அதிமுக என்பது பாஜகவின் பி-டீம் அல்ல... அது பாஜகவாகவே மாறிவிட்டது! - பொன்முடி கடும் விமர்சனம்
அதிமுக கிடையாது, பிஜேபியினுடைய அது இரண்டாவது அணி. அணி கிடையாது, பிஜேபியே மாறிட்டாங்க - பொன்முடி விமர்சனம்

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திருவள்ளுவர் மாவட்டம் பொன்னேரி வட்டம் பாடியநல்லூரில் இருந்து காணொளி காட்சி வாயிலாக தமிழ்நாடு அரசின் "உங்க கனவ சொல்லுங்க" திட்டத்தை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சி விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரியில் நடைபெற்ற கூட்டரங்கில் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்பட்டது. நிகழ்வில் திமுக துணை பொதுச்செயலாளர், திருக்கோவிலூர் சட்டமன்ற உறுப்பினர் பொன்முடி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான், முன்னாள் அமைச்சர் செஞ்சி கே.எஸ். மஸ்தான், விழுப்புரம் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமணன், விக்கிரவாண்டி சட்டமன்ற உறுப்பினர் அன்னியூர் சிவா, மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவகுமார் உள்ளிட்ட அரசியல் மற்றும் அரசு பிரதிநிதிகள் கலந்துகொண்டனர்.
கணக்கெடுப்பு பணியை மேற்கொள்ள உள்ள தன்னார்வலர்களுக்கு தேவையான கணக்கெடுப்பு தேவையான உபகரணங்களை மாவட்ட ஆட்சியர் ஷேக் அப்துல் ரகுமான் முன்னாள் அமைச்சர் பொன்முடி பொன்முடி உள்ளிட்ட எம்எல்ஏக்கள் வழங்கினர். இந்த நிகழ்வில் 500-க்கும் மேற்பட்ட மகளிர் இதில் பங்கேற்று பயனடைந்தனர்.
முன்னாள் அமைச்சர் அமைச்சர் பொன்முடி பேசுகையில்., மக்களின் கனவுகளை நனவாக்கும் அரசுபொதுமக்களின் முன்னேற்றத்திற்காகத் தமிழக முதல்வர் பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறார். குறிப்பாக, ஒவ்வொரு குடும்பத்திலும் பிள்ளைகள் கல்வி கற்க வேண்டும், முன்னேற வேண்டும் என்ற சாமானிய மக்களின் கனவுகளைக் கடந்த 4 ஆண்டுகளில் தமிழக முதல்வர் நிறைவேற்றியுள்ளார். பெண்களின் பொருளாதாரச் சுதந்திரத்தைப் பேணும் வகையில் விடியல் பயணம் மற்றும் மாதம் 1,000 ரூபாய் கலைஞர் மகளிர் உரிமைத் தொகை ஆகிய திட்டங்கள் சிறப்பாகச் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மாணவிகளுக்காக புதுமைப் பெண் திட்டம், மாணவர்களுக்காக தமிழ்ப் புதல்வன் திட்டம் இதன் மூலம் மாதம் 1,000 ரூபாய் கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படுவதைச் சுட்டிக்காட்டி, "நாங்கள் படிக்கும் காலத்தில் இது போன்ற வசதிகள் கிடைக்கவில்லையே என்று ஏங்கியிருக்கிறோம், ஆனால் இன்று உங்கள் பிள்ளைகளுக்கு அது சாத்தியமாகியுள்ளது" என்றும்பொங்கல் பரிசு மற்றும் வாழ்த்துகள்தமிழர் திருநாளாம் தைப்பொங்கலை மக்கள் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், தமிழக முதல்வர் வழங்கியுள்ள 3,000 ரூபாய் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கியுள்ளார், மக்களின் இன்னும் பல கனவுகளை நிறைவேற்றத் தமிழக முதல்வர் உறுதியுடன் இருப்பதாகவும் தெரிவித்த அவர் அனைவருக்கும் பொங்கல் நல்வாழ்த்துகளை தெரிவித்தார்.
தொடந்து செய்தியாளர்களை சந்தித்த அவர்.,
அதிமுக எடுக்கக்கூடிய அனைத்து முடிவுகளுக்கும் டெல்லி (பிஜேபி) தலைமை தான் முடிவு எடுப்பதாக குற்றச்சாட்டு குறித்த கேள்விக்கு? அதான் நல்லாத் தெரியுதே! அவங்க என்ன சொல்றாங்களோ அதற்கெல்லாம் தலையாட்டுறதுதான் இப்போ இருக்கிற அதிமுகவினுடைய வேலை. அவங்க என்ன சொல்றாங்கங்கிறதைக் கேட்டுட்டுதான் அவங்க செய்யுறாங்க. அதிமுக கிடையாது, பிஜேபியினுடைய அது இரண்டாவது அணி. அணி கிடையாது, பிஜேபியே மாறிட்டாங்க. ஏன்னா, அவருக்கு இருக்கிற பல்வேறு நெருக்கடிகள், அதையெல்லாம் எப்படியாவது சமாளிக்கணும்ங்கிறதாலதான் அவர் டெல்லிக்குப் போய் அங்க பார்த்து இங்க பார்த்து எல்லா விதமான நடவடிக்கைகளையும் மேற்கொண்டிருக்கிறார்.மக்கள் அதுக்கு தமிழக மக்கள் விழிப்போடு இருக்கிறார்கள்.
நிச்சயமாக அவர்கள் எது நினைத்தாலும் அது நடக்காது என்பதை நாம் நன்றாக அறிவோம். தமிழக முதல்வர் தளபதி அவர்கள் இந்த நான்கரை ஆண்டுகளில் செய்திருக்கிற சாதனைகள் எல்லாம் நம்முடைய மக்கள் மனதிலே வேரூன்றி இருக்கிறது.அதனோடோடுதான் இன்று நம்முடைய இந்தக் கனவுத் திட்டத்தையும் முதலமைச்சர் அவர்கள் துணைக்கு வைத்திருக்கிறார்கள். ஆகவே அவங்க கனவெல்லாம் நிறைவேறாது. அவங்க எப்படியாவது ஆட்சிக்கு வந்துடணும்னு கனவு கண்டுக்கிட்டு இருக்காங்க அது வேற.ஆனால் நாம் செய்கிற திட்டங்களைத் தொடர்ந்து நாம் சொல்லிக் கொண்டிருப்பதுதான் நம்முடைய(திமுக)கனவுத் திட்டம். நம்முடைய கனவுதான் பலிக்கும். அவங்க கனவெல்லாம் எப்போதும் எந்தக் காலத்திலும் தமிழகத்தைப் பொறுத்த வரையில் நம்முடைய பெரியார், அண்ணா, கலைஞர் சொன்ன வழியில் திராவிட மாடல் ஆட்சி நடத்துகிற தளபதியினுடைய நினைவுகள்தான் மலரும், அவருடைய கனவுகள்தான் நிலைத்து நிற்கும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.





















