‛பாஜகவுக்கு உத்தவ் தாக்கரே செய்தது துரோகம்… இந்துத்துவத்தை சமரசம் செய்தார்…’ - அமித்ஷா சாடல்
சிவசேனா கட்சியினரை தோற்கடிப்போம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. கோவிட் தொற்றுநோய்களின் போது மக்கள் இந்த அரசாங்கத்தை பார்க்கக்கூட இல்லை. மக்கள் இந்த அரசாங்கத்தால் சலிப்படைந்துள்ளனர்
மகாராஷ்டிரா முதல்வர் உத்தவ் தாக்கரே மீது கடுமையாக சாடியுள்ளார் மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா, சிவசேனா தலைவர் இந்துத்துவா சித்தாந்தத்தை "சமரசம்" செய்தது மட்டுமல்லாமல், முதல்வர் பதவிக்காக பாஜகவை "துரோகம் செய்தார்" என்று கூறியுள்ளார். புனேயில் பேசிய அமித்ஷா, "2019 மகாராஷ்டிரா சட்டமன்றத் தேர்தல்கள் தேவேந்திர ஃபட்னாவிஸ் தலைமையில் நடக்கும் என்பது "தெளிவானது" என்றும் அவர் மட்டுமே முதல்வர் முகம் என்றும் தாக்கரே கூறிவந்தார். மகாராஷ்டிராவில் அடுத்த அரசாங்கத்தை பாஜக-சிவசேனா கூட்டணி நடத்தும் என்றும், தேவேந்திர ஃபட்னாவிஸ் முதல்வராக இருப்பார் என்றும் நாங்கள் பல பேரணிகளில் விவாதித்தோம். அப்போதெல்லாம், சிவசேனாவைச் சேர்ந்த யாரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. உத்தவ், முதல்வர் பதவிக்காக தனது இந்துத்துவா சித்தாந்தத்தை சமரசம் செய்து கொண்டு, கடந்த காலத்தில் அவரே விமர்சித்த காங்கிரஸ் மற்றும் என்சிபியுடன் இணைந்து ஆட்சியை அமைத்துள்ளார்” என்று அமித்ஷா குற்றம் சாட்டியுள்ளார்.
ஷா, அடுத்த ஆண்டு திட்டமிடப்பட்டுள்ள புனே நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை தொடக்கி வைக்கும் போது, மகாராஷ்டிராவில் நடைபெறும் மகா விகாஸ் அகாடி ஆட்சியை "நிக்காமி (பயனற்றது)" என்று குறிப்பிட்டார். கூட்டணியின் பலத்தில் நம்பிக்கை இருந்தால், புதிய சட்டமன்றத் தேர்தலை அறிவிக்குமாறு எம்விஏ அரசாங்கத்திற்கு ஷா சவால் விடுத்தார்.
"சிவசேனா கட்சியினரை தோற்கடிப்போம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது. கோவிட் தொற்றுநோய்களின் போது மக்கள் இந்த அரசாங்கத்தை பார்க்கக்கூட இல்லை. மக்கள் இந்த அரசாங்கத்தால் சலிப்படைந்துள்ளனர், புனே மாநகராட்சித் தேர்தலில் நாங்கள் பெற்ற வெற்றியிலிருந்து மாற்றம் நிகழும், ”என்று அமித்ஷா கூறிய அமித்ஷா புனே தேர்தல் காவி கட்சிக்கு மிகவும் முக்கியமானது என்றும் கூறினார். "தேசத்திற்கு வழிகாட்டும் வரலாற்று நகரம் புனே" என்று அமித்ஷா புகழாரம் சூட்டினார்.
2019 மகாராஷ்டிரா சட்டப் பேரவை தேர்தலில் 61.4% வாக்குப்பதிவுக்குப் நடந்த பிறகு, ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி (NDA) பாரதிய ஜனதா கட்சியின் (BJP) மற்றும் சிவசேனா (SHS) கூட்டணி பெரும்பான்மை இடங்களில் வெற்றி பெற்றது. அரசு அமைப்பதில் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளைத் தொடர்ந்து, அரசியல் நெருக்கடி தூண்டபட்டு, கூட்டணி கலைக்கப்பட்டது. எந்தக் கட்சியும் ஆட்சி அமைக்க முடியாத நிலையில், அமைச்சர்கள் குழு அமைக்கப்படாததால், அம்மாநிலத்தில் குடியரசுத் தலைவர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. 23 நவம்பர் 2019 அன்று, தேவேந்திர ஃபட்னாவிஸ் முதல்வராகவும், அஜித் பவார் துணை முதல்வராகவும் பதவியேற்றனர். இருப்பினும் அவர்கள் இருவரும் 26 நவம்பர் 2019 அன்று நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முன்பு ராஜினாமா செய்தனர், மேலும் 28 நவம்பர் 2019 அன்று, சிவசேனா, என்சிபி மற்றும் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் மகா விகாஸ் அகாடி ( எம்விஏ ) என்ற புதிய கூட்டணியின் கீழ் உத்தவ் தாக்கரே முதலமைச்சராக ஆட்சி அமைத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.