிலையில், இதன் அப்டேட் வெர்சனான Honda Activa 7G ஸ்கூட்டர் நடப்பாண்டில் அறிமுகமாக உள்ளது. இதன் விலை ரூபாய் 80 ஆயிரம் முதல் ரூபாய் 90 ஆயிரம் வரை இருக்கும் என்று கருதப்படுகிறது.

6. TVS Jupiter CNG:

டிவிஎஸ் நிறுவனத்தின் வெற்றிகரமான படைப்பு இந்த TVS Jupiter. பெட்ரோலில் மட்டுமே ஓடும் வகையில் தற்போது விற்பனையில் உள்ள TVS Jupiter ஸ்கூட்டரை, சிஎன்ஜி-யிலும் இயங்கும் வகையில் தயாரிக்க உள்ளனர். இதன் விலை ரூபாய் 90 ஆயிரம் முதல் ரூபாய் 1 லட்சம் வரை இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த ஸ்கூட்டர் இந்தாண்டு இறுதியில் டிசம்பர் மாதம் அறிமுகமாகும் என்று கருதப்படுகிறது.

7.Suzuki Burgman Street Electric:

சுசுகி நிறுவனத்தின் இரு சக்கர வாகனங்களுக்கு இந்திய சந்தையில் தனி வரவேற்பு உள்ளது. அவர்களின் வெற்றிகரமான ஸ்கூட்டர் Suzuki Burgman. இதன் மின்சார வெர்சனாக Suzuki Burgman Street Electric ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த உள்ளனர். இதன் விலை ரூபாய் 1 லட்சத்து 5 ஆயிரம் முதல் ரூபாய் 1 லட்சத்து 20 ஆயிரம் வரை இருக்கும் என்று கருதப்படுகிறது. 

8. Vinfast Vero X:

பிரபலமான வாகன தயாரிப்பு நிறுவனமான Vinfast. இவர்கள் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்த உள்ள புதிய ஸ்கூட்டர் Vinfast Vero X. இதன் விலை ரூபாய் 1 லட்சம் முதல் ரூபாய் 1 லட்சத்து 56 ஆயிரம் வரை இருக்கும் என்று கருதப்படுகிறது. இந்த ஸ்கூட்டர் வரும் டிசம்பர் மாதம் சந்தைக்கு வரும் என்று கருதப்படுகிறது.  

தலைப்பு செய்திகள்

Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Hero First Electric Bike: இப்போ வாங்கடா போட்டிக்கு.! தாறுமாறான EV பைக்கை களமிறக்கும் ஹீரோ மோட்டோகார்ப்; அறிமுகம் எப்போ.?
இப்போ வாங்கடா போட்டிக்கு.! தாறுமாறான EV பைக்கை களமிறக்கும் ஹீரோ மோட்டோகார்ப்; அறிமுகம் எப்போ.?
Maruti Fronx on Discount: செம ஸ்டைலான ஃபிராங்க்ஸ் கார வாங்குற பிளான் இருந்தா உடனே கிளம்புங்க.! அட்டகாச ஆஃபரை அறிவித்த மாருதி
செம ஸ்டைலான ஃபிராங்க்ஸ் கார வாங்குற பிளான் இருந்தா உடனே கிளம்புங்க.! அட்டகாச ஆஃபரை அறிவித்த மாருதி
Alto K10 Price: நடுத்தர மக்களின் செல்லப்பிள்ளை.! லிட்டருக்கு 33 கிமீ மைலேஜ்.! ஆல்டோ K10-ன் விலை இவ்வளவு தானா.?!
நடுத்தர மக்களின் செல்லப்பிள்ளை.! லிட்டருக்கு 33 கிமீ மைலேஜ்.! ஆல்டோ K10-ன் விலை இவ்வளவு தானா.?!

வீடியோ

Vijay Sangeetha Divorce : விவாகரத்து வழக்கு வாபஸ்! சங்கீதா கொடுத்த திடீர் டிவிஸ்ட் காரணம் என்ன?
CM Vijay New Order ; ஆளுநருக்கு பவர் இல்லை அதிகாரத்தை கையிலெடுத்த விஜய் கலக்கத்தில் அதிகாரிகள்
PR Sundar Arrest : செய்தியாளருக்கு பாலியல் தொல்லை? தலைமறைவான P.R. சுந்தர்.. தட்டித்தூக்கிய போலீஸ்
தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
SP Velumani: திமுக-வுடன் போகச் சொன்னவர்கள் மீது நடவடிக்கை எடுப்பது யார்? எஸ்பி வேலுமணி கேள்வி
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
இந்த மழைக்கே இப்படியா? மழைக்காலத்தில் சென்னை காப்பாற்றுவாரா முதலமைச்சர் விஜய்?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Upcoming Kia cars: ஹைப்ரிட் மாடல் கார்களை இறக்கப்போகும் Kia ! எந்தெந்த கார் தெரியுமா?
Mojtaba Khamenei Video: ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
ஈரான் தலைவர் மொஜ்தபா எங்கே, எப்படி இருக்கிறார்.? உடல்நிலை குறித்த யூகங்களுக்கிடையே வெளியான வீடியோ
Trump Vs Netanyahu: ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
ஓ.. உனக்கு அவ்ளோ தில்லா.? ட்ரம்ப்பின் அமைதித் திட்டத்தை நிராகரித்த நெதன்யாகு.! என்ன நடக்கும்.?
"என்னைப் பத்தி கிசுகிசு வந்துடும்னு பயம்.." மனம் திறந்த ஜமீன்கோட்டை ஹீரோயின்! ஞாபகம் இருக்கா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
Devdutt Padikkal: ஒன் டவுன் வீரராக களமிறங்கும் படிக்கல்? தடைக்கல்லை உடைத்து வரலாறு படைப்பாரா?
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
தமிழக வானிலை அப்டேட்: சென்னையில் அடுத்த 2 நாட்களுக்கு இடி மின்னலுடன் கூடிய மழை எச்சரிக்கை
Embed widget