நல்லதாக இருந்தாலும் கெட்டதாக இருந்தாலும் தமிழகத்தை இந்த 2 கட்சிகள்தான் ஆட்சி செய்ய வேண்டும் - தமிமுன் அன்சாரி
புயல் பாதிப்புகளை ஒன்றிய அரசு கருத்து வேறுபாடு காட்டாமல் மக்களுடைய துயரங்களை புரிந்து கொண்டு மாநில அரசுடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என மஜக பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.
மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் அருகே வானாதிராஜபுரம் பகுதியில் நடைபெற்ற மனிதநேய ஜனநாயக கட்சி நிர்வாகியின் இல்லத் திருமண விழாவில் மனிதநேய ஜனநாயக கட்சி பொதுச் செயலாளர் தமிமுன் அன்சாரி பங்கேற்று மணமக்களுக்கு வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டார். முன்னதாக ஏராளமான நிர்வாகிகள் ஒன்றிணைந்து பொதுச் செயலாளருக்கு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: இந்த புயல், மழைகளுக்கு இடையே தமிழக முதலமைச்சர் சுறுசுறுப்பாக பணியாற்றி வருவதை பாராட்டுவதாகவும், பெருமழையின்போது பொதுமக்கள் இடையே வரும் கோபம் நியாயமானது, இது போன்ற மக்களுடைய உணர்வுகளையும் தமிழக முதலமைச்சர் புரிந்து கொள்ள வேண்டும். புயல் பாதிப்புகளுக்கு ஒன்றிய அரசு ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கி இருக்கிறது. மேலும் மாற்றான் தாய் மனப்பான்மையோடு செயல்பட கூடாது. இதில் ஒன்றிய அரசு, மாநில அரசு என்ற கருத்து வேறுபாடு காட்டாமல் மக்களுடைய துயரங்களை புரிந்து கொண்டு இணைந்து பணியாற்ற வேண்டும்.
Ethirneechal: தர்ம அடி வாங்கிய கதிர்.. நந்தினி எடுத்த அதிரடி முடிவு.. பரபரப்பான எதிர்நீச்சல் ப்ரோமா!
தமிழக அரசு அறிவித்த 6000 ரூபாய் நிவாரண தொகையை வரவேற்பதாகவும், அரசை குறை கூறிக்கொண்டே இருக்கக் கூடாது, இதுவரை கொடுக்கப்பட்ட நிதியில் இது அதிகமாக இருப்பதாகவும் கூறினார். மேலும் 30 ஆண்டுகளாக சென்னையில் விரிவாக்கம் என்ற பெயரில் ஆக்கிரமிப்புகள் நடைபெற்றுள்ளது. இதற்கு அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் அதிகாரிகள் தான் காரணம் என்றும் விமர்சித்தார். மனித நேய ஜனநாயக கட்சி கூட்டணி குறித்து டிசம்பர் 21-ஆம் தேதி ஈரோட்டில் நடைபெறும் தலைமை செயற்குழு கூட்டத்தில் முடிவு எடுக்கப்படும் என தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் அனைவரும் ஒற்றுமையாக இருப்பதாகவும் , இதனை வட இந்திய அரசியலை கொண்ட பாரதிய ஜனதா கட்சி கெடுக்க நினைப்பதாக குற்றம் சாட்டினார். பாரதிய ஜனதா கட்சியில் இருந்து அதிமுக வெளியேறியது நல்ல விஷயம் தான் என்றார். நல்லதாக இருந்தாலும் கெட்டதாக இருந்தாலும் தமிழகத்தை அதிமுக- திமுக இந்த இரண்டு கட்சிகள் ஆள வேண்டும். அடுத்த 25 ஆண்டுகளுக்கு தமிழக அரசியல், சண்டை , பங்கு என அனைத்தும் இவர்கள் இருவர் கட்டுப்பாட்டில் தான் இருக்க வேண்டும் என்றும் அதுதான் தமிழ்நாட்டிற்கு நல்லது என்றார்.