"தப்பா நினைச்சுக்காதீங்க" நலத்திட்ட உதவிகளை நேரில் வழங்காதது ஏன்? விஜய் விளக்கம்!
நேரில் வந்து நிவாரணம் வழங்கவில்லை என்று தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம் என பாதிக்கப்பட்ட மக்களிடம் விஜய் தெரிவித்திருப்பதாகக் கூறப்படுகிறது.
ஃபெஞ்சல் புயல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று நலத்திட்ட உதவிகளை வழங்காமல் தன்னுடைய வீட்டுக்கு வரவழைத்து வழங்கியது குறித்து விமர்சனங்கள் எழுந்தது. இந்த நிலையில், பாதிக்கப்பட்ட மக்களிடமே இதுகுறித்து விஜய் விளக்கம் அளித்துள்ளார்.
"உங்கள் வீடுகளுக்கு வந்து நலத்திட்ட உதவிகளை நான் வழங்கி இருக்கலாம். ஆனால், உங்களுடன் இப்படி அமர்ந்து பேச முடியாது, அங்கு வந்தால் நெரிசல் ஏற்படும். உங்கள் அனைவரிடமும் சிரமம் இல்லாமல் பேச முடியாது. நேரம் செலவிட முடியாது. நேரில் வந்து நிவாரணம் வழங்கவில்லை என்று தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்" என பாதிக்கப்பட்ட மக்களிடம் விஜய் கூறியதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
நேரில் சென்று நலத்திட்ட உதவிகளை வழங்காதது ஏன்?
புதியதாக கட்சி தொடங்கியுள்ள நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் சார்பில் புயலால் பாதிக்கப்பட்ட பொதுமக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். மத்திய சென்னையில் டி.பி. சத்திரம், அமைஞ்சகரை உள்ளிட்ட பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட ஏழை எளிய மக்களுக்கு சுமார் நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார் விஜய்.
சென்னை கிழக்கு கடற்கரை சாலை பனையூரில் உள்ள தமிழக வெற்றிக் கழகத்தின் கட்சி தலைமை அலுவலகத்தில் 500க்கும் மேற்பட்ட நபர்கள் வரவேற்கப்பட்டு அவர்களுக்கு நிவாரண உதவிகளை நடிகர் விஜய் வழங்கினார்.
"நெரிசல் ஏற்படும்"
அவர்களுக்கு அரிசி, புது துணிகள் மற்றும் மளிகை பொருட்களை வழங்கி அவர்களுக்கு ஆதரவு தெரிவித்தார். தொடர்ந்து விஜய் அவர்களுடன் புகைப்படம் எடுத்துக் கொண்டது மட்டுமில்லாமல், குழந்தைகளுடன் கலந்துரையாடி சாக்லேட் உள்ளிட்ட பொருட்களையும் வழங்கி குழந்தைகளை உற்சாகப்படுத்தினார்.
வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நேரில் சென்று நலத்திட்ட உதவிகளை வழங்காமல் தன்னுடைய வீட்டுக்கு வரவழைத்து வழங்கியது குறித்து விஜய் மீது சிலர் விமர்சனங்களை முன்வைத்தனர். இதுகுறித்து பாதிக்கப்பட்ட மக்களிடமே விஜய் விளக்கம் அளித்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
"உங்கள் வீடுகளுக்கு வந்து நலத்திட்ட உதவிகளை நான் வழங்கி இருக்கலாம். ஆனால், உங்களுடன் இப்படி அமர்ந்து பேச முடியாது, அங்கு வந்தால் நெரிசல் ஏற்படும். உங்கள் அனைவரிடமும் சிரமம் இல்லாமல் பேச முடியாது. நேரம் செலவிட முடியாது. நேரில் வந்து நிவாரணம் வழங்கவில்லை என்று தவறாக எடுத்துக்கொள்ள வேண்டாம்" என விஜய் விளக்கம் அளித்ததாக கூறப்படுகிறது.