Fathima Vijay Antony: "நீ இல்லை என்பதை நம்ப முடியவில்லை.." மகளை நினைத்து சோகத்தில் விஜய் ஆண்டனி மனைவி!
Vijay Antony Wife : மகளின் இழப்பை தாங்க முடியாமல் தவிக்கும் விஜய் ஆண்டனி மனைவி, மகள் மீராவை நினைத்து உருக்கமான போஸ்ட் ஒன்றை பகிர்ந்துள்ளார்.
பிரபல நடிகரும் இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி மிகவும் பிஸியாக படங்களில் நடித்து வரும் வேளையில் அவருடைய குடும்பத்தில் ஏற்பட்ட துயரமான சம்பவம் ஒன்று அவர்களின் ஒட்டுமொத்த குடும்பத்தையும் புரட்டி போட்டுவிட்டது.
விஜய் ஆண்டனி மகள் உயிரிழப்பு:
கடந்த செப்டம்பர் மாதம் விஜய் ஆண்டனியின் 16 வயதான மூத்த மகள் மீரா திடீரென தற்கொலை செய்து கொண்டு தூக்கில் தொங்கிய நிலையில் ஆழ்வார்பேட்டையில் டிடிகே சாலையில் உள்ள அவர்களின் வீட்டில் காணப்பட்டார். கடந்த சில நாட்களாக அவர் மன அழுத்தத்தில் இருந்து தான் மீராவின் தற்கொலைக்கான காரணமாக சொல்லப்பட்டது.
அன்பாய் ஆசையை வளர்த்த மகளை பறிகொடுத்த விஜய் ஆண்டனியும் அவரது மனைவியும் இன்னும் அந்த சோகத்தில் இருந்து மீள முடியாமல் தவிக்கிறார்கள். மகளின் இறப்புக்கு பின்னர் தன்னுடைய மனநிலை மாற்றத்திற்காகவும், தயாரிப்பாளர்கள் நஷ்டமடைய கூடாது என்ற காரணத்திற்காகவும் விஜய் ஆண்டனி தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார். மேலும் மகளின் பெயரில் பல நல்ல காரியங்களை இனி செய்யப்போவதாக சமூக வலைத்தளங்களில் தெரிவித்து இருந்தார்.
சோகத்தில் விஜய் ஆண்டனி மனைவி:
விஜய் ஆண்டனியின் மனைவி பாத்திமா, மகள் மீரா இல்லாததை இன்னும் ஏற்றுக்கொள்ள முடியாமல் மனவேதனையில் தவிக்கிறார். மகளின் நினைவாக தனது சோசியல் மீடியா பக்கத்தில் போஸ்ட்களை பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் மகளுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை பகிர்ந்து உருக்கமான குறிப்பு ஒன்றையும் தற்போது போஸ்ட் செய்துள்ளார்.
"மீரா தங்கமே, உங்களின் பியானோ நீங்கள் தொட வேண்டும் என்பதற்காக ஏங்குகிறது. நாங்கள் அனைவரும் நீ இன்னும் இல்லை என்பதை நம்ப முடியாமல் தவிக்கிறோம். சீக்கிரம் கிளம்பி விட்டாயே பேபி. இந்த உலகம் உனக்கானது அல்ல. வாழ்க்கையும் மரணத்திற்கும் இடையில் இருக்கும் அர்த்தத்தை அம்மாவால் இன்னும் புரிந்து கொள்ள முடியவில்லை. நான் உன்னை சந்திக்கும் வரையில் நன்றாக சாப்பிட்டு மகிழ்ச்சியாக இரு. லாரா உன்னை ரொம்பவும் மிஸ் செய்கிறாள்" என மிகுந்த மன வலியுடன் குறிப்பை பகிர்ந்துள்ளார் விஜய் ஆண்டனியின் மனைவி பாத்திமா.